Published:Updated:

இந்த '2021'-ல் உணவு பிசினஸ், சூப்பர் சக்சஸ்! #கெபாபிஸ்தான் வழங்கும் வாய்ப்பு.

கெபாபிஸ்தான்
கெபாபிஸ்தான்

உலகிலேயே அதிவிரைவாக வளர்ந்துவரும் துறையாக இந்தியன் ரெஸ்டாரண்ட் மார்க்கெட் உள்ளது. எனவே சூர்யவம்சம் சரத்குமார் போல ஒரே பாட்டில் தொழில்முனைவோராக முன்னேற நினைக்கும் அனைவருக்கும் ரெஸ்டாரண்ட் பிசினஸ் நிச்சயம் கைக்கொடுக்கும்.

கனவு போல இருக்கிறது, இதோ 2020 முடிந்து 2021 பிறந்துவிட்டது! 2020-ல் எவ்வளவோ பிரச்னைகளைப் பார்த்துவிட்டோம், இருந்தாலும் 'நாங்க வாங்காத அடியா? போங்க தம்பி' என்று நகைச்சுவையோடும் நம்பிக்கையோடும் அடுத்த நகர்வை எடுத்து வைக்கவேண்டிய நேரமிது! போனது போகட்டும், 2021-ல் பிஸினஸ் ஆரம்பிக்கலாமா? எதிர்காலம் சிறக்குமா? என்றால், 'இந்தியப் பொருளாதாரம் இனி 9% வளர்ச்சியைக் காணப்போகிறது. அதனால் உறுதியாய் பிசினஸ் தொடங்கலாம்!' என்று வாயில் சர்க்கரை போட்டு நமக்கு நம்பிக்கைத் தெரிவிக்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

உணவு - நேற்றும் இன்றும் நாளையும் தேவை...

மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் முதன்மையாக இருப்பது 'உணவு'. காலை முதல் இரவு வரை பரபரப்பாக பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், உணவு உண்ணாமல் ஏது வாழ்க்கை? முன்பு சமைக்க நேரமில்லை என்றாலோ லீவு விட்டாலோ நேராக நமக்குப் பிடித்த ரெஸ்டாரண்ட்டுக்கு நடையைக் கட்டிவிடுவோம். இப்போதெல்லாம் வீட்டுக்கே வந்து உணவுகளை டெலிவரி செய்யும் ஆப்கள் வந்துவிட்டன, வேலை இன்னும் சுலபமாகிவிட்டது, மேலும் தொற்று நேரத்தில் இந்தச் சேவை அத்தியாவசியமாகிவிட்டது.

இதுபோன்ற காரணங்களால்தான் உலகிலேயே அதிவிரைவாக வளர்ந்துவரும் துறையாக இந்தியன் ரெஸ்டாரண்ட் மார்க்கெட் உள்ளது. எனவே சூர்யவம்சம் சரத்குமார் போல ஒரே பாட்டில் தொழில்முனைவோராக முன்னேற நினைக்கும் அனைவருக்கும் ரெஸ்டாரண்ட் பிசினஸ் நிச்சயம் கைக்கொடுக்கும். அதிலும் பிரான்சைஸ் (Franchise) ரெஸ்டாரண்ட் பிசினஸ் எளிமையாகவும், விரைவாகவும் வளர்ச்சியை அளிக்கிறது.

இந்த '2021'-ல் உணவு பிசினஸ், சூப்பர் சக்சஸ்! #கெபாபிஸ்தான் வழங்கும் வாய்ப்பு.

கவனம் ஈர்க்கும் பிரான்சைஸ்'ன் 8 அம்சங்கள்:

* ஏற்கனவே பிரபலமான ஒரு உணவு நிறுவனத்தின் பிரான்சைஸ்-ஐ எடுத்து நடத்துவதால், ரெஸ்டாரண்டை நிறுவுவதற்கான இடத்தைத் தேர்வு செய்வது மற்றும் தொழிலுக்கான முதலீடு செய்வது மட்டுமே உங்களின் பணியாக இருக்கிறது.

* ஆப் மூலம் உணவை ஆர்டர் செய்யும்போது பிரபலமான ஹோட்டலின் பெயர்களையே மக்கள் அதிகம் தேர்வு செய்வார்கள். எனவே, பிராண்டட் பெயர் கொண்ட பிரான்சைஸ்-ஐ எடுப்பது பிசினஸை விரைவாகச் சூடுபிடிக்கச் செய்யும்.

* ஏற்கனவே வெற்றி அடைந்திருக்கும் தொழிலின் அங்கமாக ஆகுவதால், உங்களால் விரைந்து லாபம் பார்க்க முடியும்.

* பிசினஸ் பிளான் கையில் இருப்பதால், ஒவ்வொரு பிசினஸ் நகர்வையும் நீங்களே உருவாக்கத் தேவையில்லை.

* பிரான்சைஸி நிறுவனத்தின் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் சப்போர்ட் கிடைக்கிறது. (உதாரணம், உங்கள் தாய் நிறுவனம் செய்யும் விளம்பரம் உங்கள் கிளைக்கும் சேர்த்துதான்)!

* வங்கிகளில், வளர்ச்சியடைந்திருக்கும் பிசினஸ்களுக்கு நிதி கிடைப்பதில் பிரச்னை இருக்காது.

* உங்கள் பிரான்சைஸ் ரெஸ்டாரண்ட் பெயர் பிரபலமானது என்பதால், நுகர்வோர் அதிகம் ஈர்க்கப்படுவர்.

* உங்கள் கடையின் பெயர் பிரபலமானது என்பதால் உங்களுக்கும் அது பெருமை சேர்க்கும்.

இப்படிப் பல நன்மைகளை பிரான்சைஸ் பிசினஸ் மூலம் உங்களால் பெற முடியும் என்பதால், நம்பிக்கையுடன் பிரான்சைஸ் தொழிலை எடுத்து நடத்துவதில் தயக்கம் தேவையில்லை என்கின்றனர் தொழில் வல்லுனர்கள்.

வளர்ச்சி உங்கள் வசம் - 'கெபாபிஸ்தான்' (Kebabistaan)!

அரேபிய உணவான கெபாப்களுக்குப் பெயர்பெற்ற ரெஸ்டாரன்ட் 'கெபாபிஸ்தான்'. வெஜ் கெபாப், நான் வெஜ் கெபாப், கிரில்கள், புலாவ் வகைகள், ஸ்பெஷல் பிரியாணிகள், டெசர்ட்ஸ், ஷேக்ஸ் எனப் பல்வேறு வகையான உணவுகளை வழங்கி உணவுப் பிரியர்களின் ஃபேவரட் ஆக இன்று உயர்ந்துள்ளது கெபாபிஸ்தான். சுவையான உணவுகளை எப்படிச் செய்கிறார்கள்? உணவுகளை செய்யும் இடத்தின் தூய்மை எவ்வாறு இருக்கிறது? போன்றவற்றை நுகர்வோரால் டைனிங் டேபிளில் இருந்துகொண்டே பார்த்து தெரிந்துகொள்ளும் பொருட்டு கெபாபிஸ்தானின் ரெஸ்டாரண்ட் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் நுகர்வோர் ஈர்க்கப்படுவதுடன், அவர்களின் நம்பகத்தன்மையையும் கெபாபிஸ்தானால் பெற முடிகிறது.

சுவை, தரம் & ஆரோக்கியமிக்க உணவுகள் மக்களிடையே கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன், 20 ஆண்டு காலமாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் கவி குரூப் நிறுவனத்தின் ஓர் அங்கமான, 'மீட் அண்ட் ஈட்' ரெஸ்டாரன்ட் ஏற்கனவே தமிழகத்தில் மட்டும் 250-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. அதே வரிசையில் தற்போது கெபாபிஸ்தானும் நம்பிக்கையான வியாபார வாய்ப்பாக உருமாறியுள்ளது.

உணவுத் துறையில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா? இந்த 2021-ல் வளர்ச்சியை எட்டிப் பிடிக்க நீங்களும் ஆசைப்பட்டால், ஆர்வமுடன் அடியெடுத்து வையுங்கள் வியாபாரத்தில், அது கெபாபிஸ்தானாக இருந்தால் டபுள் வெற்றிதான்!

பிரான்சைஸ் குறித்து அனைத்து விவரங்களும் அறிய, ஒரேயொரு கால் செய்யுங்கள்: 9962983824

அடுத்த கட்டுரைக்கு