Published:Updated:

‘68 வருட காதல்; 36 வருட தேடல்’- ஆசிரமத்தில் ஒன்று சேர்ந்த கேரள தம்பதி!

Couple
Couple

தள்ளாத வயதிலும் சையத் இருந்த திசையை நோக்கி சுபத்ராவின் கால்கள் பயணப்படுகிறது. அவரது மனம் பழைய நினைவுகளை மெல்ல அசைப்போடுகிறது. அந்தக்குரலுக்கான விடையை தேடுகிறது.

தனிமையின் வலி மிகவும் கொடுமையானது. அதுவும் முதுமையில் தனிமை மிகவும் ரணமானது. திருச்சூரைச் சேர்ந்த சுபத்ராவுக்கு வயது 82. தன்னை பராமரிக்க வேண்டிய பிள்ளைகள் காலமானதால் சுபத்ரா அனாதையாக்கப்பட்டார். வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகள் சுபத்ராவுக்கு மேலும் ரணத்தைக் கொடுத்தது. கொடுங்கல்லூர் வீதிகளில் பசியுடன் சுற்றித்திரிந்தவர் அங்குள்ள கோயிலில் மயங்கி விழுந்தார். அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து புல்லூத்து என்ற இடத்தில் உள்ள முதியோர் இல்லத்துக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

‘68 வருட காதல்;  36 வருட தேடல்’- ஆசிரமத்தில் ஒன்று சேர்ந்த கேரள தம்பதி!

உறவுகளால் கைவிடப்பட்ட நிலையில் சையது (வயது 90) என்பவர் அந்த முதியோர் இல்லத்துக்கு ஆகஸ்ட் மாதம் வருகிறார். சையத்தின் குரல் சுபத்ராவின் மனதைத் தொந்தரவு செய்கிறது. இது தனக்கு மிகவும் பரீட்சையமான குரல் என்பது அவருக்குத் தோன்றுகிறது. முதியோர் இல்லத்துக்கு வந்த புதிய விருந்தாளியைக் காண சுபத்ராவுக்கு ஆர்வம் ஏற்படுகிறது. தள்ளாத வயதிலும் சையத் இருந்த திசையை நோக்கி சுபத்ராவின் கால்கள் பயணப்படுகிறது. அவரது மனம் பழைய நினைவுகளை மெல்ல அசைபோடுகிறது. அந்தக்குரலுக்கான விடையைத் தேடுகிறது. சுபத்ராவின் கால்கள் அந்த குரல் வந்த திசையை அடைந்துவிட்டது. அவரது மனமோ தொடர்ந்து தேடலில் தான் இருக்கிறது. தனக்கு பரீட்சையமான குரலுக்கு சொந்தக்காரரைக் கண்கள் தேடுகிறது.

சுபத்ராவின் விழிகள் சையத்தைக் கண்டது. தேடலுக்கான விடை கிடைத்துவிட்டது. ஆம்., சுபத்ராவின் 36 வருட தேடலுக்கான விடை அது. சுபத்ராவின் வாழ்வில் இரண்டாவது முறையாக சையது வசந்தத்தை ஏற்படுத்திவிட்டார். இருவருக்கும் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டதும் திகைத்துவிட்டனர். சில நிமிடங்கள் மவுனமே அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்தது. இருவரின் உதடுகளும் மெல்லிய புன்னகையை வெளிப்படுத்தியது. அவர்கள் நீண்ட பழகியவர்கள் போல் பேசிக்கொண்டனர். சுற்றி இருந்தவர்களுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. இருவரும் தங்கள் கதையைச் சொல்லி முடித்ததும் அந்த இடமே விழாக்கோலம் பூண்டது விருந்துகள் தயாரானது. அங்கிருந்தவர்கள் இனிப்புகளைப் பரிமாறி அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

‘68 வருட காதல்;  36 வருட தேடல்’- ஆசிரமத்தில் ஒன்று சேர்ந்த கேரள தம்பதி!

திருச்சூர் தான் சுபத்ராவின் பூர்வீகம். இளம் வயதிலே கணவனை இழந்த சுப்தராவுக்கு இரண்டு குழந்தைகள். ஏறக்குறைய 15 வயது இருக்கும். சுபத்ராவின் வீட்டருகே தான் சையத் வசிந்து வந்துள்ளார். சுப்தரா மீது காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்துகொண்டனர். வாழ்க்கை குறித்த புரிதல் இல்லாத வயதில் சூழ்நிலையால் விதவையான சுபத்ராவின் வாழ்வில் சையத் முதன்முறையாக வசந்தத்தை ஏற்படுத்தினார். 1983-ம் ஆண்டு வேலை தேடி வட இந்தியாவுக்குச் செல்வதாகக் கூறி சையத் புறப்பட்டார். அது அவர்களது 30-வது திருமண ஆண்டு. விதியின் காரணமாக இருவரும் அதன்பின் பார்த்துக்கொள்ளவே இல்லை.

`இரவு முழுவதும் முகாம்.. உள்காயம்.. நெஞ்சை உலுக்கிய புகைப்படம்'-பரிதாபமாக உயிரிழந்த மேற்குவங்க யானை!

சையதின் வருகைக்காக சுபத்ராவும் அவரது பிள்ளைகளும் காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காலங்கள் ஓடியது சுபத்ரா தனது பிள்ளைகளுடன் நாள்களை கழித்தார். முதுமையில் காரணமாக அவரது பிள்ளைகள் இறந்துவிட சுபத்ராவை கவனித்துக்கொள்ள ஆள் இல்லை. ஜூலை மாதம் தான் முதியோர் இல்லத்தில் தஞ்சமடைந்தார்.

‘68 வருட காதல்;  36 வருட தேடல்’- ஆசிரமத்தில் ஒன்று சேர்ந்த கேரள தம்பதி!

சுபத்ராவின் கதை இதற்கு முன்பு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. சையத் இப்போது அவரது வாழ்வில் மீண்டும் வசந்தத்தை ஏற்படுத்திவிட்டார். இருவரும் பழைய நினைவுகளில் மூழ்கிவிட்டனர். சையத் கிடைத்த மகிழ்ச்சியை ஒரு அழகான இன்னிசை பாடல் மூலம் வெளிப்படுத்தினார் சுபத்ரா. ஆதரவற்ற நிலையில் இந்த இல்லத்திற்கு இருவரும் வந்தபோது தங்கள் வாழ்க்கையில் ஒரு சஸ்பென்ஸான க்ளைமாக்ஸ் இருக்கும் என்பதை இருவரும் அறிந்திருக்கவில்லை.

அடுத்த கட்டுரைக்கு