Published:Updated:

எதிர்கால விமானியின் கனவை மீட்டுத் தர உதவுவோம்!! #Save_Ellavarasan

Sponsored content

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒட்டுமொத்தமாக பதினெட்டு லட்சம் ருபாய் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edudharma
Edudharma

இந்தியாவைப் பொறுத்தவரை கல்லீரல் செயலிழப்பினால் பரிதாபமாக உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை இன்றும் ஏராளம். பெரியவர்கள் - குழந்தைகள் வித்தியாசமின்றி கல்லீரல் நோய் உயிர்களைக் காவு வாங்கக் கூடியது. இந்தியாவில் குழந்தைகள் மரணத்துக்கு 49% கல்லீரல் செயலிழப்பு காரணமாக இருக்கிறது. இதில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் பைலியரி அட்ரெஸியா (Biliary Atresia) என்னும் அரியவகை கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு செத்து மடிகின்றனர். கல்லீரலுக்குள் உள்ள செல்கள் 'பைல்' என்னும் திரவத்தை சுரக்கின்றன. கொழுப்பை ஜீரணிக்கவும் கழிவுப் பொருட்களை கல்லீரலில் இருந்து வெளியேற்றி குடலுக்கு எடுத்துச் செல்லவும் பைல் உதவுகிறது.

Edudharma
Edudharma

பைலியரி அட்ரெஸியாவால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு பைல் திரவம் கல்லீரலுக்குள்ளேயே அடைப்பட்டுக்கொள்வதால் கல்லீரல் பாதிப்படைகிறது. சில நாட்களில் அது கல்லீரலை செயலிழக்கவும் வைத்துவிடுவது துரதிர்ஷ்டம். பைலியரி அட்ரெஸியா நோய் குழந்தை பிறந்து நான்கில் இருந்து எட்டு வாரங்களில் கண்டறியப்படுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மஞ்சள்காமாலை எற்படும், அடர் நிற சிறுநீர், வெளிர்நிற மலம், வீங்கும் வயிறு, இளைக்கும் உடல், நோய் எதிர்ப்பு மண்டல பிரச்னைகள், மரபணு மாற்றம் போன்றவை இந்த நோய்க்கான அறிகுறிகளாக உள்ளன.

சிறுவனை வதைக்கும் நோய்!

பைலியரி அட்ரெஸியா நோயால்தான் ஆறு வயது இளவரசன் பாதிக்கப்பட்டுள்ளான். பிறப்பில் இருந்தே இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் இளவரசன் தற்போது தொடர்ந்து மருத்துவ சிகிச்சையினைப் பெற்று வருகிறான். வானத்தில் விமானம் பறக்கும்போதெல்லாம் அதனைப் பார்த்து மகிழ்ச்சி அடையும் அவன் இப்போது மருத்துவமனையின் நான்கு சுவர்களுக்குள் ஒடுங்கியுள்ளான். வளர்ந்து விமானியாக ஆவதையே தனது கனவாகக் கொண்டிருந்தான் இளவரசன்.

அன்றாட வாழ்வை நகர்த்துவதற்கே இளவரசனின் தந்தை உமாபதியின் வருமானம் சரியாக இருக்கிறது. இதற்கு நடுவில் நண்பர்கள், உறவினர்கள் என அனைவரிடமும் கடன் பெற்றுத்தான் இளவரசனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இளவரசனின் உயிரைக் காப்பாற்ற உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒட்டுமொத்தமாக பதினெட்டு லட்சம் ருபாய் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இளவரசனின் பெற்றோர், அன்றாட வாழ்க்கைக்கே பண வசதியில்லாதபோது தங்களது மகனின் உயிரை எப்படிக் காப்பாற்றப்போகிறோம் என்கிற கவலையில் ஒவ்வொரு நாளையும் கடக்கப் போராடி வருகின்றனர். தங்களின் ஏழ்மை எங்கே தங்கள் மகனின் உயிரைப் பறித்துவிடுமோ என்ற அச்சத்தில் கலங்கிப் போயிருக்கிறார்கள். தற்போது அவர்களின் ஒரே ஆதரவு நிதி திரட்டும் நிறுவனமான 'Edudharma'.

ஒன்றுபட்டால்தான் வலிமை அதிகமாகும். அந்த வலிமையைக்காட்ட Edudharma-வுடன் நாம் அனைவரும் இணைந்து இளவரசனுக்கு ஆதரவுக் கரங்களை நீட்டுவோம். நமது சிறு உதவி இளவரசனின் குடும்பத்தாருக்கு பேருதவியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை என்பதால் நம்மைப் போன்ற பலரையும் உதவி செய்ய அழைப்போம். இளவரசனுக்கு உதவி செய்ய நினைக்கும் அனைத்து நல்லுள்ளங்களும் https://www.edudharma.com/fundraiser/help-ellavarsan-recover-from-biliary-atresia இந்த லிங்கிற்குச் சென்று உதவலாம்!

Edudharma
Edudharma

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Edudharma-வின் விளம்பரதாரர் பகுதியாகும். எனவே, இதில் கூறப்பட்டுள்ள செய்திகளின் உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பாகாது. இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம் என்பதால், நன்கொடை செய்வதற்கு முன்னர் இச்செய்தியின் உண்மைத்தன்மையை சுயாதீனமாக ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளுமாறு வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.