Published:Updated:

இன்பாக்ஸ்

Pune
பிரீமியம் ஸ்டோரி
Pune

புனேவைச் சேர்ந்த ஒன்பது வயதேயான பிரதீக், சமீபத்தில் உலகின் உயரமான சிகரங்களில் ஒன்றான கிளிமாஞ்சாரோவில் ஏறி சாதனை படைத்திருக்கிறார்.

இன்பாக்ஸ்

புனேவைச் சேர்ந்த ஒன்பது வயதேயான பிரதீக், சமீபத்தில் உலகின் உயரமான சிகரங்களில் ஒன்றான கிளிமாஞ்சாரோவில் ஏறி சாதனை படைத்திருக்கிறார்.

Published:Updated:
Pune
பிரீமியம் ஸ்டோரி
Pune
  • கடல்மட்டத்திலிருந்து 19,341 அடிகள் உயரம்கொண்ட மிகவும் ஆபத்தான இந்த மலைச்சிகரத்தை, பயிற்சியாளர் சமீர் உதவியோடு பிரதீக் ஏறியிருக்கிறார்.

இன்பாக்ஸ்

`திட்டமிட்ட நேரத்திற்குள் ஏற முடியவில்லையே’ எனப் பத்திரிகையாளர்கள் வருத்தம் தெரிவிக்க... ‘`அதெல்லாம் வருத்தப்படாதீங்க, போற வழியெல்லாம் ரொம்ப அழகா இருந்தது. அதையெல்லாம் ரசிச்சிட்டே போனோம் அதான் லேட்’’ என்று சிரித்திருக்கிறது இந்தச் சின்ன வாண்டு. இலக்கை விட பயணம் முக்கியம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
  • கமல்ஹாசன் 60 வருடங்களைத் திரைத்துறையில் பூர்த்திசெய்திருக்கிறார். இணையமெங்கும் வாழ்த்துமழை பொழிய, மகள் ஸ்ருதிஹாசனும் தந்தையை வாழ்த்தத் தவறவில்லை.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

கமல் நடித்த மகாநதி படத்தின் போஸ்டரை வெளியிட்டு, தன் தந்தையின் நடிப்பில் இதுவே தனக்குப் பிடித்த படமென்றும் உங்களால் எங்களுக்குப் பெருமை என்றும் வாழ்த்து பாடியிருக்கிறார்! சகலகலா நாயகன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  • ப்ளஸ் டூ படிக்கும் இளம் குத்துச்சண்டை வீரர், நிஷாங்க் மனோகர் கடாம். கர்நாடகாவின் மன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

 குத்துச்சண்டை வீரர்
குத்துச்சண்டை வீரர்

மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். சென்ற வாரம் முழுக்க கர்நாடகாவின் பல பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்க, போட்டியில் கலந்துகொள்ளக் கிளம்பிய நிஷாங்கால் ரயில்நிலையத்திற்கு செல்லமுடியவில்லை. தன்னுடைய சீருடையையும் காலணியையும் பிளாஸ்டிக் கவரில் போட்டுவிட்டு, 2.5 கி.மீ தூரத்தை 45 நிமிடங்கள் நீந்திச்சென்று வென்றிருக்கிறார் நிஷாங்க். எதிர்நீச்சலடி... வென்று ஏத்து, கொடி!

  • ஐரோப்பாவின் மிகப்பெரிய தியேட்டர் பாரீஸில் இருக்கும் லே கிராண்ட் ரெக்ஸ். இங்குதான் தமிழின் முக்கியமான பெரிய பட்ஜெட் படங்கள் பலவும் திரையிடப்படுவது வழக்கம். அது ஒரு பெருமையாகவும் கருதப்படுகிறது. இப்போது அந்த தியேட்டர் நிர்வாகம் தமிழ்ப்படங்கள் திரையிடுவதை நிறுத்திவிடலாமா என்று ஆலோசனை செய்துவருகிறது. சமீபத்தில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின்போது ரசிகர்கள் தமிழ்நாட்டு தியேட்டர்களில் செய்வதைப்போல உற்சாக ஆட்டம் போட... அதில் தியேட்டருக்கு ஏகப்பட்ட சேதமாம். ‘மெர்சல்’ படத் திரையிடலின்போதும் இதே பாணியில் நடந்திருக்கிறது. இதில் தியேட்டரின் திரை பழுதடைந்ததில் நிர்வாகத்திற்கு ஏகப்பட்ட நஷ்டமாம்! சென்ற இடமெல்லாம் சிறப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பு!

  • வித்தியாசமான பாத்திரங்களாகத் தேடித்தேடி நடித்துக்கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி. ‘என்றென்றும் புன்னகை’ பட இயக்குநர் அஹமது இயக்கும் அடுத்த படத்தில் ஜெயம்ரவி நாயகனாக நடிக்கிறார். படத்திற்கு ‘ஜனகணமன’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் ஜெயம்ரவி தேசப்பற்றுள்ள ராணுவ வீரராக நடிக்கிறார். ‘ரோமியோ ஜூலியட்’ இயக்குநர் லஷ்மன் இயக்கும் படத்தில் இயற்கை விவசாயி பாத்திரமாம்! ஜெய் ஜவான் ஜெய் கிஸான்

  • ‘அங்கமாலி டைரீஸ்’ படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் கவனம் பெற்றவர் ஆன்டனி வர்கீஸ். இவர் நடித்த `ஜல்லிக்கட்டு’ என்கிற மலையாளப்படம் டொரன்டோ திரைப்படவிழாவிற்குத் தேர்வாகியுள்ளது. அடுத்து ‘விஜய் 64’ படம் மூலம் அவர் தமிழுக்கு வருகிறார். ‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் இயக்கும் படத்தில் அநேகமாக அவர்தான் வில்லனாக இருப்பார் என்கிறார்கள். அடிபொளியாய்ட்டிரிக்கும் கேட்டோ!

  • இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் ‘அந்தாதூன்.’ இந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கில் சித்தார்த் நடிக்கிறார் என்று முதலில் பேசப்பட்டது. அடுத்து தனுஷ் என்றார்கள். ‘அதெல்லாம் இல்லை, என் மகன் பிரஷாந்த்தான் நடிக்கிறார்’ என்று அறிவித்திருக்கிறார் தியாகராஜன். பிரஷாந்த் லண்டனில் பியானோ கற்றுக்கொண்டவர் என்பது கூடுதல் பலம். படத்தின் ரீமேக் உரிமையை தியாகராஜன்தான் வாங்கியிருக்கிறார். இப்போது வேறொரு படத்தில் பிரஷாந்த் பிஸி என்பதால் அதை முடித்ததும் இந்தப்படத்தைத் தொடங்குவதாகக் கூறியுள்ளார்கள்! கண்ண மூடிட்டுப் பார்க்கலாம்!

  • கிரிக்கெட் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது வி.பி.சந்திரசேகரின் மரணம். கடன்தொல்லைகள் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 80களின் இறுதியில் தமிழக அணிக்காக விளையாடி, தன் அதிரடி பேட்டிங்கால் ஏராளமான ரன்களைக் குவித்தவர் சந்திரசேகர்.

இன்பாக்ஸ்

1988 ஈரானி கோப்பைப் போட்டியில் 56 பந்துகளில் அவர் அடித்த சதம் அவருடைய கிரிக்கெட் வாழ்வில் மிகமுக்கியமான ஒன்று. இந்திய அணிக்காகவும் சில போட்டிகளில் ஆடிய சந்திரசேகர், கிரிக்கெட் வர்ணனையாளராக, பயிற்சியாளராக, இந்திய அணியின் தேர்வுக்குழு உறுப்பினராகவும் இருந்தவர். ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் செயல் இயக்குநராக இருந்தார். டிஎன்பிஎல் போட்டிகளில் காஞ்சிவீரன்ஸ் அணியை வாங்கி அதை வழிநடத்திவந்தார். இன்னும் பல உயரங்களை அடைய வேண்டிய அவர் தன் வாழ்வை முடித்துக்கொண்டது பெருஞ்சோகம். அஞ்சலிகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism