Published:Updated:

ஜூ.வி பைட்ஸ் : சைக்கோடேலிக் பார்ட்டிகள் `பகீர்', திருவிழாவில் பப்ஜி போட்டி, அதிரடிக்கும் ஐ.ஏ.எஸ்!

பப்ஜி
பப்ஜி

பப்ஜி என்கிற ஆன்லைன் கேம் சிறுவர்களையும் இளைஞர்களையும் எந்தளவுக்கு அடிமையாக்கியுள்ளது என்பதற்கு உதாரணமாக, அவ்வப்போது துயரமான பல சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன

சமீபத்தில் கோவை சரவணம்பட்டி மற்றும் அவிநாசி சாலைப் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களிடம் போதைப்பொருள் விற்பனை செய்ய முயன்றதாக, சென்னை மற்றும் கேரளாவைச் சேர்ந்த இளைஞர்கள் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். 'எல்.எஸ்.டி' எனப்படும் போதை மருந்து தடவிய போதை ஸ்டாம்ப் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இன்னபிற போதை மருந்துகள்தான் அவை.

எல்.எஸ்.டி விலை உயர்ந்தது என்பதால் பெரும்பாலும் 'சைக்கேடேலிக் ராக்' மற்றும் 'ரேவ்' எனப்படும் போதை விருந்து கொண்டாட்டங்களில்தான் இதை அதிகம் பயன்படுத்துகின்றனர். அதாவது ஏற்கெனவே மிதமான போதையில் இருப்பவர்களை உச்சபட்ச போதைக்கு அழைத்துச் செல்வதுதான் சைக்கேடேலிக். தமிழில் இதற்கு 'மாயத்தோற்றம்' என்று பெயர். போதை ஏற ஏற, இசையின் ஒலியை ஏற்றிக்கொண்டே இருப்பார்கள். இசை ஒலிக்குத் தகுந்தாற்போல் போதையும் ஏறிக்கொண்டே இருக்கும்.

'எல்.எஸ்.டி-யை நாக்கில் வைத்தால் போதும்... கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து, அடுத்த எட்டு மணி நேரத்துக்கு அவர்கள் வேறு உலகுக்குச் சென்றுவிடுவார்கள். இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் குறுகியகாலத்திலேயே உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும். தற்போது கோவையில் கல்லூரி மாணவர்கள், ஐ.டி ஊழியர்கள், பெண்கள் எனப் பலரும் எல்.எஸ்.டி-யைப் பயன்படுத்துகிறார்கள்' என்றெல்லாம் தகவல்கள் கிடைக்க, கவலை கலந்த அதிர்ச்சியுடன் விசாரணையில் இறங்கினோம்.

பப்ஜி
பப்ஜி

- அந்த அதிர்ச்சி ரிப்போர்ட்டை, ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > எமனாக வருகிறது எல்.எஸ்.டி போதை... பெற்றோர்கள் மிக மிக மிக ஜாக்கிரதை! - கோவையை உலுக்கும் சைக்கோடேலிக் பார்ட்டிகள்

திருவிழாவில் பப்ஜி போட்டி... விளையாட்டா... விபரீதமா?

பப்ஜி என்கிற ஆன்லைன் கேம் சிறுவர்களையும் இளைஞர்களையும் எந்தளவுக்கு அடிமையாக்கியுள்ளது என்பதற்கு உதாரணமாக, அவ்வப்போது துயரமான பல சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. பப்ஜி விளையாடுவதைத் தடுத்ததற்காக தன் தந்தையையே கொன்ற மகன், பப்ஜி விளையாட பணம் கொடுக்க மறுத்த பாட்டியைக் கொன்ற பேரன், மணிக்கணக்காக பப்ஜி விளையாடியதால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சிறுவன்... என உலகெங்கும் நிகழ்ந்த சம்பவங்கள் நம்மைப் பதறவைக்கின்றன.

'பப்ஜி விளையாட்டைத் தடைசெய்ய வேண்டும்' என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கைவிடுக்கும் அளவுக்கு நிலைமை அச்சமூட்டுவதாக மாறியிருக்கிறது. இந்த நிலையில்தான், சிவகங்கை மாவட்டம் கல்லல் கிராம ஊர்த் திருவிழாவில் பப்ஜிக்கு எனப் பிரத்யேகமான போட்டி நடத்தப்போவதாக அறிவித்து சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றனர். அதுகுறித்த முழுமையான விவரம் அறிய > திருவிழாவில் பப்ஜி போட்டி... பரிசு ஒரு லட்சம்! - விளையாட்டா... விபரீதமா? https://www.vikatan.com/news/general-news/the-dangerous-of-online-game-pubg

அதிரடிக்கும் சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ்!

ஜூ.வி: ''எடப்பாடி பழனிசாமி ஆட்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

சசிகாந்த் செந்தில்: ''கர்நாடகத்தில் தேசிய கட்சிகளுக்குத்தான் முக்கியத்துவம் கிடைக்கும். ஆனால், தேசிய கட்சிகளைக் கரைந்துபோகச் செய்த பெருமை தமிழகத்துக்கு உண்டு. பகுத்தறிவு நிறைந்த தமிழக மக்களின் சிந்தனையை மழுங்கடிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. சட்டம் - ஒழுங்கு, பொருளா தாரத்தில் எல்லாம் தமிழ்நாடு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், குடியுரிமை திருத்த சட்டத்தைப் பற்றி எடப்பாடி பழனிசாமி அரசு சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். நாட்டில் 11 மாநிலங்கள் என்.ஆர்.சி சட்டத்தை அமல்படுத்த மறுத்துள்ளன. அந்த அரசுகளுக்கு மக்கள்மீது அக்கறை இருக்கிறது. ஆனால், எடப்பாடி அரசுக்கு மக்கள்மீது அக்கறை இருக்கிறதா?''

ஜூ.வி பைட்ஸ் : சைக்கோடேலிக் பார்ட்டிகள் `பகீர்', திருவிழாவில் பப்ஜி போட்டி, அதிரடிக்கும் ஐ.ஏ.எஸ்!

'மத்திய அரசின் பாசிசப் போக்குக்கு எதிராக எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்' என்று கூறி கலெக்டர் பதவியை உதறி, இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியவர் சசிகாந்த் செந்தில். சென்னையைச் சேர்ந்த இவர், சி.ஏ.ஏ, என்.ஆர்.சி ஆகியவற்றுக்கு எதிராகவும் தற்போது தீவிரமாகக் குரல்கொடுத்துவருகிறார். சென்னை வந்திருந்த சசிகாந்த் செந்திலைச் சந்தித்தோம்...

“சென்னை பெரம்பூர்தான் என் சொந்த ஊர். அப்பா-அம்மா இருவருமே அரசு ஊழியர்கள். 2008-ம் ஆண்டு நான் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சிபெற்றேன். கர்நாடக மாநில கேடர் என்பதால், பெங்களூரில் செட்டிலானேன். கர்நாடக மாநிலத்தில் மூன்று அரசுகளின்கீழ் பணிபுரிந்திருக்கிறேன். இறுதியாக மங்களூர் மாவட்டத்தில் பணியாற்றினேன்” என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். - அந்தப் பேட்டியை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > அப்போது பணத்தைவைத்து விளையாடினார்கள்... இப்போது மக்களைவைத்து விளையாடுகின்றனர்! முழுமையாக படிக்க - அதிரடிக்கும் சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ்

https://www.vikatan.com/government-and-politics/news/sasikanth-senthil-ias-interview-feb-23

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு