Published:Updated:

வாழ்வின் வளர்ச்சிக்கு நேர்மையும், மனிதநேயமும் அவசியம்!

Sponsored content

ஆண்டுதோறும் தொழிலில் வளர்ச்சியைப் பதிவு செய்யும் நிப்பானின் டீலர்களுக்கு விருந்தளிக்கும் விழா வெளிநாடுகளில் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் விருது விழாவில் கலந்துகொண்டு விருதுகளைப் பெறுவது நாங்கள் அடுத்தகட்டத்திற்கு செல்வதற்கான ஊக்கத்தைத் தந்தது

நிப்பான்
நிப்பான்

குழந்தையை வளர்த்தெடுப்பது போலத்தான் ஒரு தொழிலை வளர்த்தெடுப்பதும். தொழில் தொடங்குவதையே பலர் கடினமான விஷயமாக கருதுகையில் மூன்று தலைமுறைகளைத் தாண்டி நான்காவது தலைமுறையாக சொந்தத் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர் இக்குடும்பத்தினர். வியாபாரம் மட்டுமின்றி சமூகநலத்துடன் செயல்பட்டும் வரும் ஒசூரின் 'பெரியதம்பி செட்டியார் ஃபர்ம்' நிறுவனரும், நிப்பான் பெயின்ட் டீலருமான தாமஸ், தனது வாழ்க்கைப் பயணத்தையும் அனுபவத்தையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

நான்காம் தலைமுறை தொழிலதிபர்...

நிப்பான்
நிப்பான்

"எங்களது பூர்விகம் கேரளா. எங்கள் பெற்றோருக்கு பத்து பிள்ளைகள், அதில் நான்தான் (தாமஸ்) கடைசி. எங்களின் தந்தை, தாத்தா மற்றும் அவரது தந்தை என அனைவரும் மர ஓடு வியாபாரம் செய்துவந்தனர். என்னுடன் பிறந்தவர்கள் அனைவரும் கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் என வெவ்வேறு இடத்தில் தொழில் செய்து வருகின்றனர். எங்களின் பாரம்பர்ய தொழிலை விட்டுவிடக் கூடாது என்பதற்காக ஓசூரில் 1993ம் ஆண்டு 'பெரியதம்பி செட்டியார் ஃபர்ம்'-ஐ நிறுவினேன். என் தந்தையின் வழியைக் கடைப்பிடித்தாலும் தொழிலை வளர்க்க வெறும் மர ஓடு மட்டுமின்றி டைல்ஸ், சிமெண்ட், கம்பி, பெயின்ட் போன்ற பொருட்களையும் விற்பனை செய்ய ஆரம்பித்தேன்.

பெயின்ட்டைப் பொறுத்தவரை பல பிராண்ட்களை விற்பனை செய்து வந்தேன்,அப்போதுதான் ஜப்பானிய நிறுவனமான நிப்பான் பெயின்ட் நிறுவனம் என்னை அணுகினார்கள். பொதுவாக எனக்கு பொய் சொல்வதென்பது பிடிக்காது. பொய்யான வாக்குறுதிகளை தரமாட்டேன். அதனால் எப்போதும் விற்பனை செய்யும் தயாரிப்புகளை முதலில் நாங்கள் சோதித்துப் பார்ப்போம். அவ்வாறு நிப்பான் பெயின்ட்டையும் எங்களது இல்லத்திற்கு அடித்து சோதித்துப் பார்த்த பிறகுதான் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய ஆரம்பித்தோம்.

கடைக்கு வரும் ஒவ்வொருவரும் எங்களின் வார்த்தைமீது நம்பிக்கை வைத்து இப்பிராண்டை வாங்கிச் சென்றனர். இன்றைய மார்க்கெட்டிங் வளர்ச்சி, மக்களிடம் இந்தப் பிராண்டை மிகவும் பிரபலமடையச் செய்துள்ளது. மக்களிடம் எப்படி இதைக் கொண்டுபோய் சேர்ப்பது என்பது தெரியாமல் ஆரம்ப காலங்களில் பிராண்டின் வளர்ச்சிக்காக நிறைய போராடினோம். ஆண்டுகள் சில கடந்தே இந்தப் பிராண்ட் மக்கள் மத்தியில் நிலைத்து நின்றது. பிறகு அவர்களாகவே கேட்டுவாங்கிச் செல்லும் அளவிற்கு இத்தயாரிப்பின் மவுசு கூடியது.

நிப்பானுடனான உறவு!

சுமார் இருபத்தி ஆறு ஆண்டுகளாக எங்கள் நிறுவனத்தை நடத்தி வருகிறோம். இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிதில் இருந்தே நிப்பான் பெயின்ட் எங்கள் நிறுவனத்தின் ஓர் அங்கமாக செயல்பட்டு வருகிறது. எங்களின் உறவு வளர்ந்ததைப் போலவே, வருடாவருடம் விற்பனையும் வளர்ச்சி அடைந்துகொண்டே வருகிறது. நிப்பான் பெயின்ட் டீலர்களுக்கு விதிக்கும் விதிமுறைகள், நிபந்தனைகள், அணுகுமுறை என எல்லாமும் எங்களுக்கு அனுகூலமாக இருப்பதால்தான் நிப்பானுடன் இவ்வளவு தூரம் பயணம் செய்ய முடிந்தது.

வாழ்வின் வளர்ச்சிக்கு நேர்மையும், மனிதநேயமும் அவசியம்!

சிக்கலான தருணங்களில் அவர்களின் ஊக்குவிப்பும், பின்னடைவுகளை சரிக்கட்ட அவர்கள் எடுக்கும் உடனடி நடவடிக்கைகளும், எந்தச் சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழக்காமல் நாங்கள் செயல்பட உதவின. ஆண்டுதோறும் தொழிலில் வளர்ச்சியைப் பதிவு செய்யும் நிப்பானின் டீலர்களுக்கு விருந்தளிக்கும் விழா வெளிநாடுகளில் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் விருது விழாவில் கலந்துகொண்டு விருதுகளைப் பெறுவது நாங்கள் அடுத்தகட்டத்திற்கு செல்வதற்கான ஊக்கத்தைத் தந்தது.

தரமான தயாரிப்பு...

நிப்பான் பெயின்டில் அவர்கள் உபயோகிக்கும் வாசனைத் திரவியங்கள் தனித்துவமானவை. அதிக நெடியில்லாத தன்மை, குறைந்த விஓசி போன்ற அம்சங்களை நிப்பான் பெயின்ட் கொண்டுள்ளது. இது யார் உடல்நலத்திற்கும் தீங்கு விளைவிக்காதது. சுவரில் கறை படிந்தால் சுத்தம் செய்ய எளிதாகவும், நீண்ட ஆண்டுகள் உழைக்கக்கூடியதாகவும் உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு நிப்பானின் இவ்வாறான சிறப்பம்சங்களை எடுத்துக்கூறி தயாரிப்புகளை விற்பனை செய்கிறோம். எங்களின் அனுபவமிக்க பெயின்ட்டர்கள், இன்ஜினியர்கள் சிறந்த முறையில் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர். காப்பீடு, ஊக்கத்தொகை, இஎஸ்ஐ, போனஸ் போன்றவற்றை வழங்கி எங்களிடம் பணிபுரியும் ஊழியர்களின் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்கிறோம்.

வாழ்வின் வளர்ச்சிக்கு நேர்மையும், மனிதநேயமும் அவசியம்!

மனிதனில் இறைவனைத் தேடு!

"பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நிப்பான் நிறுவனம் Nசக்தி திட்டத்தை செயல்படுத்தி வருவது பாராட்டுக்குரியது. நிப்பான் பெண்களுக்கு உதவுவது போல, எங்கள் தரப்பில் பல திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளோம். எங்களது பெற்றோர் பெயரில் தொண்டு நிறுவனம் அமைத்து பலருக்கு உதவிகள் புரிந்து வருகிறோம். இது தவிர தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைத்து ஏரி, கால்வாய்களைத் தூர்வாரி அருகில் மரக்கன்றுகளை நட்டு வருகிறோம். எங்கள் கடைகளிலும் பொருள் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு மரம் நட விதைகளைக் கொடுக்கிறோம். மழை நீரை சேமிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். அதனை எளிதாகச் செய்ய ஒவ்வொரு பகுதிக்கும் சென்று கற்றுக்கொடுக்கிறோம்."

பெரும்பாலும் பூமியில் ஏற்படக்கூடிய அழிவுக்கு மக்களாகிய நாம்தான் காரணமாக இருக்கிறோம். மனிதநேயம் இல்லாமல் சுயநலமாக உலகம் மாறிவருகிறது. ஆகையால் "மனிதம் தான் புனிதம், மனிதனில் இறைவனைத் தேடு" எனும் கொள்கைப்படி சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார் தாமஸ்.

நிப்பான் பெயின்ட் பற்றி...

வீட்டு உபயோகம், உள்ளலங்காரம், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு என அனைத்துவகையான வண்ணப்பூச்சுகளையும் நிப்பான் நிறுவனம் வழங்கிவருகிறது. நிப்பானின் வண்ணப்பூச்சுகள் நம் ஒப்பனைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமின்றி உயர்தர ஜப்பானிய தொழில்நுட்பத்தின் மூலம் பல புதுமைகளையும் கொண்டுவந்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பெயிண்ட் மற்றும் பிற தயாரிப்புகளை வழங்குவதில் அதிக கவனம் செலுத்துகிறது நிப்பான் பெயிண்ட் நிறுவனம்.