Published:Updated:

`பன்றிப்பால்' சர்ச்சை, ஜெயஸ்ரீ கலவரம், கைலாச நித்யானந்தா... போன வார வைரல்கள்! #NewsNotToMiss

கைலாசாவின் தேசத்தந்தை நித்யானந்தா முதல் பரபரப்பு பேட்டி தட்டியிருக்கும் இல.கணேசன் வரை இந்த வாரம் அவ்வளவு விஷயங்கள் நடந்திருக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்த வாரம் நம்மை `பீஸ்ட்' மோடிலேயே வைத்திருந்த ஜாலி, கேலி, வைரல் பஞ்சாயத்துகள் மற்றும் பரபர உலக செய்திகள் இவை.

2
நித்யானந்தா - 2003 & 2019

`ஆனந்த நடனம்; அன்னாசிப் பழ கர்ப்பம்’

KGF சீன்களை வெட்டி ஒட்டி என இன்ஸ்பிரேஷன் ஸ்டேட்டஸ் ஓடிக்கொண்டிருந்த வாட்ஸ்அப் அக்கவுன்ட்களுக்கு, `செட்டியாரு வீட்டுக்கு பொட்டியடிப் பையனா போனவன்யா நா..!' என புது கான்செப்ட் தந்திருக்கிறார் நித்தி. எண்ணற்ற குற்றவழக்குகள் இந்தியாவில் சுற்றியடிக்க, எங்கோ இருந்துகொண்டு அவ்வப்போது ஆன்லைனில் சத்சங்கம் மட்டும் நடக்கிறது. அப்படி ஒரு வீடியோவில், `ஆனந்த நடனம்; அன்னாசிப் பழ கர்ப்பம்’ என்ற தலைப்பிலான ஜுனியர் விகடன் கட்டுரை ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கட்டுரையில் என்ன இருந்தது? படிக்க இங்கே க்ளிக் பண்ணுங்க..!

3
சிறுசேரி ஐ.டி. பார்க் முகப்பு

சிறுசேரி ஐ.டி.பார்க்... இன்று எப்படி இருக்கிறது?

ஹைதராபாத் பெண் மருத்துவர் படுகொலைக்குப் பின்பு நாடு முழுவதும் பாலியல் குற்றவாளிகளைத் தண்டிக்கும் வகையில் சட்டங்களில் மாற்றம் கொண்டுவாருங்கள் என ஒருசேர குரல் எழுகிறது. ஆனால், அதுபோன்ற குற்றங்களைத் தடுக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும், பெண்களின் பாதுகாப்பை எப்படி அதிகரிக்கவேண்டும் என்பதுகுறித்து பலரும் பேசுவதே இல்லை. இப்படித்தான் தமிழ்நாட்டில், சிறுசேரி ஐ.டி பார்க்கில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர், 6 ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். தற்போது அந்த சிறுசேரி ஐ.டி பார்க் எப்படி இருக்கிறது? விகடனின் நேரடி ரிப்போர்ட்டை இங்கே படிக்கலாம்.

4
ரம்யா கிருஷ்ணன்

`குயின்' ரம்யா கிருஷ்ணன் 

`ஜெ'வாகிய நான் எனப் புது அவதாரம் எடுத்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். குயின் வெப்சீரிஸ் குறித்தும், `தலைவி'யாக நடித்தது குறித்தும் என்ன சொல்கிறார்? அவரின் பேட்டியை இங்கே படிக்கலாம்.

5

நடிகர் சதீஷ் திருமணம்

இந்த வாரம் நடந்த அவரோட திருமணதிற்கு வாழ்த்த முழு கோலிவுட் மொத்தமும் ஆஜராகியிருந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் படங்களைப் பார்க்க இங்க க்ளிக் பண்ணுங்க.

6
பிரபஞ்ச அழகி 2019

துன்ஸியின் ஹேர்ஸ்டைல் 

``என்னைப் போன்ற நிறமுடைய, தலைமுடி உடைய பெண்கள் அழகற்றவர்களாகக் கருதப்படும் உலகத்தில்தான் நான் வளர்ந்தேன். ஆனால், அப்படியான எண்ணங்களுக்கு இன்றோடு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. இனி, என்னைப் பார்க்கும் குழந்தைகள் என்னில் அவர்களின் பிரதிபலிப்பைக் காண்பார்கள்" எனப் பேசிய மிஸ் யுனிவர்ஸ் துன்ஸியின் வார்த்தைகள் வெறும் அழகுக்காக மட்டுமே சொன்னவை அல்ல. அவரின் அந்த ஹேர்ஸ்டைலுக்குப் பின் ஒரு துயர வரலாறே இருக்கிறது. அதை விரிவாகப் படிக்க இங்கே க்ளிக் செய்க.

7
அதிபர் ட்ரம்ப்

ட்ரம்ப் பதவிக்கு ஆபத்தா?

உலக நாடுகளுக்கெல்லாம் ஏகோபித்த மன்னனாக விளங்கும் ஏகாதிபத்திய அமெரிக்காவின் இன்றைய அதிமுக்கியப் பிரச்னை அந்நாட்டு அதிபரால் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மீது தகுதி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு அமெரிக்க அதிபர்மீது இத்தகைய அரசியல் குற்றச்சாட்டு கொண்டுவரப்படுவது இதுவே முதன்முறை. அமெரிக்க அதிபரை இவ்வளவு சிக்கலில் மாட்டவைத்தது எது? அப்படி உக்ரைனுக்கும் அமெரிக்காவுக்கும் என்ன தொடர்பு? உக்ரைன் அதிபரிடம் அமெரிக்கா அதிபர் என்ன பேசினார்? விரிவாக இங்கே படியுங்கள்.

8
இல.கணேசன்

பாக்கெட் பால் Vs பன்றிப்பால் 

தமிழக பா.ஜ.க தலைவர்களில் அனுபவம் மிக்கவர் இல.கணேசன். எப்போதும் பரபரப்பு, சர்ச்சை போன்றவைகளில் சிக்காமல் பேசுபவர். ஆனால், இந்தவார ஆனந்த விகடனில் அந்த சாதனையை முறியடித்து ஒரு சர்ச்சைக்கு தூபம் போட்டிருக்கிறார் மனிதர். `நாம் குடிக்கும் மாட்டுப்பாலில் பன்றிப்பாலும் கலந்திருக்கலாம்' என்ற ஸ்டேட்மென்டே அது. அவரது பேட்டியை முழுமையாக வாசிக்க இங்கே க்ளிக் செய்க.

9
ஈஸ்வர் - ஜெயஸ்ரீ

ஈஸ்வர் - ஜெயஸ்ரீ பஞ்சாயத்து 

நடிகை ஜெயஸ்ரீ வீட்டு குடும்ப பிரச்னைதான் கடந்தவார சீரியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக். இந்தப் பிரச்னை எங்கிருந்து ஆரம்பித்தது? முதல் கட்டுரை இங்கே.

10
ரஜினி

தர்பார் நினைவுகள்

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தன் பழைய நினைவுகளையெல்லாம் சேர்த்து ஒரு நெகிழ்ச்சி கட்டுரை எழுதியிருக்கிறார். ஆனந்த விகடனில் வெளியான அந்தக் கட்டுரையைப் இங்கே படிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு