Election bannerElection banner
Published:Updated:

கோதுமை சாப்பிடலாமா! சுவாரஸ்ய தகவல்கள்... #NAGA

கோதுமை
கோதுமை

உலகத்திலேயே அதிகமாக வளர்க்கப்படும் உணவுப்பயிர் எது தெரியுமா? 'கோதுமை'. சரியான விடை சொன்னவர்களுக்கு ஒரு கைதட்டல்!

கோதுமையை வைத்துக்கொண்டு நாம் பண்ணும் வித்தை என்பது அபாரம். தேய்த்து கல்லில் போட்டால் சப்பாத்தி, எண்ணெயில் பொரித்து எடுத்தால் பூரி, வாட்டி எடுத்தால் ரொட்டி, உள்ளே காய்கறிகளை ஒளித்து வைத்தால் பராத்தா, இப்படி நாண், ஃபுல்கா, குல்ச்சா என்று இந்திய ரொட்டி வகைககள் ஏராளம், ஆனால் உள்பொருள் என்னவோ அதே கோதுமை மாவுதான்.

தென்னிந்தியர்களுக்கு அரிசி போலத்தான் வட இந்தியர்களுக்கு கோதுமை. பஞ்சாப், ஹரியானா, பீகார், உத்தர் பிரதேஷ், மத்திய பிரதேஷ் போன்ற மாநிலங்களின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ற தாவரமாக இருப்பதால் அங்கே விளைச்சலில் சக்கை போடு போடுகிறது கோதுமை! தென் இந்தியாவிலும் சப்பாத்தி சாப்பிடுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். தமிழகத்தில் பெரும்பாலும் 'சம்பா' கோதுமை பயிரிடப்படுகிறது.

காட்டுத் தாவரமாக இருந்த கோதுமை, மத்திய கிழக்கு நாடுகளில் முதலில் பயிரிடப்பட்டு பின்னர் உலகம் முழுக்க பரவி இருக்கக்கூடும் என்று அறிவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 17000 ஆண்டுகளுக்கு முன்பே கோதுமையை மனிதன் பயன்படுத்தி வந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். பீகாரின் 'சரண்' மாவட்டத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் 5500 ஆண்டுகளுக்கு முன்பே கோதுமை புழக்கத்தில் இருந்தது தெரிய வந்துள்ளது (அப்போதே டின்னருக்கு சப்பாத்தி சாப்பிட்டிருப்பார்கள் போல!)

'முழு' கோதுமையில் இவ்வளவு சத்துகளா?

எப்போதும் 'முழு கோதுமை' மாவு வாங்குங்கள். ஏனெனில் வெளி, நடு மற்றும் உள்பகுதி என்று மூன்று பகுதிகளைக் கொண்டது ஒரு கோதுமை மணி. இம்மூன்றும் சேர்த்து அரைக்கப்பட்ட கோதுமை மாவில் அத்தனைச் சத்துகளும் அடங்கியுள்ளன. நடுப்பகுதிதான் மாவுச் சத்து அடங்கிய பகுதி என்பதால் சில தயாரிப்பாளர்கள் பிற பகுதிகளை நீக்கி விடுவதுண்டு, அப்படிப்பட்ட மாவில் சத்துகள் குறையும்.

எலும்புகளை வலுவாக்கும் ஃபாஸ்பரஸ், மூளைக்குத் தேவையான நியாசின், உடலில் புது செல் உற்பத்திக்கு உதவும் விட்டமின் பி9, பிட்டமின் பி1, இரும்புச்சத்து, ஜிங்க், மெக்னீஷியம் போன்ற பல தாதுப்பொருள்கள் கோதுமை மாவில் அடங்கியுள்ளன. மாவுச்சத்துக்கு பஞ்சமே இல்லை, பசியைப் போக்கி உடலுக்கு சக்தியைத் தருவதில் சிறந்தவை கோதுமை மாவு உணவுகள்.

கோதுமை சாப்பிடலாமா! சுவாரஸ்ய தகவல்கள்... #NAGA

உடல் எடை கூட 'ரவா'

கோதுமையில் தயாரிக்கப்படும் மிக முக்கிய உணவுப்பொருள் ரவை/ரவா. 'டரும் (Durum)' எனப்படும் ஒருவகை கோதுமையிலிருந்து இது தயாரிக்கப்படுவதால் ரவைக்கு வித்தியாசமான சுவை கிடைக்கிறது. உடல் எடையைக் கூட்ட நினைப்போருக்கு சிறந்த உணவு ரவா, இதிலுள்ள புரதச்சத்து பாடி பில்டிங் செய்வோருக்கு உதவுகிறது. கோதுமை மாவை விட நார்ச்சத்து ரவையில் குறைவு என்பதால் காய்கறிகளுடன் சேர்த்து உண்ணும்போது, சிறப்பான உணவாகிறது ரவை...

கோதுமை மற்றும் ரவையில் விதவிதமான உணவுகள்!

வீடுகளில், கோதுமை மாவு என்றாலே சப்பாத்தி, ரவை என்றால் உப்மா அல்லது கேசரிதான் என்றாக்கிவிட்டனர். ஆளூ பராத்தா, கோதுமை அல்வா, மொறுமொறு கோதுமை குக்கீஸ், கோதுமை முள்ளு முறுக்கு, போலி, புட்டு என்று எவ்வளவோ செய்யலாம். இணையத்தைத் திறந்தாலே கோதுமை மாவில் செய்யக்கூடிய பல வித்தியாசமான ரெசிப்பிகள் குவிந்து கிடக்கின்றன!

ரவையை எடுத்துக்கொண்டால், கிச்சடி ஒரு கிளாசிக்! இதுதவிர பலவிதமான கேக்ஸ் செய்ய ரவாவைப் பயன்படுத்தலாம். பலருக்கும் விருப்பமான ரவா ஆனியன் ரோஸ்ட்-டை ஓட்டலில்தான் வாங்க வேண்டுமா? வீட்டிலும் ஒருநாள் ட்ரை செய்து பாருங்கள். இவைதவிர ரவா இட்லி, தக்காளி உப்மா, ஃப்ரூட்ஸ் கேசரி, ரவா பேன் கேக் என்று எவ்வளவோ செய்யலாம்!

நாகா வழங்கும் அதிரடி ஆஃபர்

நாகா முழு கோதுமை மாவு மற்றும் நாகா டபுள் ரோஸ்ட்டட் ரவை காம்போ பேக்கை இப்போது சிறப்புச் சலுகையில் பெறலாம்!

நாகா முழு கோதுமை மாவு 1 கிலோ + நாகா டபுள் ரோஸ்ட்டட் ரவா 1 கிலோ - ரூ. 100, இதன் அசல் விலை ரூ. 132 ஆகும்; நாகா முழு கோதுமை மாவு 1/2 கிலோ + நாகா டபுள் ரோஸ்ட்டட் ரவா 1/2 கிலோ - ரூ. 50, இதன் அசல் விலை ரூ, 67 ஆகும்.

நாகா முழு கோதுமை மாவு என்பதால் சத்துகள் அதிகம் மற்றும் நாகா டபுள் ரோஸ்ட்டட் ரவா என்பதால் நீங்கள் எந்த டிஷ் செய்தாலும் சுவைக்கு கேரண்டி! நாகா வழங்கும் இந்த சூப்பர் ஆஃபரைப் பெற்றிட இப்போதே அருகிலுள்ள கடைகளுக்கு விரைவீர், இந்த ஆஃபர் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு