Published:Updated:

ஜூ.வி பைட்ஸ்: சின்னத்தாய் அவள், நீட் வைரஸும் அதிரவைக்கும் `36' பேரும், ஆர்.டி.ஐ கொலைகள்!

ஜூ.வி பைட்ஸ்
ஜூ.வி பைட்ஸ்

எந்தவித ஒளிவுமறைவுமின்றி அரசுத் துறைத் தகவல்கள் அனைத்தும் பொதுவெளிக்கு வந்துவிட்டால், ஆர்.டி.ஐ ஆர்வலர்கள் யாரும் தாக்கப்பட மாட்டார்கள் எனக் கருதப்படுகிறது. அதுவே டாஸ்க் ஃபோர்ஸின் நோக்கமும்கூட!

பெரியமேடு ஏரியா... தெருவிளக்கெல்லாம் இல்லை. கும்மிருட்டு. ''நைனா... வசதியான இடத்துக்குத்தான் வந்து பாப்பா மாட்டியிருக்கு. நீ அந்தாண்ட போ... நாங்க இந்தாண்ட வளைக்கிறோம்'' என்றபடி வேட்டைநாய்கள் கணக்காக ஸ்கெட்ச்போட தொடங்கினார்கள். அந்த இருட்டில் சிலரின் கைகளில் திடீரென பட்டன் கத்திகள் முளைத்து வெள்ளியாய் மின்னின. அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக ஒரு குறுக்குச்சந்தில் புகுந்து ஓடத் தொடங்கினார் அந்த இளம்பெண். ஒரு வளைவில் திரும்பியவுடன் ஒரு விடுதி இருந்தது. கதவைத் தள்ளிக்கொண்டு தபதபவென உள்ளே நுழைந்தாள்.

ரிசப்ஷனில் இருந்த நபர், ''என்னம்மா வேணும்?'' என்றார். அவளுக்கு பயத்தில் வார்த்தைகள் வரவில்லை. ''காப்பாத்துங்க... ஒரு ரூம் கொடுங்க... என் குழந்தை... என் குழந்தை'' என்று அழுகையுடன் படபடக்கிறாள். வெளியே ஆட்களின் சத்தம். டிரம்மோ, பழைய சைக்கிளோ எதையோ உருட்டுகிறார்கள்... உடைக்கிறார்கள். விடுதி மேலாளர் அவளின் நிலையைப் புரிந்து கொண்டு, அவசரமாக ஒரு சாவியை எடுத்து நீட்டுகிறார். ஓர் அறையைக் காட்டி, ''உள்ளே போயிடும்மா'' என்று தள்ளாத குறையாக உள்ளே அனுப்பிவிடுகிறார். அவளும் விருட்டென அந்த அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்துகிறாள்.

பின்னால் விரட்டி வந்த கும்பலும் விடுதிக்குள் நுழைந்துவிட்டது. அவர்கள் மேலாளரைப் பார்த்து கத்தியைக் காட்டி, ''ஏய்... எல்லா பக்கமும் பாத்துட்டோம். அவ இங்கதான் வந்திருக்கணும். ஒழுங்கா அனுப்பிடு. இல்லைன்னா இந்த இடமே எங்களுக்கு ரொம்ப வசதிதான்'' என்று கபகபவெனச் சிரித்தார்கள். மேலாளர் நடுங்கியபடியே, ''இல்ல... யாரும் இங்க வரலை'' என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அறைக்குள்ளிருந்து குழந்தை வீறிடும் சத்தம் கேட்கிறது.

ஜூ.வி பைட்ஸ்: சின்னத்தாய் அவள், நீட் வைரஸும் அதிரவைக்கும் `36' பேரும், ஆர்.டி.ஐ கொலைகள்!

''ஏய்... இதோ பார்றா. நைனா டபாய்க்கிறாரு!'' என்றபடியே அந்த அறைக்கதவை உதைத்துத் தள்ளி உள்ளே செல்கிறது அந்தக் கும்பல். உள்ளே போராட்டம் நடக்கும் சத்தம். அதற்குள் மேலாளர் தெருவில் இறங்கி அக்கம்பக்கம் வீடுகளின் கதவை ஓங்கித்தட்ட, சிறிது நேரத்தில் கூட்டம் சேர்ந்துவிடுகிறது. இதைக் கண்ட அந்தக் கும்பல் ஓடிவிட்டது.

