Published:Updated:

ஜூ.வி பைட்ஸ்: மருத்துவமனைகள் 'உஷார்', கைகோத்த அஜித் - விஜய் ரசிகர்கள்!

ஜூ.வி பைட்ஸ்
ஜூ.வி பைட்ஸ்

தாய்க்கு, அறுவைசிகிச்சைக்கு முன்பான பரிசோதனைகள் செய்தபோது கொரோனா பரிசோதனையும் செய்யப்பட, யாரும் எதிர்பாராத வகையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

தீர்வை நோக்கிச் செல்லும் இடமே பிரச்னையைத் தொடங்கும் இடமாக அமைந்துவிட்டால் என்னவாகும்?!

அதுபோன்றதொரு நிலைதான் இப்போது கொரோனா வைரஸ் விஷயத்தில் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளே, நோயைப் பரப்பும் இடமாக மாறி வருகின்றன.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிறுநீரகப் பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்டார் 85 வயது மூதாட்டி ஒருவர். சில தினங்களில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதற்கான மூலத்தை ஆராய்ந்தபோது, அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவரிடமிருந்து அவருக்கு நோய் பரவியிருக்கிறது. அந்த மருத்துவருக்கு, வேறொரு நோயாளியிடமிருந்து தொற்று ஏற்பட்டிருக்கிறது.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை

சென்னை தனியார் மருத்துவ மனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இரண்டு வயது குழந்தைக்கு, கல்லீரல் தானத்தை தாயே வழங்க இருந்தார். தாய்க்கு, அறுவைசிகிச்சைக்கு முன்பான பரிசோதனைகள் செய்தபோது கொரோனா பரிசோதனையும் செய்யப்பட, யாரும் எதிர்பாராத வகையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து, அந்தப் பெண் அனுமதிக்கப் பட்டிருந்த வார்டில் பணியாற்றிய அனைத்து மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களையும் தனிமைப்படுத்தியது மருத்துவமனை நிர்வாகம். அந்தப் பகுதியே மூடப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட்டது.

இப்படி, மருத்துவமனைகளில் தங்களின் உடல்நலப் பிரச்னைகளுக்காக அனுமதிக்கப்படுபவர்களுக்கு மருத்துவமனையிலிருந்து கொரோனா பரவுவதும், வேறு பிரச்னைக்காக சிகிச்சைக்குச் செல்லும் நோயாளிகளிடமிருந்து மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நோய் பரவுவதும் தொடங்கியுள்ளது.

இதன் முழுமையான பின்னணியுடன், மருத்துவ ரீதியிலான பார்வையையும் உள்ளடக்கிய முழுமையான கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > கொரோனாவைப் பரப்புகின்றனவா மருத்துவமனைகள்?! Click here https://bit.ly/2KXs0SS

இணைந்த அஜித் - விஜய் ரசிகர்கள்!

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்துவருகின்றனர். நெல்லை மாவட்டத்திலும் முன்னணி நடிகர்களின் ரசிகர் மன்றத்தினர் ஏழை எளிய மக்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் உதவிவருகின்றனர். இந்தப் பணியில் அஜித், விஜய் ரசிகர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டுவருவதுதான் பலரையும் திரும்பிப் பார்க்கவைத்திருக் கிறது.

அஜித்  - விஜய்
அஜித் - விஜய்

துணை ஆணையர் சரவணனிடம் நிவாரணப் பொருள் அளிக்கும் அஜித் ரசிகர்கள் - காவலர்களுக்கு உதவும் விஜய் ரசிகர்கள்

பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஏழைப்பெண் ஒருவருக்கு உதவி தேவை என்பதை அஜித் ரசிகர்கள் தெரியப்படுத்தவும், விஜய் ரசிகர்கள் களமிறங்கி அந்தப் பெண் ணுக்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருள்கள், குழந்தைக்குத் தேவையான பால்பவுடர் உள்ளிட்ட உதவிகளைச் செய்தனர்.

ரசிகர்கள் உதவி
ரசிகர்கள் உதவி

அதேபோல் நெல்லை சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் இருப்போருக்கு உணவுடன் தண்ணீரும் தேவைப்படுகிறது என்ற தகவலை விஜய் ரசிகர்கள் தெரியப்படுத்தவும், அங்கே ஓடோடிச் சென்று உதவுகின்றனர் அஜித் ரசிகர்கள். இப்படி இரு முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் இணைந்து செயல்படுவதை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கத் தொடங்கியிருக்கின்றனர்.

- இதன் பின்னணியில் பல பாசிட்டிவ் தகவல்கள் இருக்கின்றன. அவற்றை முழுமையாக ஜூனியர் விகடன் இதழில் அறிய > கொரோனா பணிகளில் இணைந்த அஜித் - விஜய் ரசிகர்கள்! Click here https://bit.ly/2SwcXUi

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு