Published:Updated:

வெற்றிச் சக்கரங்கள்! #MahindraPickUPSuccessStories

மகிந்திரா & மகிந்திரா நிறுவனம் மூன்று விதமான சிறிய ரக பிக் அப் வாகனங்களை விற்பனை செய்துவருகிறது

Mahindra
Mahindra

அறுவடை செய்யப்பட்ட பயிர், விளைந்து கிடக்கும் காய்கறி, பிடிக்கப்பட்ட மீன், பாக்கெட் நிரம்பிய பால், கேஸ் அடைத்த சிலிண்டர்... யாவும் நம் கைக்கு நேரத்திற்கு வந்து சேர்கின்றன, இதற்கு பிக் அப் வண்டிகள் (அ) சரக்குந்துகளுக்கே சிறப்பு நன்றி சொல்ல வேண்டும். நம் வாழ்வைச் சுலபமாக்கிவிட்ட சிறிய ரக சரக்கு வண்டிகளின் வருகை பொருளாதார ரீதியாக பல குடும்பங்களை வாழ வைத்திருக்கிறது. காலை முதல் மாலை வரை உடல் நோக வேலை செய்த சாமானியர் பலரையும் முதலாளிகளாக்கி, அவர்களின் வாழ்வுக்கு வளம் சேர்த்துள்ளன இந்தச் சிறிய ரக சரக்கு வாகனங்கள்.

அளவில் பெரிதான லாரிகள் செல்ல முடியாத இடங்களில், சிறிய ரக லோடு வாகனங்களின் தேவை மிக முக்கியமானது. பொருள்களை சில்லறை வர்த்தகக் கூடங்களுக்கும், வீடுகளுக்கும் நேரடியாக சென்று சேர்ப்பவை இந்தச் சிறய ரக வாகனங்களே. 'அண்ணாச்சி மளிகைக் கடை வச்சிருந்தாலும் பெரிய யாவாரம் இல்ல, பெறவு லோடு அடிக்கிற வண்டி ஒன்னு வாங்கினாரு, இன்னக்கி வீட்டு வாசல்ல நாலு வண்டி நிக்கி...', இப்படி நாம் கேட்டறிந்த வெற்றிக் கதைகள் பற்பல...

மகிந்திரா பொலேரோ பிக் அப் டிரக்...

மகிந்திரா & மகிந்திரா நிறுவனம் மூன்று விதமான சிறிய ரக பிக் அப் வாகனங்களை விற்பனை செய்துவருகிறது. பொலேரோ மேக்சி டிரக் பிளஸ், பொலேரோ பிக் அப் மற்றும் பொலேரோ கேம்பர் கோல்டு - இந்த மூன்று சிறு சரக்கு வாகனங்களும் சுமார் 1.5 டன் வரை லோடு எடுக்கக்கூடியவை மற்றும் சிறப்பான மைலேஜ் தரக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுக்க மஹிந்திராவின் சிறுவாகனங்கள் லட்சக்கணக்கில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சாதனை சரக்கு போக்குவரத்தின் தேவையையும், மகிந்திராவின் தரம் மற்றும் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. 2018ஆம் ஆண்டைவிட, 2019ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட பதின்மூன்றாயிரம் சரக்கு வாகனங்களை அதிகமாக விற்றுள்ளதாக மகிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

நம்பிக்கை அளிக்கும் வெற்றிக்கதைகள்

நாடு முழுக்க லட்சக்கணக்கான சிறிய முதலாளிகளை உருவாக்கிய பெருமை மகிந்திரா பிக் அப் வண்டிகளைச் சேரும். மீனவர்கள், குடிநீர் வியாபாரம் செய்பவர்கள், பலசரக்கு டெலிவரியில் ஈடுபட்டுள்ளவர்கள் எனப் பலதரப்பட்ட வியாபாரிகளுக்குத் தோள் கொடுத்து, அவர்கள் மூலம் மேலும் பல குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்தியுள்ளது மகிந்திரா பிக் அப் டிரக்ஸ். இதன் மூலம் தங்களின் வாழ்வை பிரகாசமாக்கிக்கொண்டவர்களின் நம்பிக்கை அளிக்கும் உண்மைக் கதைகளை இங்கே காணலாம்...