Election bannerElection banner
Published:Updated:

உங்களுக்கு 'ரெஸ்டாரன்ட் பிஸினஸ்' சரியானதா? வழிகாட்டுகிறது #கெபாபிஸ்தான்

கெபாபிஸ்தான்
கெபாபிஸ்தான்

ஒரு ரெஸ்டாரன்டுக்கு ஓனராக இருப்பது என்பது பலரின் வாழ்நாள் கனவு, ஆனால் முதன்முறையாக ரெஸ்டாரன்ட் தொழில் துவங்க நினைக்கும் பலரும் அதன் நெழிவுசுழிவுகளை அறிந்திருப்பதில்லை.

ஒரு நல்ல ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்க, உங்களிடம் இருக்கவேண்டிய அடிப்படைத் தகுதிகள் என்ன தெரியுமா?

* புதிய மனிதர்களைப் பார்ப்பதில் உங்களுக்கு சந்தோஷமா? கஸ்டமர்களோடு பேசுவது உங்களுக்குப் பிடித்த விஷயம் என்றால் ரெஸ்டாரன்ட் பிசினஸ் சிறப்பான தேர்வுதான்!

* பல வேலைகளை ஒரே நேரத்தில் பார்க்கக்கூடியவர் நீங்களா? உணவகம் என்று வந்துவிட்டாலே பல வேலைகளை ஒரே நேரத்தில் கவனிக்க வேண்டியது கட்டாயம். ஊழியர்களைக் கையாளுதல், ஃபோன் கால்ஸ், ஆன்லைன் ஆர்டர்கள், கஸ்டமர்களின் தேவையை உணர்ந்து பணியாற்றுவது, சரக்குகளைக் கவனித்தல், மளிகை மற்றும் காய்கறி போன்ற பிற கடைக்காரர்களின் உறவு என்று ஏகப்பட்ட விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன...

'எந்நேரமும் பரபரப்பாய் இருப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும்' என்று உங்களுக்குத் தோன்றினால், ரெஸ்டாரன்ட் பிஸினஸ் உங்களுக்கானது!

* டென்ஷனுக்கே டென்ஷன் கொடுப்பவரா நீங்கள்? ஊழியர்கள் & பிற கடைக்காரர்களால் சிக்கல், வானிலை, விடுமுறையில் சென்ற செஃப், வாடிக்கையாளர் அதிருப்தி என்று தினம் தினம் புது சிக்கல்கள் ஏற்படுவது உணவக பிஸினஸில் சர்வ சாதாரணம். 'என்ன வேணா நடக்கட்டும், நான் கூலாக இருப்பேன்!' என்று பிரச்னைகளை நேர்த்தியாகக் கையாளக் கூடியவர் நீங்கள் என்றால் ரெஸ்டாரன்ட் பிசினஸ் உங்களுக்கான பெஸ்ட் சாய்ஸ்.

* பிறரின் திறமையைப் பயன்படுத்தத் தெரியுமா? ஒரு ரெஸ்டாரன்ட் ஓனராக இருந்துகொண்டு எல்லா வேலைகளையும் நீங்களே இறங்கி செய்ய முடியாது. அந்தந்த வேலைகளுக்கு ஏற்ற நபர்களைத் தெரிந்துகொண்டு, அவர்களிடம் காரியத்தை ஒப்படைத்து, சரியான நேரத்தில் வேலையை முடிக்கும் திறமை உங்களுக்குக் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

உங்களுக்கு 'ரெஸ்டாரன்ட் பிஸினஸ்' சரியானதா? வழிகாட்டுகிறது #கெபாபிஸ்தான்

'இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல் (திருக்குறள் 517)'

...'என்று வள்ளுவர் சொன்னது எனக்கு நன்றாகத் தெரியும்' என்று நீங்கள் எண்ணினால் 2021-ல் தைரியமாக உணவு பிஸினஸ்-ல் காலடி எடுத்து வைக்கலாம், நிச்சயம் உங்களுக்கு வெற்றிதான்!

'கெபாபிஸ்தான்' - உங்களின் 60% வேலையை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்!

அரபு / மத்திய கிழக்கு நாடுகளில் பிரசித்தி பெற்ற உணவுகளான கெபாப், கிரில், டிக்கா, பிரியாணி, ரோல்ஸ் மற்றும் மந்தி வகை உணவுகளை வழங்குகிறது 'கெபாபிஸ்தான் - Kebabistaan' ரெஸ்டாரன்ட். உணவு பிஸினஸ்-ல் கோலோச்ச நினைக்கும் வருங்கால தொழில்முனைவோர் மத்தியில் பெரிய அலையை எழுப்பியுள்ளது கெபாபிஸ்தான், காரணம் அதன் புதுமை!

பிரான்சைஸி ஸ்டைல் உணவகம், புதுமையான மற்றும் தனித்துவமான மெனு, வேலையைக் குறைக்கும் SOP ஸ்டைல் செயல்பாடுகள், வாடிக்கையாளர்களைக் கவரும் சீ-த்ரூ கிச்சன், எந்த நேரத்திலும் உதவக் காத்திருக்கும் கெபாபிஸ்தான் மேனேஜர்கள் என்று கெபாபிஸ்தானுக்கு ஏகப்பட்ட பிளஸ்!

உங்களுக்கு 'ரெஸ்டாரன்ட் பிஸினஸ்' சரியானதா? வழிகாட்டுகிறது #கெபாபிஸ்தான்

கெபாபிஸ்தானின் தாய் நிறுவனம் கவி குரூப். இன்று தமிழகத்தின் அனைத்து பிரதான இடங்களிலும் 250+ கிளைகளுடன் இயங்கிவரும் 'மீட் & ஈட்' குயிக் சர்வீஸ் ரெஸ்டாரன்ட் இவர்களுடையதுதான்! மேலே குறிப்பிடப்பட்ட தகுதிகள் தங்களிடம் இல்லை என்று நினைப்பவர்களையும் தகுந்த ஆலோசனைகள், பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் தந்து வெற்றிகரமான தொழில்முனைவோர்களாக உருவாக்கி வருகிறது, பிரான்சைஸி உணவகத் தொழிலில் நம்பர் 1 தமிழக நிறுவனமாக திகழும் கவி குரூப்!

தொழில்முனைவோர் ஆகும் உங்கள் கனவை கெபாபிஸ்தான் மூலம் நிறைவேற்றிட விருப்பமா? கெபாபிஸ்தான் உங்களுக்கு எப்படி உதவுகிறது, பிரான்சைஸியில் உங்களுடைய பங்கு என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? உங்கள் விவரங்களை, இப்போதே இங்கு வழங்கிடுங்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு