Published:Updated:

ஆன்லைன் மேட்ரிமோனி தளங்களைக் கையாளுவது எப்படி? விவரிக்கிறது #TamilMatrimony

தமிழ் மேட்ரிமோனி
தமிழ் மேட்ரிமோனி

யாருக்கும் பணம் செலுத்த வேண்டாம் : எந்தச் சூழ்நிலையிலும் ஒருவருக்கு, அவர் முகம் தெரிந்த வரன் ஆயினும், பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்துவிட வேண்டாம்.

சொந்தம், பந்தம் எனப் பெரிய பட்டாளத்துடன் பெண் பார்க்கச் சென்ற காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இணையத்தில் இணையைத் தேடிப் பிடிப்பதுதான் இப்போதைய ட்ரெண்ட். கிராமம், நகரம் எனப் பாகுபாடு இல்லாமல் அனைத்து மக்களும் இணையதளங்களில் வரன் பார்ப்பதை அதிகமாக விரும்புகின்றனர். இதன் விளைவாக, மேட்ரிமோனி தளங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துவிட்டன.

மேட்ரிமோனி தளங்களில் தங்களின் இணையைத் தேடுபவர்களின் எண்ணிக்கை வருடாவருடம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேட்ரிமோனிகளை நம்பி, நமது சொந்தத் தகவல்களைக் கொடுக்கிறோம், அவை நம்பகமான கைகளுக்குத்தான் செல்கின்றன என்பதை எப்படி உறுதி செய்வது? நம் சுயவிவரங்களைப் பாதுக்காக்கவும், பாதுகாப்பான முறைப்படி தங்களுக்கான இணையைத் தேர்வு செய்வது எப்படி எனவும் வழிகாட்டுகிறது தமிழ் மேட்ரிமோனி.

ஆன்லைன் மேட்ரிமோனி தளங்களைக் கையாளுவது எப்படி? விவரிக்கிறது #TamilMatrimony

இணைய மேட்ரிமோனிகளைக் கையாளுவது எப்படி?

பயனாளர் பெயர் & கடவுச்சொல்லில் கவனம்: 'எப்போதும் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் பாதுக்காப்பாக இருக்க வேண்டும். கடவுச்சொல் எப்போதும் எழுத்துகள், எண்கள் மற்றும் குறியீடுகள் கலந்த கலவையாக, பிறர் கணிப்பதற்கு சிரமமானதாக இருக்க வேண்டும்; அடிக்கடி கடவுச்சொல்லை மாற்ற வேண்டும்' என அறிவுறுத்துகிறது தமிழ் மேட்ரிமோனி.

இணைய முகவரியில் கவனம் : நம்பகமான சேவையை அணுக, பிரவுசரில் நம்பகமான மேட்ரிமோனி தளத்தின் இணைய முகவரியை டைப் செய்து, அந்த இணையதளத்தை நாடவும். இதனால் உங்களின் விவரங்கள் பாதுகாப்புடன் இருக்கும். பிற நம்பகமற்ற தளங்களில் உள்ள மேட்ரிமோனி தொடர்பான லிங்குகளைக் க்ளிக் செய்வதைத் தவிர்க்கவும்.

பின்னணி சோதனைகள் முக்கியம் : வரனை நேரில் பார்த்த பிறகே திருமணம் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள், குறிப்பாக ஆண்/பெண் இருவீட்டுப் பெற்றோர்கள்/உறவினர்கள் நேரில் பார்த்து முடிவு செய்வது நல்லது. வரன் பணிபுரியும் இடத்தைப் பார்வையிட வேண்டும். அவரின் தனிப்பட்ட விவரங்கள் முழுவதையும் முறையாக பரிசோதிக்க வேண்டும். அவர்களின் சோசியல் மீடியா புரொஃபைல்களையும் காண்பது முக்கியம். ஒருவேளை ஒரு நபர் தன்னுடைய பணிபுரியும் இடத்தை அல்லது பணியின் விவரங்களை சொல்வதற்கோ அல்லது பெற்றோருடன் சேர்ந்து தன்னைப் பார்ப்பதற்கோ விருப்பம் காட்டாமல் தயங்கினால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறான நபர்களிடம் திருமணம் குறித்தோ அல்லது பொதுவாகவோ பேசுவதைத் தவிர்க்கவும்.

