Published:Updated:

ஜூ.வி தொடர் ஹைலைட்ஸ்: கால் நூற்றாண்டுக் களேபரங்கள், 4,500 இடங்கள்தான் பிரச்னையா?

ஜூ.வி தொடர்
ஜூ.வி தொடர்

சிறையில் இருந்த சசிகலாவை ஒருமுறை காணவந்த ஜெயலலிதா, இவரிடம் கோபம்கொண்டு எழுந்து சென்ற சம்பவமும் நடந்திருக்கிறது.

ஜி.ராமச்சந்திரன். தமிழ்நாடு சிறைத் துறையில் 39 ஆண்டுகள் பணியாற்றியவர்; 1967-2006 இடைப்பட்ட காலகட்டத்தில் வார்டன் பதவியில் ஆரம்பித்து டி.ஐ.ஜி வரை ஒன்பது பதவிகளை வகித்து ஓய்வுபெற்றவர்; சிறப்பாக பணிபுரிந்ததற்காக 1985-ல் தமிழக முதலமைச்சரிடம் விருதும், 2002-ம் ஆண்டு ஜனாதிபதி விருதும் பெற்றவர்.

ஜூ.வி தொடர் ஹைலைட்ஸ்: கால் நூற்றாண்டுக் களேபரங்கள், 4,500 இடங்கள்தான் பிரச்னையா?

தமிழகத்தின் 12 சிறைகளின் சந்துபொந்துகளிலெல்லாம் புகுந்து வெளிவந்தவர். அரசியல் கைதிகள், அறம் காக்கக் கைதானவர்கள், சித்தாந்தத்துக்காகச் சிறைபட்டவர்கள், தாதாக்கள், கூலிப்படையினர், சைக்கோ கில்லர்கள், சொத்துக் காக சொந்தங் களையே கொன்றவர்கள், சாதியக் கொலையாளிகள், சந்தர்ப்ப வசத்தால் கொலையாளி ஆனவர்கள், டைம்பாஸ் அக்யூஸ்ட்டுகள், பிக்பாக் கெட்டுகள், பிளேடு போடுபவர்கள் என இவர் கடந்து வந்த மனிதர்கள் கலவையானவர்கள்.

தமிழகத்தில் கடந்த கால் நூற்றாண்டில் நடந்த அரசியல் களேபரங்கள், குற்றச்சம்பவங்கள் அனைத்திலும் தொடர்புடைய வர்கள் பெரும்பாலும் ராமச்சந்திரனின் கண்பார்வையில் தான் இருந்தார்கள். கருணாநிதி, வைகோ, சசிகலா, ஜெயேந்திரர் உள்ளிட்ட வி.ஐ.பி-களை சிறையில் லாகவமாகக் கையாண்ட அனுபவம் இவருக்கு உண்டு. அட்டைப்பட ஜோக் வெளியிட்டதற்காக ஜூனியர் விகடன் நிறுவனர் எஸ்.பாலசுப்ரமணியன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், ராமச்சந்திரனுடன் அவர் பழகிய அனுபவங்கள் அலாதியானவை. ஆட்டோ சங்கர் தொடங்கி வெல்டிங் குமார் வரை ஆபத்தான அக்யூஸ்ட்டுகளையும் இவர் சமாளித்த அனுபவங்கள் திகிலூட்டுபவை.

சிறையில் இருந்த சசிகலாவை ஒருமுறை காணவந்த ஜெயலலிதா, இவரிடம் கோபம்கொண்டு எழுந்து சென்ற சம்பவமும் நடந்திருக்கிறது. சாமியார் பிரேமானந்தாவின் மற்றுமொரு மறுபக்கம் ராமச்சந்திரன் மட்டுமே அறிந்த ரகசியம். சரவண பவன் அண்ணாச்சி, டாக்டர் பிரகாஷ்... ஆகியோர் இவரிடம் பகிர்ந்து கொண்ட வெளிவராத தகவல்கள் ஏராளம்.

- ஜூ.வி-யில் வெளிவரும் புதிய தொடர்களில் ஒன்று... 'ஜெயில்... திகில்... மதில்!' - தொடர் ஆசிரியர் மற்றும் தொடரைப் பற்றிய முழுமையான அறிமுகம் தரும் முதல் அத்தியாயத்தை முழுமையாக வாசிக்க > ஜெயில்... திகில்... மதில்! - புதிய தொடர் - 1 https://www.vikatan.com/news/general-news/series-about-prison-experience-by-g-ramachandran-1

நீட் வைரஸ் #KnowNeetNoNeet

இனி நடுத்தர, ஏழைக் குடும்பங்களின் குழந்தைகள் எல்லோரும் மருத்துவர் கனவைக்கூட காண முடியாதுபோலிருக்கிறது. காரணம், நீட். 'என்னது நீட்டா... பேசிப் பேசிப் புளிச்சுப்போன விஷயம். இனிமே அதையெல்லாம் தடுக்க முடியாது!' என்று நீங்கள் சொல்லலாம்.

இன்னமும்கூட தமிழகத்திலிருந்து நீட் தேர்வுக்கு எதிரான குரல்கள் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அதேநேரம் பெரும்பாலான மக்கள் விரக்தியால் அதிலிருந்து வெளியே வந்துவிட்டார்கள். "மருத்துவர் படிப்பு உயிரைக் காப்பாத்துற படிப்புய்யா... அது தரமா இருக்கணும்னா நீட் மாதிரி ஒரு தேர்வு இருந்தா நல்லதுதானே!" என்று கிராமத்துப் பெட்டிக்கடை வரை பேசத் தொடங்கிவிட்டார்கள். பெரும்பாலான பிள்ளைகள், மருத்துவக் கனவை விட்டொழித்துவிட்டு வெவ்வேறு படிப்புகளுக்கு இலக்குவைத்து நகரத் தொடங்கிவிட்டார்கள்.

"அப்படி இப்படிக் கூட்டிப்பார்த்தாலும் பல் டாக்டர் படிப்பையும் சேர்த்து வெறும் 4,500 இடங்கள். இதுக்காக ஏன் போராடிக்கிட்டுக் கிடக்கணும்? கணக்கு, வரலாறு, அறிவியல்னு 150 துறைகளுக்குமேல இருக்கு. அதுல ஒண்ணைத் தேர்ந்தெடுத்துப் படிங்கப்பா..." என்று கல்வியாளர்களும் வழிகாட்டத் தொடங்கி விட்டார்கள். "நீட் தேர்வே நடந்தாலும் நம்ம ஊர் பிள்ளைகள்தானப்பா மருத்துவக் கல்லூரிக்குப் போவுது. வெளிமாநில மாணவர்கள் இங்கே வந்து படிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. உங்களுக்கென்ன பிரச்னை?" என்று சில நியாயவான்கள் பேசவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

ஜூ.வி தொடர் ஹைலைட்ஸ்: கால் நூற்றாண்டுக் களேபரங்கள், 4,500 இடங்கள்தான் பிரச்னையா?

எல்லாம் சரி... உண்மையில், வெறும் 4,500 இடங்கள்தான் பிரச்னையா? 'மத்திய அரசு விடாப்பிடியாக இருக்கிறது. மாநில அரசும் பொறுப்பற்று இருக்கிறது' என்று உச்சு கொட்டி விட்டு, நாமும் நம் வேலையைப் பார்க்கப் போய்விடலாமா? ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க., பேருக்கு இரண்டு மசோதாக்களை உருவாக்கி டெல்லிக்கு அனுப்பி விட்டு கைகழுவிவிட்டது. டெல்லியும் அதை அழுக்குப் படாமல் திருப்பி அனுப்பிவிட்டது. 'அது கிடக்கட்டும்... அ.தி.மு.க அரசுக்கு எதிரான போராட்டத்தை யெல்லாம் தி.மு.க பார்த்துக் கொள்ளும்' என்று நானும் நீங்களும் அமைதியாக இருப்பது சரியா? நீட் எதிர்ப்பு என்பது, அரசியல் கட்சிகளின் பிரச்னை மட்டும் தானா? நீட் நம்மிடமிருந்து பறித்திருப்பது வெறும் 4,500 எம்.பி.பி.எஸ் இடங்களை மட்டும்தானா? நீட் தேர்வால் குலைந்தது நடுத்தர, ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் மருத்துவக் கனவு மட்டும்தானா?

- இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்வதுடன், இந்தத் தொடரின் முக்கியத்துத்தை இன்னும் விரிவாகச் சொல்லும் முதல் அத்தியாயத்தை முழுமையாக வாசிக்க > நீட் வைரஸ் - புதிய தொடர் - 1 https://www.vikatan.com/social-affairs/education/series-about-neet-exam-1

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு