Published:Updated:

வங்கித் தகவல்களை RTI-யில் கேட்க முடியுமா? | Doubt of common man

Doubt of common man
News
Doubt of common man

வங்கிகளின் செயல்பாடுகளில் பல விதங்கள் உள்ளன. பொதுமக்களுக்கான சேவை, அக்கவுன்டிங் விவரங்கள், வங்கி அலுவலக நடைமுறை விவரங்கள், தனி நபர் வங்கிக் கணக்கு விவரங்கள் எனப் பலவிதமான தகவல்கள் வங்கிகளில் சேமிக்கப்பட்டிருக்கும்.

Published:Updated:

வங்கித் தகவல்களை RTI-யில் கேட்க முடியுமா? | Doubt of common man

வங்கிகளின் செயல்பாடுகளில் பல விதங்கள் உள்ளன. பொதுமக்களுக்கான சேவை, அக்கவுன்டிங் விவரங்கள், வங்கி அலுவலக நடைமுறை விவரங்கள், தனி நபர் வங்கிக் கணக்கு விவரங்கள் எனப் பலவிதமான தகவல்கள் வங்கிகளில் சேமிக்கப்பட்டிருக்கும்.

Doubt of common man
News
Doubt of common man

விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் வாசகர் ஒருவர்," வங்கித் தகவல்களை ஆர்டிஐயில் கேட்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.

Doubt of common man
Doubt of common man

தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) என்பது இந்திய நாடாளுமன்றத்தால் 2005-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உரிமை பெறும் நிறுவனங்கள் பற்றிய தகவல்களை மக்கள் அறிந்து கொள்ள முடியும். இந்த தகவல்கள் உடனடியாகவோ அல்லது 30 நாட்களுக்குள்ளாகவோ அவருக்கு வழங்கப்பட வேண்டும்.

தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக வங்கித் தகவல்களை அறிய முடியுமா என்பது பற்றி ஆர்டிஐ ‌அக்டிவிஸ்ட் சதீஸ் குமாரிடம் பேசினோம். "வங்கிகளும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வருகின்றன. அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் நாம் தகவல்களைப் பெற முடியும். ஆனால் எவ்விதமான தகவல்களை பெற முடியும் என்பதில் வரைமுறை உண்டு. வங்கிகளின் செயல்பாடுகளில் பல விதங்கள் உள்ளன. பொதுமக்களுக்கான சேவை, அக்கவுன்டிங் விவரங்கள், வங்கி அலுவலக நடைமுறை விவரங்கள், தனி நபர் வங்கிக் கணக்கு விவரங்கள் எனப் பலவிதமான தகவல்கள் வங்கிகளில் சேமிக்கப்பட்டிருக்கும். இந்தத் தகவல்கள் அனைத்தையும் உள்ளடக்கியது தான் வங்கி என்னும் அமைப்பு. தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் இந்த அனைத்து தகவல்களையும் நம்மால் பெற முடியாது. வங்கியில் ஒரு குறிப்பிட்ட தனிநபர் சம்பந்தப்பட்ட எந்தத் தகவல்களையும், அவரின் வங்கிக்கணக்கு விவரங்கள் போன்றவற்றை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்க முடியாது.

RBI
RBI

அந்த மாதிரி தகவல்கள் தனிநபர் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் தொடர்புடையதாக இருக்கும். எனவே அத்தகைய தகவல்களை கணக்கு வைத்திருக்கும் நபரோ அவரின் இரத்த உறவினரோ தவிர வேறு யாரும் அறிய வாய்ப்பில்லை. வங்கிகளில் வழங்கப்படும் சேவைகள், அந்த சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் போன்ற விவரங்களை நாம் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அறிய முடியும். சேவை குறைபாடுகள் குறித்தான காரணங்களையும் அறிய முடியும். மேலும் சேவை குறைபாடு காரணமாக எழுதப்பட்ட புகாரின் மேல் எடுக்கப்படும் நடவடிக்கைகளை பற்றிய விவரங்களையும் நாம் அறியலாம். தங்களுடைய உரிமை மற்றும் நலனுக்காக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் உதவிகள் குறித்த விவரங்களையும் கேட்டுப் பெற முடியும்.எனவே வங்கிகளில் தகவல் அறியும் உரிமை சட்டத்தைப் பயன்படுத்துவது என்பது தனிநபர் பெற விரும்பும் விவரங்களை பொறுத்தே" என்று கூறினார் அவர்.

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!