Published:Updated:

இப்போது முடிசூடும் உதயநிதிக்கு அப்போது 'அரசியல் ஆர்வம்' அவ்ளோதான்!

vikatan top 10
Listicle
vikatan top 10

#VikatanTop10


சமீபத்திய அப்டேட்களில் மிகுந்த கவனம் ஈர்த்த 10 பதிவுகளின் தொகுப்பு.


1
உதயநிதி

`வளர்பிறையில் வாரிசுக்குப் பதவி'... முடிசூடுகிறார் உதயநிதி!

> தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மகனும் திரைப்பட நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணிச் செயலாளர் பதவிக்கு முடிசூட்டு விழா வியாழக்கிழமை மாலை நடைபெற உள்ளது. உண்மைதான். செவ்வாய்க்கிழமை அமாவாசை, இன்று பாத்திமை, வியாழக்கிழமை வளர்பிறை என்பதால் அன்று மாலை முறைப்படி அறிவிப்பு வரவுள்ளது. இதுவும் நல்ல நேரம் பார்த்தே இந்த அறிவிப்பையும் வெளியிட உள்ளதாம் தி.மு.க. தலைமை. கருணாநிதி குடும்பத்தில் மூன்றாம் தலைமுறையின் அரசியல் என்ட்ரி வளர்பிறை நாளில் ஆரம்பமாகிறது. > `வளர்பிறையில் வாரிசுக்குப் பதவி'... முடிசூடுகிறார் உதயநிதி! > முழுமையான செய்திக்கு க்ளிக் செய்க


2
மழை நீர் சேமிப்பு

அப்படி மழைநீரைச் சேமிப்பது சாத்தியம்தான்!"

> வீணாகும் மழைநீரைச் சேமிக்க ஒரு விவசாயி கூறும் திட்டம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. `மண்ணை வளமாக்கவும், எதிர்கால சந்ததியினருக்கு நிலத்தடியில் தண்ணீரைப் பாதுகாத்து வைத்துச் செல்லவும் இத்திட்டம் உதவும்' என்கிறார்கள். பெயர் குறிப்பிட விரும்பாத விவசாயி ஒருவர், தன் விளைநிலத்திலுள்ள பம்ப்செட் மோட்டாரை வைத்து, மண்ணும் மக்களும் பயனுறும் வகையில் அருமையான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது விவசாயிகளை மட்டுமல்ல... அரசு அதிகாரிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. > "வீடியோவை ஆய்வு செய்றோம்... அப்படி மழைநீரைச் சேமிப்பது சாத்தியம்தான்!" - நிஜமாகும் வைரல் வீடியோ > முழுமையான செய்திக் கட்டுரைக்கு க்ளிக் செய்க


3
சசிகலா

தினகரனிடம் ஆதங்கப்பட்ட சசிகலா

> "அ.ம.மு.க-விலிருந்து ஒவ்வொரு நிர்வாகிகளாக விலகிச் செல்வது குறித்து, சில விஷயங்களை விளக்கியிருக்கிறார் தினகரன். தங்க தமிழ்ச்செல்வன் விலகியதற்கான தனிப்பட்ட காரணங்கள், இசக்கி சுப்பையாவுக்கு அரசுத் தரப்பில் இருந்து வர வேண்டிய கான்ட்ராக்ட் பணம் உள்ளிட்ட விவரங்களைக் கூறியிருக்கிறார். இதைக் கேட்டுக்கொண்ட சசிகலா, `நம்மிடம் அவர்கள் நன்றாகத்தானே இருந்தார்கள். ஒவ்வொருவராக விலகிச் செல்வது நல்லதில்லை. இனி யாரும் நம்மிடமிருந்து விலகிச் செல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்' எனக் கூறியிருக்கிறார்." > 'நம்மை விட்டு ஏன் விலகிச் செல்கிறார்கள்?' - தினகரனிடம் ஆதங்கப்பட்ட சசிகலா > முழுமையான செய்திக் கட்டுரைக்கு க்ளிக் செய்க


4
அலகாபாத் நீதிபதி

"சாதி அடிப்படையில்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்!"- அலகாபாத் நீதிபதி

> 'கொலீஜியம் குழுவின் நீதிபதி தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை' என்று பல்வேறு தரப்பினரும் பல ஆண்டுகளாகக் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ரங் நாத் பாண்டே, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தை முடிவுசெய்வது, சாதியும், சிபாரிசுகளும்தான்" என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில், "உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பாரபட்சம் நிலவுவதுடன், வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பது, அறிந்தவர்களுக்குப் பதவிகொடுப்பது போன்ற அநியாயங்கள்தான் நிறைந்திருக்கின்றன" என்று குறிப்பிட்டிருக்கிறார். > "சாதி அடிப்படையில்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்!"- அலகாபாத் நீதிபதி > முழுமையான செய்திக்கு க்ளிக் செய்க


5
ஹைட்ரோ கார்பன்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கொடுத்தது யார்?

> "தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான், ஒரேயொரு நிறுவனத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டது" என்று அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார். இதற்கு, "ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு தி.மு.க ஆட்சியில் உரிமம் வழங்கவில்லை. ஆய்வுக்கு மட்டுமே அனுமதி வழங்கினோம்" என்று டி.ஆர்.பி.ராஜா பதிலளித்தார். > ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கொடுத்தது யார்? - சட்டப்பேரவையில் காரசார விவாதம் > முழுமையான செய்திக்கு க்ளிக் செய்க


6
ஸ்டாக்கிங் பிரச்னை

இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்!

> ஸ்டாக்கிங் பிரச்னை இன்று பெண்களுக்கு மட்டுமில்லை. ஆண்களுக்குமே இருக்கிறது. ஆனால், அது எவ்வளவு என்பதற்கான சரியான புள்ளிவிவரம் நம்மிடம் இல்லை. இதுவே பெண்களுக்கு எதிரான ஸ்டாக்கிங் குற்றம் எனும்போது, ஆண்களே அதற்குக் காரணமாக இருக்கின்றனர். எனவே, இங்கே ஸ்டாக்கிங்கை எப்படிக் கையாள்வது என்ற பயிற்சி பெண் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல; எதெல்லாம் ஸ்டாக்கிங், எதையெல்லாம் செய்யக்கூடாது எனத் தெரிந்துகொள்வதற்கான பயிற்சி ஆண் பிள்ளைகளுக்கும் தேவைப்படுகிறது. அவர்கள்தானே நாளைய சமுதாயத்தில் இங்கே நடமாடப்போகிறார்கள்?! இன்டர்நெட்டின் வளர்ச்சியால் கடந்த சில வருடங்களாக #CyberStalking-ம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துவருகிறது. இதிலிருந்து நம் பிள்ளைகளைக் காப்பது எப்படி? > ஆபாசமாகப் பேசுவது, போட்டோ மார்ஃபிங், அச்சுறுத்துவது... இப்படி உங்கள் மகளுக்கு நேர்ந்தால் இதைச் செய்யுங்கள்! #Parents4Teens > முழுமையான செய்திக் கட்டுரைக்கு க்ளிக் செய்க


7
சினிமா 20 -20

டிவென்டி டிவென்டி தொகுப்பு

> இந்தியன் 2'வுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷங்கர், தனுஷின் அடுத்த படம், ராஜேஷ் வைத்யாவின் சாதனை உள்ளிட்ட சினிமா அப்டேட்ஸ் அடங்கிய சிறப்பு டிவென்டி டிவென்டி தொகுப்பு > முழுமையாக பார்க்க இங்கே க்ளிக் செய்க


8
மேதா பட்கர்

"நதிகளுடன் மக்களை இணைக்கவேண்டும்!"

> "நதிகளை இணைப்பது தீர்வில்லை. பிரம்மபுத்திரா-கங்கை-காவிரி நதிகளை இணைக்க வேண்டும் என்று தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாருங்கள்... பிரம்மபுத்திராவிலேயே தற்போது அணைகட்டத் தொடங்கியிருக்கிறது சீனா. இந்தச் சமயத்தில் நாம் நதிநீரை இணைப்பதைச் செயல்படுத்தினால் அது சர்வதேசச் சிக்கலாக உருவெடுக்கும். பிரம்மபுத்திராவையும் கங்கையையும் இணைக்கத் திட்டமிட்டால் அது வடகிழக்கு இந்தியாவிற்கும் வட இந்தியாவிற்கும் இடையே பிரச்னையை ஏற்படுத்தும்." - சென்னையின் வறட்சி, காவிரிப் பிரச்னை, கூடங்குளம் அணுக்கழிவு, காவிரிப்படுகையின் ஹைட்ரோ கார்பன் சிக்கல்கள், எனத் தமிழகம் தற்போது சந்தித்துக்கொண்டிருக்கும் சூழலியல் பிரச்னைகளுக்கு நடுவே நர்மதா நதி மீட்புக் கூட்டமைப்பின் தலைவர் மேதா பட்கரின் பேட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. > "நதிகளுடன் மக்களை இணைக்கவேண்டும்!" > முழுமையான பேட்டியை வாசிக்க இங்கே க்ளிக் செய்க


9
உதயநிதி

ஃப்ளாஷ்பேக்.

''உங்கள் நண்பர் அன்பில் மகேஷ், உங்கள் அப்பாவின் அரசியல் உதவியாளர்போல அவருடனே சுற்றிச் சுழன்றுவருகிறார். உங்களுக்கு அரசியலில் ஈடுபாடு இல்லையா?''

''நாள் தவறாமல் முரசொலியில் தலைவரின் கடிதம், அப்பாவின் அறிக்கைகள் வந்தால் படிப்பது என்ற அளவுதான், இப்போ என் அரசியல் ஆர்வம். தவிர மகேஷும் பாரம்பர்யமான அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். என் நண்பர். நான் நடிகனானதும், எனக்கான ரசிகர்களை ஒருங்கிணைச்சு ரசிகர் மன்றம் தொடங்கினார். ஆனாலும் அவருக்கு அரசியல்லதான் ஆர்வம். அப்பாவுக்கும் நம்பகமான ஒரு நபர் தேவை என்பதால், அவர் அப்பாவுடன் இருக்கார். அதனால்தான் அவருக்கு இளைஞர் அணியில் பொறுப்பு கொடுத்திருக்காங்க. அப்பாவுடன் அவர் இருப்பதை, நான் இருப்பதாகவே நினைக்கிறேன்.''

- இது விகடன் ஃப்ளாஷ்பேக். சரியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உதயநிதி அளித்த சிறப்புப் பேட்டி இப்போது இங்கே > "என் தம்பிகள்... தங்க கம்பிகள்!" - சிலிர்க்கும் உதயநிதி https://www.vikatan.com/anandavikatan/2015-apr-01/cinema-news/104841.html > முழுமையான பேட்டிக்கு இங்கே க்ளிக் செய்க


10
vikatan top 10

> ஃபேஸ்புக் ஹிட்: 'அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுகிறேன்!' - அம்பதி ராயுடு 'திடீர்' அறிவிப்பு