Published:Updated:

ஜூ.வி பைட்ஸ்: மாநகராட்சி மைதான `அதிர்ச்சி', `அலறும்' ஐ.ஏ.எஸ்-கள், அ.தி.மு.க-வால் பீதியில் சேலம்!

சேலம்
சேலம்

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 விவகாரத்தில் அரசு காட்டும் வேகத்தை, இதற்கு முன் நடந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகளிலும் காட்டி விசாரித்தால் பல்வேறு மோசடிகள் அம்பலத்துக்கு வரும்'' என்கிறார்கள்

"சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களை, சில அதிகார சக்திகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. ஏழைக் குழந்தைகளும், அரசுப் பள்ளி மாணவர்களும் அந்த விளையாட்டு மைதானங்களுக்குள் நுழையவே முடியவில்லை" என்று குமுறுகின்றனர் மைதானங்களை ஒப்பந்தத்துக்கு எடுத்த ஒப்பந்ததாரர்கள்.

ஜூ.வி பைட்ஸ்: மாநகராட்சி மைதான `அதிர்ச்சி', `அலறும்' ஐ.ஏ.எஸ்-கள், அ.தி.மு.க-வால் பீதியில் சேலம்!

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 16 ஸ்கேட்டிங் மைதானங்கள், 18 டென்னிஸ் மைதானங்கள், 11 பேட்மிண்டன் மைதானங்கள் இருக்கின்றன. இவை, இதற்கு முன்பு அந்தந்தப் பகுதி கவுன்சிலர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. விளையாடுவதற்கான கட்டணம், பராமரிப்பு போன்றவற்றையும் அவர்களே நிர்வகித்தனர். கிட்டத்தட்ட ரெளடிகள் மாமூல் வசூலிக்கும் நடைமுறை அது. இதனால், விளையாட்டு மைதானங்களிலிருந்து மாநகராட்சிக்கு எந்த வருவாயும் செல்லவில்லை. எனவே, மைதானங்களை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்குக் கொடுக்க முடிவுசெய்தது சென்னை மாநகராட்சி. அதன்படி மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், அந்தந்தப் பகுதி ஏழைக் குழந்தைகளுக்கும் இலவச விளையாட்டுப் பயிற்சியும் ஊட்டச்சத்து உணவும் வழங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. பிற நபர்களுக்கு, விளையாட்டுகளைப் பொறுத்து குறைந்தபட்சக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டன. அந்த வகையில், கணிசமான மைதானங் களை 'முல்லை மலர்' என்ற நிறுவனம் ஒப்பந்தத்துக்கு எடுத்தது. இங்கேதான் வில்லங்கம் தொடங்கியது என்கிறார்கள் ஒப்பந்ததாரர் தரப்பினர்.

"...ஒப்பந்தம் எடுத்தது முதல் கவுன்சிலர்கள், முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி வட்டச் செயலாளர்கள் வரை உள்ளூர் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், நீதித்துறை, காவல்துறை பிரமுகர்கள், ரெளடிகள் என இவர்களின் தலையீடு தாங்க முடியவில்லை" என்கின்றனர்.

- விரிவான செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > விரட்டியடிக்கப்படும் ஏழைக் குழந்தைகள் - டெண்டர் எடுத்தவர்கள் திண்டாட்டம்! - ஆக்‌ஷன் எடுக்குமா சென்னை மாநகராட்சி? https://www.vikatan.com/news/general-news/chennai-corporation-play-ground-issue

ஊழலை மறைக்கத் துடிக்கும் 'போலி' ஐ.ஏ.எஸ்-கள்!

''டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 விவகாரத்தில் அரசு காட்டும் வேகத்தை, இதற்கு முன் நடந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகளிலும் காட்டி விசாரித்தால் பல்வேறு மோசடிகள் அம்பலத்துக்கு வரும்'' என்கிறார்கள், இந்த முறைகேட்டால் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டவர்கள்.

''...அந்தத் தேர்வில் தேர்வாகி பலர் இப்போது தமிழக அரசில் உயர் பதவிகளில் இருக்கின்றனர். குறிப்பாக, ஐ.ஏ.எஸ் பதவியில் பலர் இருக்கின்றனர். இப்போது நடந்திருக்கும் முறைகேட்டின் பின்னணியிலும் சில உயர் அதிகாரிகள் இருக்கின்றனர். எனவே, முறைகேடு வெளியே வருவதை அவர்கள் தடுக்கின்றனர். எனவே, 2001-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-1 தேர்வில் தேர்ச்சிபெற்று அதிகாரிகளாக இருப்பவர்களையும், இப்போது நடைபெற்று வரும் குரூப்-4 முறைகேட்டை வெளிவராமல் தடுக்கும் அதிகாரிகளையும் கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது...

ஜூ.வி பைட்ஸ்: மாநகராட்சி மைதான `அதிர்ச்சி', `அலறும்' ஐ.ஏ.எஸ்-கள், அ.தி.மு.க-வால் பீதியில் சேலம்!

சென்னையில் புகழ்பெற்ற ஒரு நிறுவனத்தில் படித்த பலரும், தொடர்ந்து குரூப்-1 தேர்வில் தொடர்ச்சியாக வெற்றிபெறுகின்றனர். தேர்வுத்தாளில் அவர்கள் எந்த மோசடியும் செய்வதில்லை. ஆனால், தேர்வில் கேட்கப் படும் கேள்விகள் எல்லாம் குறிப்பிட்ட சிலருக்கு முன்கூட்டியே கொடுக்கப்படுகின்றன. தெரிந்த கேள்விக்குத் தெளிவாக பதில் எழுதுவதில் யாருக்கும் சிரமம் இருப்பதில்லை. இந்தக் கேள்வித்தாள் வெளிவரும் ரூட்டைக் கண்டறிந்து, கேள்வித்தாளை லீக் செய்பவர் களைக் கைதுசெய்ய வேண்டும்'' என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.

- இதுகுறித்து ஜூனியர் விகடன் இதழில் விரிவாக வாசிக்க > ஊழலை மறைக்கத் துடிக்கும் 'போலி' ஐ.ஏ.எஸ்-கள்! - 2001-ல் தேர்ச்சி பெற்றவர்களை விசாரிக்குமா காவல்துறை? https://www.vikatan.com/news/general-news/tnpsc-scam-also-2001-group-1-exam

ரெளடிகளின் கூடாரமாகும் சேலம் அ.தி.மு.க!

''சேலம் தி.மு.க-வில் களையெடுப்பு நடத்தி கட்சியை பலப்படுத்த காய் நகர்த்தி வருகின்றனர். ஆனால் சேலம் அ.தி.மு.க-விலோ, குற்றப்பின்னணி உள்ள பிரபல ரௌடிகளை கூட்டம் கூட்டமாகச் சேர்ந்துவருகின்றனர். அவர்களுக்கு அ.தி.மு.க நிர்வாகிகள் மலர்கொத்து கொடுத்து வரவேற்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது'' - இப்படியான புலம்பல்கள் சேலம் அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஜூ.வி பைட்ஸ்: மாநகராட்சி மைதான `அதிர்ச்சி', `அலறும்' ஐ.ஏ.எஸ்-கள், அ.தி.மு.க-வால் பீதியில் சேலம்!

''கடந்த காலத்தில் சேலம் தி.மு.க, ரௌடிகளின் கூடாரமாக இருந்தது. பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் சேலம் மத்திய மாவட்டச் செயலாளராக ஆன பிறகு, கட்சியிலிருந்து ரௌடிகளை ஓரங்கட்டினார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் `ரௌடிகளுக்கும், அவர்களின் கூட்டாளிகளுக்கும், உறவினர்களுக்கும் சீட் வழங்க முடியாது!' என்று பகிரங்கமாகவே தெரிவித்தார். இதனால் அதிருப்தியில் இருந்த ரௌடிகள் கைது நடவடிக்கை யிலிருந்து தப்பிக்கவும், தங்கள் மீதுள்ள வழக்குகளை வாபஸ் பெறவும், நகராட்சி, மாநகராட்சித் தேர்தலில் சீட் பெறவும் அடியாட்கள் சகிதமாக அ.தி.மு.க-வுக்குத் தாவுகின்றனர்'' என்கின்றனர் விவரமறிந்த வட்டாரத்தினர்.

- இதுகுறித்து ஜூனியர் விகடன் இதழில் விரிவாக வாசிக்க > ரெளடிகளின் கூடாரமாகும் சேலம் அ.தி.மு.க! https://www.vikatan.com/government-and-politics/news/salem-admk-atrocities

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு