Published:Updated:

"பிராக்களை பரமாரிப்பது எப்படி?" #Ladies_Special

Shyaway உள்ளாடைகள்

பிராவை சிறந்த முறையில் பராமரித்தால் அதன் ஆயுள் நீண்ட நாட்கள் வரும். பிராவை வாங்கியதும் போட்டுப்பார்த்துவிட்டு, ஓரம்கட்டி வைக்காமல்

"பிராக்களை பரமாரிப்பது எப்படி?" #Ladies_Special

பிராவை சிறந்த முறையில் பராமரித்தால் அதன் ஆயுள் நீண்ட நாட்கள் வரும். பிராவை வாங்கியதும் போட்டுப்பார்த்துவிட்டு, ஓரம்கட்டி வைக்காமல்

Published:Updated:
Shyaway உள்ளாடைகள்

உள்ளாடை' என்பது உடை சம்மந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல, நம் உடலுக்கு நாம் தரும் முக்கியத்துவமும் கூட. உள்ளாடை தரும் நம்பிக்கையில்தான் பெண்களின் மேலாடை ஜொலிக்கும். எப்போதும் நம் உடைக்கேற்ற உள்ளாடைகளை உபயோகித்தால் வெளித்தோற்றம் கூடுதல் சிறப்பாக அமையும். எனவே, உள்ளாடைகள் வாங்கும்போது நம் உடல் வாகிற்கு பொருந்தக்கூடிய உள்ளாடையைப் போட்டுப்பார்த்து வாங்குவது நல்லது. பொதுவாக பெண்கள் உடலின் சுற்றளவுக்கான அடிப்படையிலேயே பிராவை வாங்குவர். ஆனால் அதனுடன் சேர்த்து தங்களது மார்பகங்களின் அளவைக் குறிக்கும் கப் சைஸ்களைக்கொண்டு வாங்குவதுதான் சரியாக இருக்கும். ஒவ்வொரு பெண்ணின் வாழ்நாளிலும் அவர்களது மார்பக அளவு மாற்றங்களைச் சந்திக்கும். அதனால் அதற்கேற்றார் போன்று பிராவின் அளவை அவ்வப்போது மாற்றிவர அலட்சியம் காட்டக்கூடாது.

"பிராக்களை பரமாரிப்பது எப்படி?" #Ladies_Special

உள்ளாடைகள் சுத்தமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். இல்லையெனில் நமைச்சல், ஒவ்வாமை, வலி போன்ற உடல்ரீதியான பிரச்னைகள் வரக்கூடும். பெரும்பாலும் மற்ற துணிகளை துவைப்பதுபோல உள்ளாடையையும் துவைக்கக்கூடாது. உள்ளாடை அதன் தன்மையை இழக்கக்கூடாது என்றால் அதனைப் பராமரிக்க சிறிது மெனக்கெடல் அவசியமாகும்.

பிராவைத் துவைக்க சிறந்த வழி!

பிராவை சிறந்த முறையில் பராமரித்தால் அதன் ஆயுள் நீண்ட நாட்கள் வரும். பிராவை வாங்கியதும் போட்டுப்பார்த்துவிட்டு, ஓரம்கட்டி வைக்காமல், அதில் எழுதப்பட்டிருக்கும் பராமரிப்பு குறிப்பைப் படிப்பது மிகவும் முக்கியம். மிகவும் குறைந்தளவு டிடர்ஜென்ட்டைக் கொண்டு கைகளால் இரண்டு நிமிடங்கள் துவைத்தால் போதும். கையால் துவைக்க நேரமில்லை என்றால், வாஷிங் மெஷினில் உள்ளாடைகளைப் போடுவதற்கான பையைக்கொண்டு துவைக்கலாம். இவ்வாறு துவைக்கும்போது லேசாக இருக்கும் பிராவின் துணி மற்றும் எலாஸ்டிக்கின் தன்மை மாறாமல் இருக்கும். அதன் மூலம் உங்கள் பிராவின் ஆயுளை உறுதிப்படுத்தலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிராவை இவ்வாறு உலர்த்தலாம்!

அடித்துத் துவைப்பது, பிரஷ் வைத்து தேய்ப்பது, கசக்குவது போன்ற அதிரடிகளைக் காட்டுவது பிராவின் எலாஸ்டிக் மற்றும் துணியை பாழாக்கும். தவிர, பிராவின் அளவும் அதன் தன்மையும் மாறக்கூடும். பிராவை மிகவும் மென்மையாக துவைத்து அதிலிருக்கும் தண்ணீரைப் பிழிய வேண்டும். அதன் பின் இயற்கையான காற்றில் உலர்த்துவது எப்போதும் நல்லது. பிராவின் இருபுறமும் கிளிப் போட்டு உலர்த்தலாம். அதுவும் வெயில் படாமல் சற்று நிழலில் பிராவை உலர்த்தினால், பிராவின் நிறம் மங்காமலும், விரைவில் துணி பாழாகாமலும் இருக்கும்.

"பிராக்களை பரமாரிப்பது எப்படி?" #Ladies_Special

எப்படி மடித்து வைப்பது?

உடைகளை வைக்கவே இடமில்லை உள்ளாடைக்கு எதற்கு என அதை கப் போர்ட் உள்ளே கசக்கித் திணித்து வைப்பது பிராவின் தன்மையை இழக்கச் செய்யும். எப்போதும் பிராவிற்கு ஒரு தனி இடம் கொடுப்பது மிகவும் நல்லது. ஆங்கர் அல்லது கம்பியில் பிராவை மாட்டலாம் அல்லது கப் போர்டில் உள்ள டிராயரில் பிராவை அடுக்கி வைக்கலாம். மடித்து வைப்பதைவிட பிராவை வரிசையாக வைக்கும்போது அதன் அளவும் வடிவமும் மாறாமல் இருக்கும். அதிலும் கப்ஸ் உடைய பிராக்களை சுருக்கி வைப்பதால் கப் சைஸில் மாற்றம் ஏற்படலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ப்போது பிராவை மாற்றலாம்?

பதின் பருவம், பதின் முடிந்த காலம், கர்ப்ப காலம், பால் சுரக்கும் காலம், தாய்ப்பாலூட்டுவதை நிறுத்திய காலம், மெனோபாஸ் காலம் என பெண்களின் வாழ்க்கையில் மார்பகம் பல மாற்றங்களைச் சந்திக்கிறது. அதற்கேற்றார்போல் பிராவையும் மாற்றுவது அவசியமாகும். தவிர, தோள்பட்டையை அழுத்தும் எலாஸ்டிக் கொண்ட பிரா, முதுகில் ஊக்குகள் அழுத்தும் பிராக்களை தூக்கிபோட்டுவிடுவது நல்லது. அதுமட்டுமன்று, தாங்கள் உபயோகிக்கும் உள்ளாடையை 6-9 மாதங்களில் மாற்ற வேண்டியது கட்டாயம்.

"பிராக்களை பரமாரிப்பது எப்படி?" #Ladies_Special

Shyaway உள்ளாடைகள்!

கச்சிதமான அளவு மற்றும் சௌகர்யத்தைத் தாண்டி தரமான பிராவைத் தேர்வு செய்வது சிறப்பு. மேலாடைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதேயளவு முக்கியத்துவத்துவதை உள்ளாடைக்கும் பெண்கள் கொடுக்க வேண்டுமென்கிறது, பெண்கள் உள்ளாடைகள் தயாரிப்பு நிறுவனமான Shyaway. பெண்கள் தங்களது சரியான அளவைக் கேட்டு வாங்குவது அவர்களின் உரிமை என்கிற shyaway தரமிக்க நேர்த்தியான மற்றும் சௌகர்யமான உள்ளாடைகளை வழங்குகிறது. உள்ளாடைகள் மட்டுமின்றி நீச்சல் உடை(Swimwear), இரவு நேர உடைகள் (Sleepwear), ஷேப்வேர் (shapewear), டாப்ஸ், லெக் வேர் (Leg wear), ஆக்ஸசரிஸ் உள்ளிட்டவைகளையும் விற்பனை செய்கிறது. கூச்சத்தை விலக்கி உள்ளாடைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெண்களுக்கான சிறந்த கச்சிதமான உள்ளாடைகளை கொடுப்பதுமே Shyaway-வின் நோக்கமாக இருக்கிறது. பல வகையான தரமான பெண்கள் உள்ளாடைகளை நியாயமான விலையில் விற்பனை செய்து வரும் Shyaway.com தயாரிப்புகளைப் பெற முந்துங்கள்!

வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகையாக 50% வரை தள்ளுபடியை வழங்குகிறது Shyaway.com. ஆஃபரைப் பெறவும் கூடுதல் தகவல்களுக்கும் கீழ்க்கண்ட படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism