Published:Updated:

இந்தியாவின் நம்பர் 1 டைல்ஸ் ஷோரூம், லெட்சுமி செராமிக்ஸ்... மனதில் பதியும் நம்பிக்கை

லெட்சுமி செராமிக்ஸ்
லெட்சுமி செராமிக்ஸ்

40,000 சதுர அடி பரப்பளவில், உலகதரம் வாய்ந்த புதிய மெகா ஷோரூம்... கோவையில் கோலாகலத் திறப்புவிழா!

தரையிலும் சுவரிலும் பதிக்கும் டைல்ஸ் விற்பனையில் இந்தியாவின் நம்பர் 1 ஷோரூம் என்ற சிறப்பு பெயர் பெற்ற லெட்சுமி செராமிஸ், தற்போது அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களின் தேவைகளை ஒரே கூரையின் கீழ் நிறைவு செய்யும் நோக்கத்தில் கோவை கவுலி பிரவுன் ரோட்டில் புதிய Flagship Store திறக்கவுள்ளது. இதை வெறும் ஷோரூம் என்று அழைப்பதைவிட கண்காட்சி அரங்கம் அல்லது ஒரு மெகா கேலரி என்றே கூறலாம். நான்கு மாடிகள், 40,000 சதுர அடி பரப்பளவு என மிகப் பிரம்மாண்டமாய், ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட டிசைன்களுடன் (டிஸ்பிளே பரப்பளவு 1,20,000 சதுர அடி) உலகதரம் வாய்ந்த வசதிகள் மற்றும் தோற்றப் பொலிவுடன் இந்த ஷோரூம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மிகப்பெரிய ஷோரூம் என்ற பெருமையைப் பெறும் இந்த ஷோரூமின் நான்கு தளங்களும் முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டது. வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களைப் பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்க வசதியாக ஒவ்வொரு பிரிவிலும் ஏராளமான ரகங்கள் காட்ச்சிப்படுத்தப்பட்டுள்ளன. அத்தனையும் ஒரே கூரையின் கீழ் வேறெங்கும் காண்பதாகாது..

கோவை கவுலி பிரவுன் ரோட்டில் அமைந்துள்ள இப்புதிய Flagship Store-இல் டைல்ஸ் மட்டுமல்லாமல் செயற்கையான பளிங்கு கற்கள், சமையலறை மற்றும் குளியலறை பொருட்கள், சானிடரி பொருட்கள் மற்றும் ஸ்பா, ஜக்குசி முதலான வெல்னஸ் பொருட்கள் என ரகம் வாயிலாக தேர்ந்தெடுக்க வசதியாக தனித்தனி பிரிவுகளில் பார்வைக்கும் விற்பனைக்கும் உள்ளன. உதாரணமாக, சானிடரி பொருட்கள் பிரிவுமட்டும் 10000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.

லெட்சுமி செராமிக்ஸ்
லெட்சுமி செராமிக்ஸ்

இங்கு இந்தியா மற்றும் வெளிநாட்டு தயாரிப்புகள் மற்றும் கஜாரியா, சோமானி, ஹர்ஷா, கோஹ்லர், ஜாகுவார், ஆர்.ஏ.கே, நிட்கோ, செரா முதலான முன்னணி பிராண்டுகள் அனைத்தும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும். மேலும் அனைத்து பொருட்களும் உடனடியாகக் கிடைக்கும் வகையில் ரெடி ஸ்டாக்-ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொன்றுக்கும் வாடிக்கையாளர் தேடிச் செல்லவேண்டிய அவசியமும், காத்திருக்க வேண்டியதும் இல்லை என்பதால் அலைச்சலும் நேரமும் மிச்சமாகிறது.

கட்டிடங்களின் வெளிப்புற மற்றும் உட்புற உபயோகம் மற்றும் அலங்காரத்திற்கு தேவையான பொருட்கள் தவிர டெகரேட்டிவ் டைல்ஸ், நிப்பான் பெயிண்ட்ஸ், போரோதெர்ம் பிரிக்ஸ் முதலான துணைப் பொருட்களும் கிடைக்கும். மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது சமையலறையை ரசனைக்கேற்ப வடிவமைத்துக் கொள்ள உதவும் மாடுலர் கிச்சன் வடிவமைப்பு மற்றும் விற்பனை சேவையும் நடக்கிறது. சாதாரண வீட்டுத் தேவைகள் முதல் ஆடம்பரமாக தங்கள் வீட்டை அல்லது அலுவலகத்தை அலங்கரிக்க வேண்டும் என்று விரும்புவோர் வரை அனைவரது தேவைகளையும் விருப்பங்களையும் லெட்சுமி செராமிக்ஸின் இந்தப் புதிய Flagship Store ஒரே கூரையின் கீழ் நிறைவு செய்யும். விலை குறைவான பிராண்டுகள், சற்று விலை அதிகமான பிரீமியம் பிராண்டுகள் மற்றும் அதிகவிலையுள்ள உயர்ரக ஆடம்பர பிராண்டுகள் என அனைத்தும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நவீன தொழில்நுட்பம் இந்தியாவிலேயே முதன்முறையாக...

வாடிக்கையாளர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் பொருட்கள் 2D மற்றும் 3D பரிமாணத்தில் எப்படித் தோற்றமளிக்கும் என்பதைப் பார்த்து தேர்ந்தெடுக்க உதவிடும் அதிநவீன மெய்நிகர் (விர்ச்சுவல் ரியாலிட்டி) தொழில்நுட்ப வசதி இந்தியாவிலேயே முதன்முறையாக லெட்சுமி செராமிக்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வெல்னஸ் பொருட்கள் செயல்பாட்டை வாடிக்கையாளர்கள் நேரடியாகக் கண்டுணரும் லைவ் டிஸ்பிளே வசதியும் உள்ளது.

