Published:Updated:

குடும்பத்தின் முக்கியம் சொல்லும் கிறிஸ்துமஸ்! கொண்டாடுவோம் with #Kebabistaan

கெபாபிஸ்தான்
News
கெபாபிஸ்தான்

செல்போன்களில் இருந்து கண்களை எடுத்துவிட்டு, உங்கள் பார்வையை பக்கத்து மனிதரிடம் திருப்புங்கள். வீட்டுக்குள்ளேயே இருந்தாலும், வீட்டில் இருப்பவர்களுக்கு என்ன வேண்டும் என்று தெரிந்து, கேட்டு, அளவளாவுவதில்தான் இருக்கிறது சந்தோஷமே!

இது கிறிஸ்துமஸ் காலம், உலகமெங்கிலும் உள்ள மக்கள் புது விடியலை, புது வருடத்தை நோக்கி ஆர்வமுடன் காத்துக்கிடக்கும் நேரம் இது. இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளைத் தங்கள் குடும்பத்துடன் இணைந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடக் கிடைத்த நல்லதொரு வாய்ப்பாகவே பார்க்கின்றனர் மேலை நாட்டு மக்கள். மிகுந்த குளிரான காலமாக இருக்கும்போதும், உறவுகளின் அன்பு தரும் கதகதப்பு அவர்களின் உடலையும், உள்ளத்தையும் இதமாக்குகிறது. அதுதான் கிறிஸ்துமஸ்-ன் சிறப்பு...

குடும்பத்துக்காக நேரம் ஒதுக்குகிறீர்களா?

இந்த வருடம் முடியப்போகிறது. பார்க்காத இன்னல்களை எல்லாம் பார்த்துவிட்டோம். இதோ இப்போது மூச்சு விடக் கொஞ்சம் நேரம் கிடைத்துள்ளது. நிலைமை மீண்டும் மகிழ்ச்சியாகும் என்கிற ஒரு துளி நம்பிக்கை எல்லோருக்குள்ளும் துளிர்த்து எழ ஆரம்பிக்கிறது. உறவுகளையும், நண்பர்களையும் பற்றி சிந்திக்க சிறந்த நேரமும் இதுவே! 'நலம். நலமறிய ஆவல்!' - லெட்டர் சென்று சேர எடுக்கும் நாட்கணக்கிலா நம் பந்தம் இருக்கிறது? பந்தங்களைப் புதுப்பிக்க தேவையெல்லாம், ஒரேயொரு அன்பான வார்த்தை, ஒரேயொரு போன் கால், ஒரேயொரு வாட்ஸாப் மெசேஜ். அவ்வளவுதானே?

மனிதன் ஒரு சமூக விலங்கு. உயிருள்ள மனிதனுக்கு பிற உயிர்களின் அன்பும் ஸ்பரிசமும்தான் தேவை. செல்போன்களில் இருந்து கண்களை எடுத்துவிட்டு, உங்கள் பார்வையை பக்கத்து மனிதரிடம் திருப்புங்கள். வீட்டுக்குள்ளேயே இருந்தாலும், வீட்டில் இருப்பவர்களுக்கு என்ன வேண்டும் என்று தெரிந்து, கேட்டு, அளவளாவுவதில்தான் இருக்கிறது சந்தோஷமே! காசில்லாமல் வரும் இந்த மகிழ்ச்சியை மிஸ் செய்துவிடாதீர்கள். இதற்குத்தான் கிறிஸ்துமஸ், இன்னும் பல பண்டிகைகள், எல்லாமே...

குடும்பத்தின் முக்கியம் சொல்லும் கிறிஸ்துமஸ்! கொண்டாடுவோம் with #Kebabistaan

கிறிஸ்துமஸ் என்றால் விருந்து இல்லாமலா?

நம் முதல் தேவையான உணவில் திருப்தி அடைந்தால்தான் அடுத்த வேலையைப் பார்க்க முடியும். அதனால்தான் மனிதர்கள் கூடும் கொண்டாட்டங்களில் விருந்துக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அன்புடன் பரிமாறப்படும் உணவு வயிற்றுக்கு திருப்தி அளிப்பதோடு, மனதுக்கும் திருப்தி அளிக்கிறது! அதனால்தான் உங்கள் உறவுகளுடன் கூடிப் பேசி குதூகலித்து, வயிறார சிறந்த விருந்து உண்ண ஏற்பாடு செய்துள்ளது 'கெபாபிஸ்தான்' ரெஸ்டாரன்ட்.

'கெபாபிஸ்தான்' வழங்கும் ஸ்பெஷல் கிறிஸ்துமஸ் டிரீட்!

முகலாய உணவான 'கெபாப்'களை மிரட்டலாய் பல வெரைட்டிகளில் வழங்குகிறது கெபாபிஸ்தான். சிக்கன் சீக் கெபாப், கிரில்டு தந்தூரி விங்க்ஸ், முர்க் ஹரியாலி கெபாப், முர்க் காலி மிர்ச் கெபாப், மட்டன் ஷீக் கெபாப், ஃபிஷ் டிக்கா என ஆளை அள்ளுகின்றன இவர்களின் அயிட்டங்கள் ஒவ்வொன்றும் (வெஜ் கெபாப்ஸும் இருக்கு பாஸ்!).

கெபாப் மட்டுந்தானா? நஹி... பனீர் ரோல், சிக்கன் டிக்கா ரோல், முர்க் ஆச்சாரி கெபாப் ரோல், முர்க் மலாய் கெபாப் ரோல், வெஜ் மற்றும் நான் வெஜ் சாலட்ஸ், உசத்தியான ருசியில் கிரில்கள், புலாவ் வகைகள், ஸ்பெஷல் பிரியாணிகள் (பிரியாணி இல்லாமல் எப்படிங்க!), டெஸர்ட்ஸ் மற்றும் பலவிதமான பானங்களை வழங்கி, ஒரு முழுமையான கிறிஸ்துமஸ் விருந்து படைக்கிறது கெபாபிஸ்தான். முக்கியமாக இவர்களின் சிக்னேச்சர் டிஷ்ஷான 'தல்வார் சிக்கன்'-ஐ டேஸ்ட் பண்ண மறந்துடாதீங்க!

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் காம்போ:

நான்-வெஜ் காம்போ ரூ. 299/- : வெஜ் சாலட், பீட்டா பிரெட் (1 பீஸ்), நீங்கள் தேர்வு செய்யும் சிக்கன் கபாப் (2), தந்தூரி கிரில்டு சிக்கன் - தல்வார்(1), சிக்கன் கீமா பிரியாணி, சிக்கன் கபாப் ரோல் (1/2 பகுதி), குலாப்ஜாமுன் (2), சாய்ஸ் ஆஃப் டிரிங்க்

வெஜ் காம்போ ரூ. 249/- : வெஜ் சாலட், பீட்டா பிரெட் (1 பீஸ்), பனீர் டிக்கா கபாப் (2), மஷ்ரூம் கபாப் (2), பிளெய்ன் பிரியாணி / புலாவ், பனீர் டிக்கா ரோல் (1/2 பகுதி), குலாப் ஜாமுன் (2), சாய்ஸ் ஆஃப் டிரிங்க்

கிறிஸ்துமஸ் மற்றும் புது வருடத்தை உங்கள் நெருங்கியவர்களுடன் ருசியான உணவருந்தி கொண்டாட ஆசைப்பட்டால், யோசிக்காமல் கெபாபிஸ்தானுக்கு வண்டியை விடுங்க, பண்டிகை களை கட்டட்டும்! மேலும் விவரங்களுக்கு - 78689 78689.