Published:Updated:

"இந்தப் படம் எங்கேயிருந்து கிடைச்சது?" - வியந்து கேட்ட கலைஞர்! #VikatanVintage

அதுக்கு சிவாஜிகணேசன் வந்திருக்க சந்தர்ப்பம் இல்லையே! ஒருவேளை, அந்தப் பட பூஜையாக இருக்கலாம்" என்று யோசித்த கலைஞர், "ஒரு விஷயம் தெளிவாத் தெரியுது.

கலைஞர்
கலைஞர்

சென்னை பீச் ரோடு...

அண்ணா சமாதிக்கு அருகில் இருக்கும் 'சுராங்கனி ரெஸ்டா ரென்ட்டை' ஒட்டி நடந்துபோனபோது, அங்கு ஒரு பெட்டிக்கடையில் தொங்கவிடப்பட்டு இருந்த அந்தப் புகைப்படம் 'பளிச்'சென்று நம் கவனத்தை ஈர்த்தது.

தமிழக அரசியலின் முப்பெரும் முதல்வர்களான கலைஞர், எம்.ஜி. ஆர்., ஜெயலலிதா மூவரும் ஒரே மேடையில் சேர்ந்து நின்று சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் அபூர்வ, பழைய புகைப்படம் அது! நடுநாயகமாக கலைஞர்; அவருக்கு இடதுபுறம் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும்; கலைஞருக்கு வலதுபுறம் இளமையாக, படு ஸ்லிம்மாக நடிகர் திலகம்! அவருக்கு அருகில் கண்ணதாசனின் சகோதரர் ஏ.எல்.சீனிவாசன்.

71-ம் வருஷத்துக்கு முன்னால் எடுக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் நண்பர் (எம்.ஜி.ஆர்.) தி.மு.க-விலேதான் இருந்தார்.

அந்தப் புகைப்படம் பற்றி விசாரித்தபோது, "அஞ்சாறு வருஷத் துக்கு முன்னே சிந்தாதிரிப்பேட்டை வழியா நடந்து போயிட்டு இருந்தபோது, ஒரு போட்டோ ஸ்டூடியோ வாசல்ல இந்தப் படத்தைப் பார்த் துட்டு, நானும் உங்களை மாதிரி தாங்க மெய்ம்மறந்து நின்னேன். ஸ்டூடியோவில் விசாரிச்சப்போ 'எங்கள் தங்கம்' 100-வது நாள் விழாவில் எடுத்ததுன்னு சொன் னாங்க. சட்டுனு ரூபா கொடுத்துக் கையோட இந்தப் படத்தை வாங்கிட்டு வந்துட்டேன்" என்றார் பெட்டிக்கடை இளைஞர் லத்தீப்.

புகைப்படத்தின் பின்னணி விஷயங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்காக, முரசொலி அலுவலகத்தில் கலைஞரைச் சந்திக்கச் சென்றோம்.

புகைப்படத்தைக் கையில் வாங்கிப் பார்த்த நிமிடத்தில், டக்கென்று இதழோரத்தில் வெடித்துப் பூத்தது கலைஞருடைய அந்தப் பிரத்யேக புன்னகைப் பூ! "இந்தப் படம் எங்கேயிருந்து கிடைச்சது?" என்று நம்மிடம் கேட்டுத் தெரிந்துகொண்ட கலைஞர், இப்படியும் அப்படியுமாகச் சாய்த்து வெகு நேரம் அந்தப் புகைப்படத்தை உற்றுப் பார்த்துக்கொண்டு இருந்தார்.

"இந்தம்மாவோட 100-வது படமான 'திருமாங்கல்யம்' படத்தோட விழாவுக்குக்கூட என்னைத்தான் விருது கொடுக்கும்படி கேட்டுக்கிட்டாங்க. பல்கலைக்கழக சென்டினரி ஹால்லதான் விழா நடந்தது. ஆனா, அந்த விழாவுக்கு எம்.ஜி.ஆர். வரலை. அப்போ அவங்களுக்குள்ளே 'டெர்ம்ஸ்' சரியில்லே" என்று சிரித்தார் கலைஞர்.

"இந்தப் படம் எங்கேயிருந்து கிடைச்சது?" - வியந்து கேட்ட கலைஞர்! #VikatanVintage

"எங்கள் தங்கம் படவிழா போட்டோவாக இருக்கலாம்' என்று, பெட்டிக் கடைக்காரர் லத்தீப் கூறிய விஷயத்தைக் கலைஞரிடம் கூறினோம்.

"இருக்கலாம். ஆனா, அதுக்கு சிவாஜிகணேசன் வந்திருக்க சந்தர்ப்பம் இல்லையே! ஒருவேளை, அந்தப் பட பூஜையாக இருக்கலாம்" என்று யோசித்த கலைஞர், "ஒரு விஷயம் தெளிவாத் தெரியுது. அதாவது, நான் முதலமைச்சரா இருந்தப்போ இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது. அதிலும் 71-ம் வருஷத்துக்கு முன்னால் எடுக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் நண்பர் (எம்.ஜி.ஆர்.) தி.மு.க-விலேதான் இருந்தார். இந்தப் படத்தைப் பத்தி மிகச் சரியான தகவல்களைக் கேட்கணும்னா ஏ.எல்.எஸ்-கிட்டேதான் கேட்க முடியும். ஆனா, இப்போ அவர் உயிரோட இல்லையே!" என்று கூறிவிட்டு, புகைப்படத்தை நம் கையில் கொடுக்கும் முன், மீண்டும் ஒரு தடவை வெளிச்சத்தில் போட்டோவைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார் கலைஞர்.

- காலப்பெட்டகம் - விகடன், 1993

# விகடன் சந்தாதாரர்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்களின் முக்கியமானது, 2006 முதல் இன்று வரையிலான அனைத்து விகடன் இதழ்களையும் எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்பதே. நம் தளத்திலுள்ள லட்சக்கணக்கான கட்டுரைகளும் பேட்டிகளும் பொக்கிஷங்களாக வாசிக்கக் கிடைக்கின்றன. > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > https://bit.ly/2KccySR