வாடிக்கையாளர் சேவை

பிரத்யேக பயிற்சி பெற்ற பணியாளர்கள் வாடிக்கையாளர்களின் குறிப்பறிந்து இன்முகத்துடன் சேவையளித்திட காத்துள்ளனர். வருகை தரும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் அவரது தேவை மற்றும் இரசனைக்கேற்ற பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்கலாம். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அதிகமாகவே லெட்சுமி செராமிக்ஸில் பொருட்கள் குவிந்துள்ளன. அதனால் ரகம், அளவு, டிசைன், தரம், விலை, பணிவான மற்றும் கனிவான சேவை ஆகிய அனைத்து அம்சங்களிலும் வாடிக்கையாளர் முழு திருப்தி அடைவது நிச்சயம். வாகனங்கள் நிறுத்த தாராள இடவசதி மற்றும் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு சிறப்பு பயிற்சி

பிளம்பிங், பிட்டிங்ஸ், பெயிண்டிங் முதலான பணிகளைச் செய்யும் பணியாளர்களுக்கு அவர்கள் கையாளும் பொருட்கள் பற்றிய சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இது அவர்களுக்கு மேம்பட்ட வாடிக்கையாளர் சேவை அளித்திட உதவிடும்.

லெட்சுமி செராமிக்ஸ்
லெட்சுமி செராமிக்ஸ்

லெட்சுமி செராமிக்ஸ் கடந்துவந்த பாதை . . .

1997-ம் வருடம் சிறிய மொத்த (Wholesale) விற்பனையாளராக துவங்கப்பட்ட லெட்சுமி செராமிக்ஸ் 2000ல் சில்லரை வர்த்தகத்தில் இறங்கியது. பிறகு பல்வேறு சவால்களை வெற்றிகரமாகக் கடந்து படிப்படியாக தொழில் விரிவடைந்தது. 400 சதுர அடியில் போட்ட விதை தற்போது பல்லாயிரம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்ட ஆலமரமாய் கிளைகளைப் பரப்பியுள்ளது. லட்சுமி செராமிக்ஸ் தமிழகத்தில் 11 கிளைகளுடன் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் வெவ்வேறு துறைகளில் கால்பதித்து தடம் பதித்துவரும் ஒரு மிகப்பெரும் தொழில்குழுமமாக உருவாகியுள்ளது. இந்நிறுவனத்திற்கு கோவையில் மட்டும் நான்கு கிளைகளும் (மேட்டுப்பாளையம் ரோடு, புரூக் பாண்ட் ரோடு, கவுலிபிரவுன் ரோடு மற்றும் சிங்காநல்லூர்) காரைக்குடியில் இரண்டு கிளைகளும், திருப்பூர், கரூர், திருச்சி, மதுரை, சென்னை ஆகிய நகரங்களில் தலா ஒரு கிளையும் உள்ளன. தற்போது தொழிலை மேலும் விரிவுபடுத்தும் விதமாக ஃப்ரான்சைசீ வியாபார முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனின் முதற்கட்டமாக தஞ்சாவூரில் முதல் ஃப்ரான்சைசீ ஷோரூம் மற்றும் ஓசூரில் இரண்டாவது ஃப்ரான்சைசீ திறக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுடன் கைகோர்த்து 22 வருட கால பயணத்தில் எட்டிய சாதனை மைல்கற்கள் பல.

லெட்சுமி செராமிக்ஸ் என்றாலே கைராசி, நம்பிக்கை என்ற நற்பெயருடன் 7 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் டைல்ஸ் விற்பனையில் இந்தியாவின் நம்பர் 1 விற்பனையாளர் என்கிற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. மேலும் கஜாரியா பிராண்டின் இந்தியாவின் நம்பர் 1 டீலர் விருதைத் தொடர்ந்து 8 ஆண்டுகளாகப் பெற்றதும் சோமானி பிராண்டின் இந்தியாவின் நம்பர் 1 டீலர் விருதைத் தொடர்ந்து 5 வருடங்களாகப் பெற்றதும், கோஹ்லர் பிராண்டின் விருதை தொடர்ந்து 3 வருடங்களாகப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கோவையின் மிகவும் நம்பகமான பிராண்ட் விருது மற்றும் ரீடெயில் ஐகான் விருது ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளது. இந்த விருதுகள் நிறுவனத்தின் உழைப்பிற்கும் நேர்மையான செயல்பாட்டிற்கும் கிடைத்த அங்கீகாரங்கள்.

லெட்சுமி செராமிக்ஸ் தொழிற்குழுமத்தின் ஓர் அங்கமாக கோவை ஆர். எஸ். புரத்தில் லெட்சுமி ஹோம்ஸ்டைல் என்கிற பர்னிச்சர் ஷோரூம் ஒன்றும், காந்திபுரத்தில் சென்டர் பார்க் என்ற சர்வீஸ் அப்பார்ட்மெண்டும், சாய்பாபா காலனியில் செட்டிநாடு கோர்ட்யார்டு என்ற உணவகமும் செயல்படுகின்றன. சென்டர் பார்க் மற்றும் செட்டிநாடு கோர்ட்யார்டு விருந்தோம்பல் துறையின் சிறந்த அடையாளங்களாக விளங்குகின்றன.

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை லெட்சுமி செராமிக்ஸ்-ன் விளம்பரதாரர் பகுதியாகும். எனவே, இதில் கூறப்பட்டுள்ள செய்திகளின் உண்மைத்தன்மைக்கு விகடன் நிர்வாகம் பொறுப்பாகாது.

அடுத்த கட்டுரைக்கு