அந்தப் பெண்ணுக்கு எதுவும் நேர்ந்திருக்க வில்லை. ஆனால், அந்த ரெளடிகளுடன் கடுமையாகப் போராடியிருக்கிறாள். நகக்கீறல் கள்... உடை லேசாகக் கிழிந்து இருந்தது. ஆனால், அந்தக் குழந்தை? இந்தக் களேபரத்தில் பெண்ணின் கை தவறி குழந்தை கீழே விழுந்திருக்கிறது. அது பேச்சு மூச்சு இல்லாமல் மூலையில் கிடந்தது. அந்தப் பெண் பீதியடைந்து, குழந்தையை உலுக்குகிறாள். ஆனால், தலை துவண்டுவிட்டது. பயந்துபோன விடுதி மேலாளர், ''அம்மா... உங்களுக்கு உதவி செய்யப்போய் நான் மாட்டிக்குவேன்போலிருக்கு. தயவுசெஞ்சு இங்கிருந்து கிளம்பிடுங்கம்மா'' என்று கையெடுத்துக் கும்பிட... அவரிடம், ''ஆஸ்பத்திரி எங்கே இருக்கு?'' என்று கத்தினாள் அந்தப் பெண். ''அதோ... மெயின்ரோட்டுக்குப் போய் திரும்பின உடனே வரும்'' என்று அவர் சொல்லி முடிப்பதற்குள், குழந்தையைத் தூக்கிக்கொண்டு வேகவேகமாக ஓடினாள்.

- இந்தப் பதைபதைக்கவைக்கும் சம்பவத்துக்கு முன்னும் பின்னும் நடந்தது என்ன? - சமூகத்தின் கவனிக்கப்பட்ட மனிதர்கள் மட்டுமல்ல... விபத்தாக சிறையுண்ட விளிம்புநிலை மனிதர்களையும் சிறையில் கண்டுணரலாம். கொல்கத்தாவிலிருந்து அப்படித்தான் வந்தாள் அந்தச் சின்னத்தாய்! - தமிழ்நாடு சிறைத் துறையில் 39 ஆண்டுகள் பணியாற்றிய ஜி.ராமச்சந்திரன் எழுதும் ஜூ.வி தொடரின் அத்தியாயத்தை முழுமையாக வாசிக்க > க்ளிக் செய்க... http://bit.ly/2xcf5Jj ஜெயில்... மதில்... திகில்! - சின்னத்தாய் அவள்!

நீட் வைரஸும் அதிரவைக்கும் '36' பேரும்!

ஓர் ஏழை வீட்டுப் பிள்ளை படித்து வேலைக்குப் போய் சம்பாதித்தால், அந்தச் சந்ததியின் தலையெழுத்தே மாறிவிடும். வாழ்வின் கடைசிப் படிக்கட்டிலிருந்து தட்டுத்தடுமாறி முட்டிமோதி உயரத்தை அடைபவர்களே தன்னைப்போல் சிரமப்படும் மற்றவர்களைப் பற்றியும் கவலைப்படுவார்கள்; அவர்களையும் ஏற்றிவிட கைகொடுப்பார்கள். அதனால்தான், நம் கல்வித் திட்டத்தில் அடித்தட்டு ஏழைக் குழந்தைகளுக்கும் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

அப்படித்தான் எளிய குடும்பத்தின் பிள்ளைகள் மருத்துவர்கள் ஆனார்கள், நீதிபதிகள் ஆனார்கள், ஆட்சித்தலைவர்கள் ஆனார்கள். இத்தனை காலம் கட்டிக்காத்த இந்தச் சமூகநீதியைத்தான் குழிதோண்டிப் புதைக்கிறது நீட். ஒரு பக்கம் சோதனை என்ற பெயரில் தேர்வு எழுதப் போகும் பிள்ளைகளின் ஆடைகளைக் கிழித்து, தலையைக் கலைத்து, பெல்ட்டை உருவி, ஷூவை அறுத்தெல்லாம் பீதியூட்டுகிறார்கள். இன்னொரு பக்கம், சத்தமில்லாமல் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்துவிட்டார்கள். இதுதான் நீட்டை முன்வைத்து மருத்துவப் படிப்பை மேம்படுத்தும் லட்சணமா? இந்த மோசடி கும்பல் நெட்வொர்க்கைத்தான் ஜூ.வி அக்குவேறு ஆணிவேராகப் பிரித்து அம்பலத்துகிறது.

ஜூ.வி பைட்ஸ்: சின்னத்தாய் அவள், நீட் வைரஸும் அதிரவைக்கும் `36' பேரும், ஆர்.டி.ஐ கொலைகள்!

...150 மாணவர்களும் 2018-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வை எழுதினார்கள். அதில், 66 மாணவர்கள் மட்டும் வெற்றிபெற்று வெவ்வேறு கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர். சிலர், 'மருத்துவப் படிப்பே வேண்டாம்' என ஒதுங்கிவிட்டனர். ஆனால், 36 மாணவர்கள் தரப்பில் மட்டும் மீண்டும் நீதிமன்றம் சென்றார்கள்.

தங்கள் பிள்ளைகளுடன் படித்த 66 பேர் நீட் தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துவிட்ட நிலையில், எப்படியாவது தங்கள் பிள்ளைகளையும் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டும் என நினைத்த 36 மாணவர்களின் பெற்றோரையும் வளைத்தது, ஒரு 'ஆல் இண்டியா நெட்வொர்க்'...

- நீட் வைரஸ் தொடர் ஜூ.வி-யில் வெளியாக ஆரம்பித்திருக்கும் சூழலில், நமது தேனி மாவட்ட நிருபர் எம்.கணேஷ் நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் ஈடுபட்ட மோசடி கும்பல் குறித்த எக்ஸ்க்ளூசிவ் தகவல்களைக் கண்டறிந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். மிரளவைக்கும் அந்த நெட்வொர்க்கின் பின்னணியைப் பார்க்க > நீட் வைரஸ் - 2: நீட் தேர்வு: ஆள்மாறாட்ட கும்பலின் ஆணிவேர் எது? https://www.vikatan.com/social-affairs/education/series-about-neet-exam-2

டாஸ்க் ஃபோர்ஸின் வேலை என்ன?

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 4-ன்படி, அனைத்து அரசுத் துறைகளும் அமைச்சகங்களும் தங்களது ஒட்டுமொத்தப் பணிகளையும் தரவுகளையும் மக்கள் தளத்தில் (Public Domain) வெளிப்படைத்தன்மையோடு பகிர வேண்டும். ஆனால், உண்மையில் அப்படி இல்லை. அமைக்கப்படும் டாஸ்க் ஃபோர்ஸின் வேலைகளில், இந்தத் தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 4-ஐ முழுவதுமாகச் செயல்படுத்துவது மிக முக்கிய வேலையாக வரையறுக்கப்பட்டுள்ளது. எந்தவித ஒளிவுமறைவுமின்றி அரசுத் துறைத் தகவல்கள் அனைத்தும் பொதுவெளிக்கு வந்துவிட்டால், ஆர்.டி.ஐ ஆர்வலர்கள் யாரும் தாக்கப்பட மாட்டார்கள் எனக் கருதப்படுகிறது. அதுவே டாஸ்க் ஃபோர்ஸின் நோக்கமும்கூட!

ஜூ.வி பைட்ஸ்: சின்னத்தாய் அவள், நீட் வைரஸும் அதிரவைக்கும் `36' பேரும், ஆர்.டி.ஐ கொலைகள்!

இந்த டாஸ்க் ஃபோர்ஸில் யாரெல்லாம் இருக்க வேண்டும்... எப்படிச் செயல்பட வேண்டும்? துறைவாரியாகவோ அல்லது மாநிலம் முழுவதுக்குமான பொதுவான அமைப்பாகவோ உருவாக்கலாம். இவை அனைத்தையும் மாநிலங்கள் முடிவுசெய்துகொள்ளலாம். தமிழகம் மட்டுமல்ல, இதுவரை இந்தியாவின் எந்த மாநிலமும், இதை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அதற்கான சிறு முயற்சிகூட எடுக்கவில்லை.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாக தகவல்களைக் கேட்கும் ஆர்வலர்கள் பலர் தாக்கப்படுவதும், கடத்தப்படுவதும், கொலை செய்யப்படுவதும் இந்தியாவில் அதிகரித்துவருகிறது. வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தால், பல உயிர்கள் பறிபோவதுகுறித்து அரசு மெளனம் காப்பதாகக் குமுறுகின்றனர் ஆர்.டி.ஐ ஆர்வலர்கள்.

- இது தொடர்பான முழுமையான செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > அதிகரிக்கும் ஆர்.டி.ஐ கொலைகள்! - 'டாஸ்க் ஃபோர்ஸ்' என்ன ஆச்சு? https://www.vikatan.com/social-affairs/crime/increasing-rti-activists-murders

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு