Published:Updated:

கேஸ் ஸ்டவ் வாங்கனுமா? உங்களின் சாய்ஸ் இதுவாக இருக்கலாம்!

டேபிள் போன்ற வடிவத்தைக் கொண்ட பிரெஸ்டீஜ் பிரீஸ் கேஸ் டேபிள், பெண்கள் எளிதாக கையாளக்கூடிய விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

Prestige
Prestige

சமையல் அறை இல்லாமல் வீடா? சமையல் அறையில் பால் காய்ச்சிய பிறகுதான் அதிகாரபூர்வமாக வீட்டுக்குள் நாம் குடியேறியது செல்லும் எனலாம். வேலைக்குச் செல்லும் பெண்கள், தாய்மார்கள், இல்லத்தரசிகள், பேச்சிலர்கள்... யாராக இருந்தாலும் சரி, அன்றைய அன்றாடப் பணிகளை கிச்சனில் இருந்துதான் ஆரம்பிப்பார்கள். தினசரி பயன்பாட்டால் கிச்சனில் அழுக்கு படிவது இயல்பு, அதைச் சுத்தமாக வைத்துக்கொள்வதற்கு கொஞ்சம் மெனக்கெடல் அவசியம், இதில் சமையல் அறையின் அரசியான 'கேஸ் ஸ்டவ்'வை சுத்தம் செய்வதில்தான் நம் சாமர்த்தியமே அடங்கியுள்ளது!

கேஸ் ஸ்டவ்...

சமைக்கும் உணவு பலவாக இருக்கலாம், ஆனால் ஸ்டவ் என்னவோ ஒன்றுதான்! இவ்வாறு தினமும் சமைக்கையில், பால் & உலைக் கொதித்து நுரை வழிதல், எண்ணெய்ப் பிசுக்கு, கிண்டும்போது சிதறும் உணவுகளால் ஸ்டவ் மற்றும் பர்னரில் கறைகள் ஏற்படும். வாரம் ஒருமுறை கிச்சனை சுத்தம் செய்துவிடும் பெண்கள், கடினமான கறைகள் ஏற்படும்போது கூடுதலாக சிரமப்பட நேரிடும். அவர்கள் என்னதான் எலுமிச்சை, சோப்பு, டிடர்ஜென்ட் போன்றவற்றை உபயோகித்து சுத்தம் செய்தாலும் கடுமையான கறைகள் ஸ்டவ்வின் தோற்றத்தையே மாற்றிவிடும். அடிக்கடி சுத்தம் செய்தாலும் கேஸ் ஸ்டவ் துருப்பிடித்து போய்விடக்கூடிய பிரச்னையும் இருக்கிறது.

Prestige
Prestige

இது தவிர, அதிக எடையுடைய பாத்திரங்களால் பாதிக்கப்படும் ஸ்டவ், குறைந்த எரிவாயுவை கொடுக்கும் பர்னர், லீக் ஆகும் கேஸ் தட்டு என ஏதாவது ஒருவகையில் கேஸ் ஸ்டவ்வினால் பிரச்னை ஏற்படுவதும் சகஜம். ஆனால் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு என்பது உண்டு. அதுதான் அனைவரது எதிர்பார்ப்பும்கூட. இவ்வாறான பிரச்னைகளுக்கு தீர்வளிக்கவும், மக்களுக்கு எளிதாக உபயோகிக்கக்கூடிய வகையில் புதிதாக தயாரிக்கப்பட்ட பிரீஸ் கேஸ் டேபிளை அறிமுகப்படுத்தியுள்ளது பிரெஸ்டீஜ்!

பிரெஸ்டீஜ் பிரீஸ் கேஸ் டேபிள் (Prestige Breeze Gas Table):

டேபிள் போன்ற வடிவத்தைக் கொண்ட பிரெஸ்டீஜ் பிரீஸ் கேஸ் டேபிள், பெண்கள் எளிதாக கையாளக்கூடிய விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டில் இருந்து நான்கு பர்னர்கள் கொண்டதாகவும் இந்தக் கேஸ் ஸ்டவ் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சமையலை விரைந்து முடிக்க ஸ்டவ்வில் ஒரு அதிவிரைவான எரிவாயுவை ஏற்படுத்தக்கூடிய 'ஜம்போ பர்னர்' ISI சான்றிதழ் பெற்று பொருத்தப்பட்டிருக்கிறது. அதிக செயல்திறன் படைத்த பித்தளை பர்னர்களே ஸ்டவ்வில் உபயோகிக்கப்பட்டு உள்ளது.

Prestige
Prestige

7mm தடிமனான கடுமையான கண்ணாடியாலான பிரெஸ்டீஜ் கேஸ் ஸ்டவ்வின் மேல்பகுதி அதிக எடையுடைய பாத்திரங்களையும் எளிதாக தாங்கும். ஃபிரேம்லெஸ் (சட்டகமற்ற) கேஸ் ஸ்டவ்வாக இது அமைக்கப்பட்டிருக்கிறது. இப்போது சந்தையில் பிரபலமாக இருக்கும் ஃபிரேம்லெஸ் ஸ்டவ் வகைகளில் நியாயமான விலையில் கிடைக்கும் தரமான ஸ்டவ் எனப் பெயரெடுத்துள்ளது. மேலும் எளிதாக சுத்தம் செய்ய கழிவுகளைச் சேகரிக்கும் தட்டு (drip tray) பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது லீக் ஆகாதவாறு பிரெஸ்டீஜ் பிரீஸ் கேஸ் ஸ்டவ் வடிவமைக்கப்பட்டு இருப்பதால் பெண்களுக்கு நோ தலைவலி!

ஒவ்வொரு பர்னருக்கு இடையிலும் தேவையான இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளதால் சில நிமிடங்களில் எளிதாக சுத்தம் செய்துவிடலாம். பாத்திரங்களை வைக்கவும் சிரமமாக இருக்காது. மற்ற தயாரிப்புகளை ஒப்பிடுகையில் உயர்தர தயாரிப்புகளையும், சிறப்பம்சங்கள் & சலுகைகளையும் வழங்குவதில் பெயர்பெற்றது பிரெஸ்டீஜ் நிறுவனம். ISI சான்றிதழ் பெற்ற இந்த ப்ரீஸ் கேஸ் டேபிள் ஸ்டவ்வுக்கு இரண்டு வருட வாரண்ட்டி வழங்குகிறது பிரெஸ்டீஜ். கண்கவரும் வண்ணங்களால் பெண்களின் மனதையும் பிரெஸ்டீஜின் இந்தப் பிரீஸ் கேஸ் ஸ்டவ் கவரும் என்பதில் சந்தேகமில்லை!