Published:Updated:

ஜூ.வி பைட்ஸ்: வேலூர் `லாட்ஜ்' வில்லங்கம், வீரமணி `அமைதி'க்குப் பின்னால், தேர்வாணைய தகிடு தத்தங்கள்!

ஜூ.வி பைட்ஸ்
ஜூ.வி பைட்ஸ்

ஜூ.வி பைட்ஸ்:

வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் வடமாநில ஏழைப்பெண்களைக் குறிவைத்தே பாலியல் தொழில் புரோக்கர்கள் இயங்குவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, வேலூர் மக்களைப் பதறவைத்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சம்பவங்கள் அதை உறுதிப்படுத்துகின்றன.

அருணாசலப்பிரதேசம் சியாங் மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான பெண் ஐபோம் கம்சிம். இவர், தன் மகனின் புற்றுநோய்க்கு வேலூர் சி.எம்.சி மருத்துவமனை யில் சிகிச்சைப் பெறுவதற்காக, காகிதப் பட்டறைப் பகுதியில் இருக்கும் எஸ்.என்.ஆர் லாட்ஜில் தங்கியிருந்தார். ஒருகட்டத்தில் மகனின் மருத்துவச் செலவுக்கு அதிக பணம் தேவைப்பட்டிருக்கிறது. பரிதவித்த அந்தப் பெண், லாட்ஜ் மேலாளர் ஜெகதீசனிடம் தன் கஷ்டத்தைச் சொல்லி, ஏதேனும் வேலை கேட்டிருக்கிறார்.

ஜூ.வி பைட்ஸ்: வேலூர் `லாட்ஜ்' வில்லங்கம், வீரமணி `அமைதி'க்குப் பின்னால், தேர்வாணைய தகிடு தத்தங்கள்!

ஆரம்பத்தில் நல்லவரைப்போல் பேசிய ஜெகதீசன், அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய ஆரம்பித்தார். ஒருகட்டத் தில் அவரை லாட்ஜ் அறையில் அடைத்துவைத்து பாலியல் தொழிலுக்குள் தள்ள முயற்சி செய்திருக்கிறார். கடந்த பிப்ரவரி 20-ம் தேதி ஜெகதீசனிடமிருந்து தப்பிய அந்தப் பெண், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்தார். அதிர்ச்சியடைந்த போலீஸார், ஜெகதீசனை கைதுசெய்தனர். விசாரணையில் ஜெகதீசன் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். வேலூரில் இதுபோன்ற சம்பவம் நடப்பது புதிதல்ல.

- முழுமையான செய்திக் கட்டுரைக்கு > பாலியல் தொழிலுக்கு வலைவீசும் லாட்ஜ்கள்! - வேலூர் வில்லங்கம்... https://www.vikatan.com/news/general-news/prostitution-work-in-vellore-lodges

"கருத்தில் தவறு இல்லை... வார்த்தையில்தான் பிரச்னை!"

'தங்களது தேர்தல் உத்தியின் ஒரு பகுதியாக நாட்டார் தெய்வ வழிபாட்டை தி.மு.க கையிலெடுக்கப்போகிறது' என்ற தகவல், பல்வேறு தரப்பினரிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கடவுள் மறுப்புக் கொள்கையை பிரதானமாகக் கொண்டிருக்கும் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணியைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

" 'பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த வரதராஜன், உயர் நீதிமன்ற நீதிபதியாக ஆனதற்கு கருணாநிதிதான் காரணம்' என்று குறிப்பிட்டுப் பேசிய தி.மு.க எம்.பி-யான ஆர்.எஸ்.பாரதி, 'அது, அரிஜனங்களுக்கு கலைஞர் போட்ட பிச்சை' என்றார். அவரது பேச்சை பலரும் கண்டித்தார்கள். நீங்கள் ஏன் கண்டிக்கவில்லை?''

ஜூ.வி பைட்ஸ்: வேலூர் `லாட்ஜ்' வில்லங்கம், வீரமணி `அமைதி'க்குப் பின்னால், தேர்வாணைய தகிடு தத்தங்கள்!

''அவர் சொன்ன கருத்தில் தவறு இல்லை. அவர் பயன்படுத்திய வார்த்தையில்தான் பிரச்னை. உடனடியாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலையிட்டதையடுத்து ஆர்.எஸ்.பாரதி தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துவிட்டார். அதற்குமேல் அதுபற்றிப் பேச வேண்டியதில்லை."

''இதுவே ஹெச்.ராஜா போன்ற பா.ஜ.க தலைவர்கள் எவராவது இப்படிப் பேசியிருந்தால் நீங்கள் அமைதியாக இருந்திருப்பீர்களா?''

"ஹெச்.ராஜா உயர் நீதிமன்றத்தை விமர்சித்து சர்ச்சையாக ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, பிறகு வருத்தம் தெரிவித்தார். அதனால், நீதிமன்றம் அவரை விட்டுவிட்டது. அடுத்ததாக, பெரியார் குறித்து ஆட்சேபனைக்குரிய ஒரு கருத்து ஹெச்.ராஜாவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியானது. அதற்கு கண்டனங்கள் எழுந்தன. 'அதைப் பதிவிட்டது நான் அல்ல, என் அட்மின்' என்று அவர் சொன்ன பிறகு, அதை நாங்கள் பெரிதுபடுத்தவில்லை."

- முழுமையான பேட்டியை வாசிக்க > "தி.மு.க முற்றிலுமான நாத்திக இயக்கம் அல்ல!" - விளக்கம் கொடுக்கிறார் கி.வீரமணி https://www.vikatan.com/social-affairs/politics/dravidar-kazhagam-leader-k-veeramani-interview-march-4-2020

''அரசுப் பணியில் நீடிக்கும் முறைகேடு ஆசாமிகள்!''

அரசுப் பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் நடத்திய குரூப்-4, குரூப்-2 தேர்வுகள் மற்றும் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போலீஸ் தேர்வு ஆகியவற்றில் நடந்த முறைகேடுகள் வெளியாகி, தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கின. ஆனால் வழக்கை விசாரித்துவரும் சி.பி.சி.ஐ.டி போலீஸார், சில புரோக்கர்களை மட்டும்தான் கைது செய்துள்ளனர். இந்த முறைகேட்டில் பல பெருந்தலைகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்ற தகவல்கள் சுற்றும் நிலையில், 'சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை' என்றுதான் அனைத்து தரப்பினரும் சொல்லிவருகின்றனர்.

ஜூ.வி பைட்ஸ்: வேலூர் `லாட்ஜ்' வில்லங்கம், வீரமணி `அமைதி'க்குப் பின்னால், தேர்வாணைய தகிடு தத்தங்கள்!

இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரான எட்டிமங்கலம் ஸ்டாலின், '2006-ம் ஆண்டிலிருந்து டி.என்.பி.எஸ்.சி நடத்திய அனைத்து தேர்வுகளையும் விசாரிக்க வேண்டும். இந்த விசாரணையை சி.பி.ஐ போலீஸாரிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இதனால், கடந்த 14 ஆண்டுகளில் முறைகேடாக அரசுப்பணிகளில் சேர்ந்திருக்கும் உயரதிகாரிகள் உட்பட பலரும் ஆடிப்போய் உள்ளனர்.

- இந்த வழக்கு குறித்த முழுமையான செய்திக் கட்டுரையை வாசிக்க > ''அரசுப் பணியில் நீடிக்கும் முறைகேடு ஆசாமிகள்!'' - தேர்வாணைய தகிடுதத்தங்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது? https://www.vikatan.com/government-and-politics/corruption/tnpsc-scam-issue-march-04-2020

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு