
நமது வாழ்வியல் மாற்றங்களே தலைமுடி பிரச்னைக்கு முக்கிய காரணம். சீரற்ற, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், தூக்கமின்மை, மன அழுத்தம், பொடுகு (இதற்கு ஒருநாள்விட்டு ஒருநாள் தலைக்கு குளிக்கலாம்), ஊட்டச்சத்து குறைபாடு, மலச்சிக்கல், ஹார்மோன் கோளாறுகள் உள்ளிட்டவையால் முடி உதிரலாம்.
எதிர்வீட்டு சுதர்சன் முதல் சூப்பர்ஸ்டார் வரை பலருக்கும் இருக்கும் பிரச்னை தலைமுடி உதிர்வு. தினமும் உதிரும் தலைமுடியை நினைத்து கவலைப்படாதவர்களும் இல்லை; மற்றவர்களின் முடியைப் பார்த்து பொறாமைப்படாதவர்களும் இல்லை! நீளமோ, குட்டையோ... 'தயவு செய்து கொட்டாதே ப்ளீஸ்' என முடியிடம் கெஞ்சிக் கொஞ்சிப் பேசுபவர்கள் பலர். ஒருவரின் மிடுக்கான தோற்றத்துக்கு அத்தியாவசியமாக இருக்கும் தலைமுடியின் உதிர்வு, பிரேக்-அப்பைவிட அதிக மனவலியைக் கொடுக்கிறது. முடி உதிர்வைத் தடுக்கவும், வழுக்கையில் இருந்து தப்பிக்கவும்.. முடி மாற்று சிகிச்சை, ஸ்பாவுக்குச் செல்வது, ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொள்வது, விலை ஏற்றத்தையும் மீறி கிலோ கணக்கில் வெங்காயத்தை அரைத்து தலையில் தேய்த்துக்கொள்வது என்று பாட்டி வைத்தியம் முதல் வெளிநாட்டு வைத்தியங்கள் வரை... அப்பப்பா எத்தனை முயற்சிகள், அத்தனையும் புஸ்! ஏனென்றால்...

பிரச்னைக்கு காரணமே நீங்கள்தான்...
நமது வாழ்வியல் மாற்றங்களே தலைமுடி பிரச்னைக்கு முக்கிய காரணம். சீரற்ற, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், தூக்கமின்மை, மன அழுத்தம், பொடுகு (இதற்கு ஒருநாள்விட்டு ஒருநாள் தலைக்கு குளிக்கலாம்), ஊட்டச்சத்து குறைபாடு, மலச்சிக்கல், ஹார்மோன் கோளாறுகள் உள்ளிட்டவையால் முடி உதிரலாம். நம் உடலில் உள்ள பிரச்னைகளுக்கான தீர்வைக் கண்டுபிடித்தாலேபோதும், முடி உதிர்வைக் கட்டுப்படுத்திவிடலாம். உடலில் எல்லாம் சரியாக இருந்தாலும் சிலருக்கு மரபு ரீதியாக பிரச்னை இருக்கலாம். தவிர, தைராய்டு, ரத்த சோகை, நீரிழிவு, மலேரியா மற்றும் நாள்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்கள் மாத்திரை உட்கொள்பவர்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படும். இதில் பெண்களைவிட ஆண்கள் ரொம்பவே பாவம். வழுக்கையால் பெண் கிடைக்காத ஆண்மகன்கள் இருக்கிறார்கள் (அதைக் குறையாக பார்க்காத பெண்களும் இருக்கிறார்கள், சில் ப்ரோ). ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமின்றி குழந்தைகளும் இப்பிரச்னைக்கு தள்ளப்படுகிறார்கள். இவை அனைத்துக்குமான தீர்வினை வழங்குகிறது டாக்டர் ராஜேஸ்வரி'ஸ் ஸ்கின் கேர் & ஹேர் ரெஸ்டோரேஷன் சென்டர்.
தலையில் ஊசி போட்டால்போதும், முடி வளரும்!

இருக்கக்கூடிய சாதாரண முடி உதிர்வையும், குணப்படுத்தவே முடியாத Alopecia areata, Alopecia totalis, Alopecia universalis உள்ளிட்ட பலவகை முடி உதிர்வுப் பிரச்னைகளுக்கும், டாகடர் ராஜேஸ்வரியின் தோல் பராமரிப்பு & முடி மாற்று சிகிச்சை மையத்தில் தீர்வளிக்கப்படுகிறது. பொதுவாக அனைத்து மையத்திலும் செய்யப்படும் முடி மாற்று அறுவை சிகிச்சை இங்கும் செய்யப்படுகிறது. இருப்பினும், அறுவை சிகிச்சையற்ற PRP (Platelet rich plasma therapy) சிகிச்சை முறையே டாக்டர் ராஜேஸ்வரி'ஸ் சென்டரின் ஸ்பெஷாலிட்டி என்கிறார் தோல் & அழகியல் நிபுணர் டாக்டர் ராஜேஸ்வரி.
"Non-Surgical என்று சொல்லப்படும் இந்தச் சிகிச்சை முறை மிகவும் எளிமையானதாகும். சிகிச்சை பெறுபவரின் உடலில் இருந்து கொஞ்சம் ரத்தத்தை ஊசி மூலம் எடுத்து, இரத்த மூலக்கூறுகளைப் பிரித்து, PRP எனப்படும் பிளாஸ்மாக்களை ஊசிமூலம் மீண்டும் மண்டையில் செலுத்தி முடியை வளரச் செய்வதே இந்தச் சிகிச்சை. ஐந்தில் இருந்து ஏழு மாத காலத்தில் ஐந்து முறை இப்படிச் செய்வதால், முடி நன்றாக வளருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இங்கு வருபவர்களின் உடல் குறைபாடுகளை முதலில் அலசிய பிறகு, அவர்களுக்குப் பொருத்தமான சிகிச்சை முறையை உருவாக்குகிறோம். இதனால் மற்ற மையங்களை ஒப்பிடுகையில் எங்களால் நல்ல பலனைத் தர முடிகிறது."

பவர்ஸ்டார் போல முடி வேண்டும்!
"ஒருமுறை இம்மையத்திற்கு வருகை தந்திருந்த பிரபல அரசியல்வாதி, தனக்கு தெலுங்கு நடிகர் 'பவர்ஸ்டார்' பவன் கல்யாண் (நடிகர் சிரஞ்சீவியின் தம்பி)க்கு இருப்பதைவிட அதிகமான தலைமுடி வேண்டும் எனத் தெரிவித்தார். எங்களால் முடிந்ததைச் செய்கிறோம் என்றோம். முடி மாற்று சிகிச்சைக்கு அவருக்கு டோனார் (Donor) கிடைக்கவில்லை. இதனால் PRP சிகிச்சையை ட்ரை செய்தோம். இரண்டே அமர்வில் அவருக்கு பவன் கல்யாணைவிட அதிக முடி வளர்வதைக் காண முடிந்தது." என்கிறார் டாக்டர் ராஜேஸ்வரி.
ஹைதராபாத்தில் மிகப் பிரபலமான இந்த அழகியல் சிகிச்சை மையம், தற்போது சென்னையிலும் இயங்கிவருகிறது. தலைமுடி & நகம் பராமரிப்பு, தலைமுடி மாற்று சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, திருநங்கையருக்குரிய பராமரிப்பு மற்றும் அழகு மேம்பாடு தொடர்பான சேவைகளையும் வழங்குகிறது.
விகடன் வாசகர்களுக்கு தோல் பராமரிப்பு மற்றும் அழகியல் தொடர்பான சிகிச்சைகளுக்கு 25% தள்ளுபடி உண்டு. சிகிச்சைகள் தொடர்பான கூடுதல் விவரங்களைப் பெற, இங்கே க்ளிக் செய்யவும். https://www.vikatan.com/special/drrajeswari-clinic