Published:Updated:

தமிழ் மண்ணில் அலெய்டா குவேரா... சேகுவேராவின் வீரதீரம், தியாகங்களின் சாட்சி!

வரவேற்பு

``சேகுவேராவின் மகள், பேத்தியை வரவேற்கும் நிகழ்ச்சிக்கு மாமல்லபுரம் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இது, மனதுக்கு ஆற்ற முடியாத கவலையை வேதனையைத் தந்துவிட்டது. மாமல்லபுரம் அழைத்துச் சென்று விருந்தோம்பல் செய்ய முடியவில்லையே என்ற கவலை ஏற்பட்டுவிட்டது...”

தமிழ் மண்ணில் அலெய்டா குவேரா... சேகுவேராவின் வீரதீரம், தியாகங்களின் சாட்சி!

``சேகுவேராவின் மகள், பேத்தியை வரவேற்கும் நிகழ்ச்சிக்கு மாமல்லபுரம் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இது, மனதுக்கு ஆற்ற முடியாத கவலையை வேதனையைத் தந்துவிட்டது. மாமல்லபுரம் அழைத்துச் சென்று விருந்தோம்பல் செய்ய முடியவில்லையே என்ற கவலை ஏற்பட்டுவிட்டது...”

Published:Updated:
வரவேற்பு

தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான கியூபாவின் விடுதலை வீரரும், அந்த நாட்டின் முன்னாள் அமைச்சருமான, உலகத்தின் கவனத்தைக் கவர்ந்த புரட்சியாளர் சேகுவேராவின் மகள் டாக்டர் அலெய்டா குவேரா, பேத்தி டாக்டர் எஸ்டெஃபானி குவேரா ஆகியோரை, 17.01.2023 அன்று சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் வரவேற்று பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்திய மகிழ்வான தருணத்தை மகிழ்வோடு பகிர்கிறேன். இந்த நிகழ்வில், உடன் மார்க்சிய கம்யூனி்ஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவரான முன்னாள் எம்.பி டி.கே.ரங்கராஜன், மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் தோழர் சங்கர், வல்லம் கோபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழ் மண்ணில் அலெய்டா குவேரா... சேகுவேராவின் வீரதீரம், தியாகங்களின் சாட்சி!

மாமல்லபுரம் வருகைக்கு அனுமதி மறுப்பு!

சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா மற்றும் பேத்தி டாக்டர் எஸ்டெஃபானி ஆகியோர், அன்றைய தினம் மாமல்லபுரம் வரத் திட்டமிட்டு இருந்தனர். அவர்களை வரவேற்று பல்லவர்களின் புராதனச் சின்னங்களை சுற்றிக் காட்டிட ஆயத்தமாகி இருந்தோம். வரவேற்பு மேடை அமைக்கவும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியும் மாமல்லபுரம் சரக காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தேன். ஜனவரி 17 காணும் பொங்கல் தினத்தன்று, ஒரு லட்சம் பேர் மாமல்லபுரம் வருவார்கள்; வாகனங்கள் செல்ல முடியாது. எனவே, பிரிதொரு நாள் வந்தால் நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறி, எந்தச் சூழ்நிலையிலையையும் சமாளித்து, எதிர்கொள்ளும் ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகரான காவல்துறை அன்றைய வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து, மாமல்லபுரம் இ1 காவல் நிலைய ஆய்வாளர், எழுத்துபூர்வமாக கடிதம் கொடுத்து கைவிரித்துவிட்டது மனதுக்கு ஆற்ற முடியாத கவலையை, வேதனையைத் தந்துவிட்டது.

சேகுவேரா

நமது செவி குரலை இன்னொருவர் செவிமடுப்பார் என்றால் நம் ஆயுதங்களை எடுத்துக்கொள்வதற்கு இன்னொருவர் கை நீட்டுவார் என்றால், நமது இறுதி ஊர்வலத்தின் சோக கீதத்தை, இயந்திரத்துப் துப்பாக்கியின் ஓசையாலும் புதிய யுத்தம் புதிய வெற்றியின் ஓசையாலும் இசை அமைத்துப் பாட மற்றவர்கள் முன்வருவார்கள் என்றால், எங்கு வேண்டுமென்றாலும் மரணம் நம்மை திடீரென்று தழுவட்டும், மகிழ்ச்சியுடன் நாம் அதை வரவேற்போம் - சே.

தென் அமெரிக்க லத்தீன் நாடான அர்ஜென்டினாவின் இரண்டாவது பெரிய நகரம் ரோசேரியாவில், எர்னஸ்டோகோரோ - சீலியாடீலா தம்பதியர்களின் மூத்த மகனாக, 1928 ஜூன் 14-ம் தேதி, மருத்துவர்கள் குறித்த ஒரு மாதத்துக்கு முன்பாகப் பிறந்தவர்தான் உலகத்தின் கவனத்தைக் கவர்ந்த புரட்சி நாயகன் ஷேகுவாரா. பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்து மருத்துவரானார். ஆனால், மருத்துவரா அல்லது புரட்சிக்காரரா என்று வந்தபோது, ஆயுதம் தாங்கிய புரட்சிக்காரரானார்.

தமிழ் மண்ணில் அலெய்டா குவேரா... சேகுவேராவின் வீரதீரம், தியாகங்களின் சாட்சி!

பிடல் காஸ்ட்ரோவுடன் சந்திப்பு!

1954 காலகட்டத்தில் கெளதமாலாவில் ஏற்பட்ட போராட்டத்தில் பங்கேற்றபோது, போராட்டம் திசைமாறியது. அப்போது அங்கிருந்த அர்ஜென்டினா தூதரகத்தில் தஞ்சமடைந்த போதுதான், ஒரே எண்ணம் உடைய ஃபிடல் காஸ்ட்ரோ உள்ளிட்டோரை அங்கே சந்தித்தார் சேகுவேரா. 1954-ல் மெக்ஸிகோவில் புரட்சிப்படையின் உறுப்பினரானார். கியூபாவில் நடைபெற்று வந்த பல்ஜென்சிபோ பட்டிஸ்டாவின் எதேச்சாதிகார அரசை அகற்ற, பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து, கிராண்ட்மா விலிருந்து கியூபா நோக்கி பயணம் செய்தார். இவரின் கடல் பயணத்தில் ஆஸ்துமா வந்தது. அப்போது அவர் `மோசமான துப்பாக்கியைப் பெற்றுக்கொண்டு என்னால் ஒரு நல்ல துப்பாக்கி வீணாக வேண்டாம்’ என்றார்.

கியூபாவின் கொரில்லா யுத்தத்தில், இரண்டு தலைவர்கள் இருந்தனர். ஒருவர் பிடல் காஸ்ட்ரோ... மற்றொருவர் சேகுவேரா. ஆனால், எதிரிகளைக் குழப்பம் வகையில் நான்காவது படையின் மேஜராக சேகுவேரா அறிவிக்கப்பட்டார். இப்போரில் 01.01.1959 அன்று, கியூபா புரட்சி வெற்றி பெற்றது. விடுதலையடைந்த புரட்சிகர கியூபா அரசின் குடிமகன் அந்தஸ்து சேகுவேராவுக்கு வழங்கப்பட்டு, காஸ்ட்ரோ தலைமையிலான அரசில் சேகுவேரா சேர்க்கப்பட்டார். கியூபா தேசிய வங்கியின் ஆளுநராகவும் தொழில்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார் சே. அவர் அரசு முறைப் பயணமாக 01.07.1959 அன்று இந்தியாவுக்கு வந்து அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவை சந்தித்துப் பேசினார்.

பொலிவியா

தான் கனவு கண்ட புதிய சமுதாயம் அந்நாட்டில் மலர்ந்த பிறகு, அங்கு தனது வேலை முடிந்தது என்ற உணர்வு ஏற்பட்ட பிறகு, பொலிவியா சர்வதிகாரி பாரியண்டோஸ் ஏகாதிபத்தியத்தின் மீது சேகுவேரா கவனம் செலுத்தினார். சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் ஆட்பட்டு, சொல்லன்னா துயரங்களை அனுபவிக்கும் பொலிவியாவுக்கு, 1966 நவம்பர் மாதம் அவர் மீண்டும் ஒரு புரட்சியாளராக கொரில்லா போராளிகளுடன் களம் கண்டார்.

01.07.1959 அன்று இந்தியா வந்து, அப்போதைய பிரதமர்  நேருவை சந்தித்துப் பேசிய சேகுவேரா.
01.07.1959 அன்று இந்தியா வந்து, அப்போதைய பிரதமர் நேருவை சந்தித்துப் பேசிய சேகுவேரா.

ஒடுக்கப்பட்டவர்கள்

`புரட்சியின் முன் தனிமனித உயிர் என்பது பொருட்டல்ல. எங்கெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களின் இதயத்துடிப்புகள் கேட்கின்றனவோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்’ என்று, பொலியாவின் புரட்சிப்படையை வழிநடத்தினார். உடனிருந்த பொலிவியா போராளி மரியோ மோஞ்சேவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சேகுவேராவின் இருப்பிடத்தை அமெரிக்க உளவுப்பிரிவு மூலம் கண்டறிந்து, 08.07.1967 அன்று அமெரிக்கா படையினரால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார்.

விசாரணை ஏதுமின்றி சேகுவேராவை சுட்டுக்கொல்ல, லெஃப்டினன்ட் கர்னல் மரியோ டெரான் என்பவருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. 1967 அக்டோபர் 9-ம் நாள் மரணத்திடம் ஒப்புக்கொடுக்கும் நேரமும் நெருங்கியது. மரியோ டெரான் என்ற ராணுவ அதிகாரியைப் பார்த்து, சேகுவேரா சொன்னார்... `கொரில்லா புரட்சிப் போரில் நான் உயிருடன் பிடிபட்டு இருக்கக் கூடாது; இது புரட்சியின் தோல்வியல்ல, அது நிச்சயம் வெற்றிபெறும்’ என்று சொன்ன மாத்திரத்தில் ஆறு தோட்டாக்கள் சேகுவேராவின் இதயத்தைத் துளைத்தன. உயிர் பிரிந்த பின்னர், புரட்சிக்கு அங்கமான அவரின் இரண்டு கரங்கள் வல்லேகிராண்ட் பள்ளியில் வைத்து வெட்டப்பட்டன. உடலைக் காட்டுப்பகுதியில் புதைத்தனர். அவரின் கைகள் வெட்டப்பட்ட இடம் மரியாதைக்குரிய இடமாக பிற்காலத்தில் மதிக்கப்படக் கூடாது என்பதற்காக, இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. கைகள் இரண்டும் அமெரிக்காவில் பாதுகாக்கப்பட்டு கியூபாவுக்கு அனுப்பப்பட்டன.

எலும்புக்கூடு

ஃபிடல் காஸ்ட்ரோ, 1970 ஜூலை புரட்சியின் தோற்றத்தைக் கொண்டாடும் வகையில் 10 லட்சம் மக்கள் முன்னிலையில் சேகுவேராவின் கைகளை வைத்து, அவர்களின் வேண்டு கோளின்படி, அதை கியூபா அரசு பாதுகாத்து வந்தது. 1997-ம் ஆண்டு சேகுவாரா உடலை பொலிவியாவில் புதைத்த அமெரிக்கா ராணுவ அதிகாரி, தான் ஓய்வு பெறும் தறுவாயில், அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்தை அறிவித்தார்.

அவ்விடத்தைத் தோண்டி, வெட்டப்பட்ட கைகளை மட்டுமே அடையாளமாகக் கொண்டு எடுக்கப்பட்ட எலும்புக்கூட்டை 30 ஆண்டுகளுக்குப் பிறகு, வணக்கத்துக்குரியதாகவும் மரியாதைக்குரியதாகவும் நன்றி பாவித்து அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தனர். முற்போக்கு மாணவர்களும் புரட்சியாளர் களும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களும் தங்களின் அடையாளமாக சேகுவாரா உருவத்தை தனதாக்கிக்கொண்டு இருக்கின்றனர்.

அலெய்டா குவேரா
அலெய்டா குவேரா

சேகுவேராவின் மகள்

சேகுவேராவின் மகளான டாக்டர் அலெய்டா குவேரா அவர்களிடம் பத்திரிகை நிருபர் கேட்டார்... `நீங்கள் உங்கள் தந்தையைப் போல் இருக்க விரும்புகிறீர்களா?’ என்று. `ஆம் நான் மட்டுமல்ல, கியூபாவில் உள்ள ஒவ்வொருவரும்தான்...’ என்று பதிலளித்தார். விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை - இது சேகுவேராவின் தத்துவ மொழி. வாழ்க சேகுவாரா!

- மல்லை சி ஏ சத்யா,

(கட்டுரையாளர், ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர்; மற்றும் மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர்).