பொது இடங்களில் பாதுகாப்பு : வரனை வெளியில் பார்க்கச் செல்லும்போது பாதுகாப்பான பொது இடங்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் பிரச்னை என்றாலும் அதனைத் தவிர்க்க முடியும். எப்போதும், வரனைப் பார்க்கச் செல்வதற்கு முன், அதுபற்றி உங்களின் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுக்கு தெரிவிப்பது அவசியம்.

யாருக்கும் பணம் செலுத்த வேண்டாம் : எந்தச் சூழ்நிலையிலும் ஒருவருக்கு, அவர் முகம் தெரிந்த வரன் ஆயினும், பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்துவிட வேண்டாம். பணம் கேட்பவர்களிடம் எச்சரிக்கையாய் இருப்பது அவசியம். அவர்களிடம் வரும் அழைப்புகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இவ்வாறான பணம் கேட்கும் ஆசாமிகளின் புரொஃபைல்களை அப்போதே ரிப்போர்ட் செய்ய மறக்க வேண்டாம். பண மோசடிகளைத் தவிர்க்க அது உதவும்.

தமிழ் மேட்ரிமோனி
தமிழ் மேட்ரிமோனி

தமிழ் மேட்ரிமோனி :

திருமண வரன் தகவல் அளிப்பதில் முன்னிலை வகிக்கும், சென்னையைச் சேர்ந்த 'பாரத் மேட்ரிமோனி' நிறுவனத்தின் ஓர் அங்கம்தான் 'தமிழ் மேட்ரிமோனி'. பெண்களும் ஆண்களும்

தமிழ் மேட்ரிமோனியில் நம்பிக்கையுடன் தங்களின் தகவல்களைப் பதிவு செய்யலாம். ஏனெனில் உங்களின் புகைப்படங்கள் வாட்டர்மார்க்குடனும், தனிப்பட்ட விவரங்கள் என்க்ரிப்ட் செய்யப்பட்டும் பாதுகாக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் உங்களது புகைப்படத்தை விருப்பம்போல் மறைத்தும் வைக்கலாம் அல்லது விரும்பிய புரொஃபைலுக்கு மட்டும் தெரியப்படுத்தலாம். இதேபோல் உங்களின் செல்போன் நம்பரையும் மறைத்து வைக்க முடியும். உங்களுக்கு விருப்பம் தெரிவித்த புரொஃபைலுக்கு மட்டும் நம்பரைத் தெரியப்படுத்தும் வசதியும் தமிழ் மேட்ரிமோனி தளத்தில் உள்ளது.

பெண்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்தும் கொடுத்து, தமிழ் மேட்ரிமோனி செக்யூர் கனெக்ட் (SecureConnect) எனும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் சோதனை செய்யப்பட்ட பிரீமியம் மெம்பெர்ஷிப் வைத்துள்ள ஆண்கள் புரொஃபைலில் இருந்துமட்டுமே அழைப்புகள் வரும். பிரீமியம் மெம்பெர்களுக்கும் பெண் வரன்களின் எண்கள் நேரடியாக கொடுக்கப்படுவதில்லை என்பதால் பெண்களின் தனிப்பட்ட விவரங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இன்னும் பலவகையான பாதுகாப்பு அம்சங்களுடன் இயங்கி வரும் தமிழ் மேட்ரிமோனியில் உங்களின் வாழ்க்கைத் துணையை நம்பிக்கையுடன் தேர்ந்தெடுத்து மகிழ்வான வாழ்வைப் பெறுங்கள்!

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கைக் க்ளிக் https://www.vikatan.com/special/tamil-matrimony செய்து உங்களின் விவரங்களைப் பதிவு செய்திடுங்கள்!

அடுத்த கட்டுரைக்கு