Published:Updated:

அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை! சமாளிப்பது எப்படி?

Exclusive Deals

பழைய நகைகளை எக்ஸ்சேஞ் செய்யும்போதும், ஷோரூம்களில் நாம் சந்திக்கும் பிரதான பிரச்னை அதிகப்படியான செய்கூலி மற்றும் சேதாரம். இதைக் குறைத்து, உற்பத்தி விலையில்

தங்கம் விலை
தங்கம் விலை

சேமிப்புகளிலேயே மிகச்சிறந்தது தங்கத்தைச் சேர்த்து வைப்பதுதான்' என்கிற மனநிலையை சமீபத்திய தங்கத்தின் விலை உயர்வு மக்களிடையே ஏற்படுத்திவிட்டது. பெட்ரோல், டீசல் விலையைப் போல நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே வருகிறது. அதுவும் கடந்த சில நாட்களில் மின்னல் வேகத்தில் எகிறிய தங்கத்தின் விலையைப் பார்த்து மக்கள் ஆடிப்போய் உள்ளனர் என்றே சொல்லலாம். இந்நிலையில் தங்கத்தின் விலை இப்போதைக்கு குறையாது என நிதி நிபுணர்கள் அறிவித்து வருகின்றனர். இதனால் தங்கத்தை வாங்க இருந்தவர்களும், எதிர்காலத்தில் விலை குறையும் என நம்பிக் காத்திருந்தவர்களும் மிகுந்த ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளனர்.

அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை! சமாளிப்பது எப்படி?

'ஆடி மாதம் முடிந்து ஆவணி பிறந்தால் நல்ல வழி பிறக்கும்' என்பார்கள். அதனால்தான் என்னவோ ஆவணி பிறந்துவிட்டாலே விழாக்களும் பண்டிகைகளும் களைகட்டத் துவங்கிவிடும். அதுவும் சுப காரியங்களான திருமண விழாக்கள் பெரும்பாலும் நடக்கும் நான்கு மாதங்களில் ஒன்று ஆவணி. பெருவாரியான திருமண நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கும் ஆவணி மாதம் துவங்க இருப்பதால் தங்க நகைகள் வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தங்கத்தின் விலையோ தகதகவென ஏறிப்போய் இருப்பதால் திருமணத்துக்காக தங்கம் வாங்க இருப்பவர்களின் நிலைமை சங்கடத்துள்ளாகியுள்ளது.

தங்க விலை உயர்வைச் சமாளிக்கலாம்!

தங்கத்தின் விலை எப்போது குறைந்து காணப்படுகிறதோ, அப்போது நகை வாங்குவதை நடைமுறையாக பலர் வைத்திருக்கிறோம். இருப்பினும் செலவுகளைக் கட்டுப்படுத்த தங்கநகைகளை சில்லறை வியாபாரிகளிடம் பெறாமல், மொத்த நகை வியாபாரிகளிடம் இருந்து பெறுவது புத்திசாலித்தனம்! மொத்த நகை வியாபாரிகளிடம் செய்கூலி, சேதார விலை போன்றவை மிகமிகக் குறைவு. இவ்வாறான சலுகைகளை நகை தயாரிப்பாளரும், மொத்த நகை விற்பனையாளருமான 'பிரில்லியண்ட் கட்' நிறுவனம் தந்து வருகிறது.

'பிரில்லியண்ட் கட்'-டின் சிறப்பம்சங்கள்!

அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை! சமாளிப்பது எப்படி?

"தற்போதைக்கு சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மற்ற முக்கிய நகரங்களைக் காட்டிலும் மிகவும் அதிகம்" என்கிறார் பிரில்லியன்ட் கட் நிறுவனர் ராகுல் சோவாத்தியா. "புது நகை வாங்கும்போதும், பழைய நகைகளை எக்ஸ்சேஞ் செய்யும்போதும், ஷோரூம்களில் நாம் சந்திக்கும் பிரதான பிரச்னை அதிகப்படியான செய்கூலி மற்றும் சேதாரம். இதைக் குறைத்து, உற்பத்தி விலையில் உயர்தர தங்கம் மற்றும் வைர நகைகளை வழங்குகிறது எங்களின் 'பிரில்லியண்ட் கட்' நிறுவனம்".

நகைகளை மெஷின்களில் உற்பத்தி செய்து தருவதால், பிரில்லியன்ட் கட்-ல் 30% வரை சேதாரம் குறைவதால் பணமும் மிச்சப்படுகிறது. கைவினை நகைகளைவிட 50% லேசானதாகவும், வலிமையானதாகவும் பிரில்லியண்ட் கட் நகைகள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் நோய்களை உருவாக்கும் கேடிஎம் (KDM) துளியும் இல்லாமல் பிரில்லியண்ட் கட் நகைகள் தயாரிக்கப்படுகின்றன. இவை BIS ஹால்மார்க் நகைகள் என்பதால் எவ்வித தயக்கமும் இன்றி நகைகளை வாங்கலாம்!

அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை! சமாளிப்பது எப்படி?

பிரில்லியண்ட் கட்-ல் வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய டிசைன்களை ஆர்டர் செய்தும் பெற்றுக்கொள்ளலாம். மெஷின்களில் தயாரிக்கப்படும் நகைகளில் குறையேதும் இருப்பதில்லை என்பதால் மனநிறைவு கிடைக்கிறது. பழைய நகைகளைக் கொடுத்து புதிய நகைகளை வாங்கும்போது, பழைய நகைகளை அன்றைய தினத்திற்குரிய விலையிலேயே பிரில்லியண்ட் கட் பெற்றுக்கொள்ளும் என்பதால், வாடிக்கையாளர்களுக்கு அமோக லாபம்! இப்போது தங்க சேமிப்புத் திட்டத்தையும் பிரில்லியண்ட் கட் அறிமுகப்படுத்தியுள்ளது. 1-3 வருடங்களுக்கு கிட்டத்தட்ட 21% வட்டியை இதனால் லாபமாக பெறமுடிவது சிறப்பு.

ஆவணி மாதம் நடைபெறும் திருமணத்துக்காக நகை வாங்க இருப்போர், ஸ்மார்ட்டாக பிரில்லியன்ட் கட் போன்ற மொத்த நகை வியாபாரிகளை அணுகுவதால் பல ஆயிரம் ரூபாய் வரை பணத்தை மிச்சப்படுத்த முடியும்! விகடன் வாசகர்களுக்கு, செய்கூலி & சேதாரத் தொகையில் சிறப்புச் சலுகையை பிரில்லியன்ட் கட் வழங்குகிறது... மேலும் விவரங்களுக்கு +91 98402 29990