Published:Updated:

இனி 'பசுமைப் பட்டாசு'களை வாங்கலாம்...

இதுவரை தயாரிக்கப்பட்டு வந்த பட்டாசுகளை விட 25 - 35% அளவுக்கு மூல நுண் துகள்கள் (Particulate Matter) குறைவாக இருக்க வேண்டும், நச்சு மூலங்கள் இருக்கக்கூடாது

பசுமைப் பட்டாசு
பசுமைப் பட்டாசு

சென்ற ஆண்டு 2 மணி நேரம் மட்டுமே தீபாவளியன்று பட்டாசு வெடிக்க வேண்டும் எனும் ஓர் அதிரடித் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெளியிட்டதை நாம் அறிவோம். கடந்த ஆண்டுகளில் தலைநகர் புது டெல்லியில் ஏற்பட்ட கடுமையான காற்று மாசுபாட்டைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2017-இல் டெல்லியில் பட்டாசுகளுக்குத் தடை விதித்து, வெடிகள் வெடிப்பதில் நாடு முழுக்க பல கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் பட்டாசுத் தொழிலும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என மத்திய அரசு வலியுறுத்தியதன் பேரில் பட்டாசுத் தடையை நீக்கியதோடு, இனி 'பசுமைப் பட்டாசுகளை' மட்டுமே நிறுவனங்கள் தயாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

பசுமைப் பட்டாசு என்றால் என்ன?

இனி 'பசுமைப் பட்டாசு'களை வாங்கலாம்...

இதுவரை தயாரிக்கப்பட்டு வந்த பட்டாசுகளை விட 25 - 35% அளவுக்கு மூல நுண் துகள்கள் (Particulate Matter) குறைவாக இருக்க வேண்டும், நச்சு மூலங்கள் இருக்கக்கூடாது, புதிதாக தயாரிக்கப்படும் பட்டாசுகள், பழைய பட்டாசுகளைவிட 35% குறைவான புகை மற்றும் சத்தம் ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும், என்பன போன்ற விதிகளுடன் பசுமைப் பட்டாசுகளைத் தயாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் கீழ் இயங்கும் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் (CSIR) அங்கமான தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI - நீரி) இதற்கான ஆராய்ச்சியில் இறங்கியது.

நீரி அதன் ஆராய்ச்சி முடிவில், வெடித்தபின் தண்ணீர் மூலங்களாக மாறும் பட்டாசுகள் (Water Releasers), கந்தக மற்றும் நைட்ரஜன் வாயுக்கள் குறைவான பட்டாசுகள் (STAR), அலுமினியம் குறைவான பட்டாசுகள் (SAFAL) மற்றும் குறைவான நச்சு வாயுக்களை வெளியேற்றும் வாசனைப் பட்டாசுகள் ஆகிய நான்கு வகைகளை அறிமுகப்படுத்தியது. இவற்றைச் சந்தைக்குக் கொண்டுவர பட்டாசு தயாரிப்பாளர்களுடன் இணைந்து செயல்பட்டது நீரி. ஏற்கனவே பல பட்டாசு நிறுவனங்கள் வைத்திருக்கும் பழைய முறையை மேம்படுத்தியதோடு, புதிய முறைகளையும் அறிமுகப்படுத்தியது. இதனிடையே அக்டோபர் முதல் வாரம் 'நீரி'யின் பசுமைப் பட்டாசுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷ் வர்தன். 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து பசுமைப் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இவை தீபாவளிக்கு முன்னர் அனைத்து கடைகளிலும் கிடைக்க ஏற்பாடுகள் நடந்துவருவதாகவும் தெரிவித்தார்.

இனி 'பசுமைப் பட்டாசு'களை வாங்கலாம்...

"பசுமைப் பட்டாசு குறித்து ஒருவாறு தெளிவு கிடைத்துள்ளது வரவேற்கத்தக்கது. பட்டாசு நிறுவனங்களின் நடவடிக்கைகளை முறைமைப்படுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பான PESO (Petroleum and Explosives Safety Organization)-உம் பசுமைப் பட்டாசுகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு துரிதமாக ஒப்புதல் (லைசென்ஸ்) வழங்கிவருகிறது. இது பசுமைப் பட்டாசுகள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்யும், இதனால் வீழ்ச்சியில் இருக்கும் பட்டாசுத் துறை எழுச்சி அடையும் என நம்புகிறோம். நீரி அறிவுறுத்தலின்படி பட்டாசுகள் சிவகாசியில் தயாராக ஆரம்பித்துவிட்டபடியால், இந்த வருடம் கடைகளில் கிடைக்கும் பசுமைப் பட்டாசுகளை வாங்கி மக்கள் சுற்றுச்சூழலுக்கு அவர்களால் ஆன பங்கை அளிக்கலாம்." என்கிறார் பசுமைப் பட்டாசுகளைத் தயாரித்து வரும் சிவகாசியின் முன்னணி பட்டாசு தயாரிப்பாளர் ஒருவர்.