Published:Updated:

`மேட் இன் 1995..!’ - இன்னும் சிதையாத, ஆச்சர்யம் தரும் உலகின் `சீனியர் பர்கர்’

பர்கர்

25 ஆண்டுகளுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட இடத்திற்கே கொண்டு செல்லப்பட்டு, அதைத் தயாரித்தவர்கள் அடையாளம் காண முடிகிறதா எனப் பார்க்கப்போவதாக டீன் கூறினார்.

`மேட் இன் 1995..!’ - இன்னும் சிதையாத, ஆச்சர்யம் தரும் உலகின் `சீனியர் பர்கர்’

25 ஆண்டுகளுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட இடத்திற்கே கொண்டு செல்லப்பட்டு, அதைத் தயாரித்தவர்கள் அடையாளம் காண முடிகிறதா எனப் பார்க்கப்போவதாக டீன் கூறினார்.

Published:Updated:
பர்கர்

மெக்டொனால்டில் 1995 -ம் ஆண்டு ஆர்டர் செய்யப்பட்ட பர்கர் ஒன்று இன்னும் சிதையாமல் இருந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம்! ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு கூடாரத்தில்தான் இது பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. கால் நூற்றாண்டு வயதை தொடவிருக்கும் இந்த பர்கரை தங்கள் 'நண்பன்' என்று அழைத்து வருகின்றனர் இதைப் பாதுகாத்துவரும் நண்பர்கள் இருவர்.

மெக்டொனால்ட்ஸ்
மெக்டொனால்ட்ஸ்

கேசி டீன் (39) மற்றும் எட்வர்ட் நிட்ஸ் (38) எனும் நண்பர்கள் இருவர் 24 ஆண்டுகளுக்கு முன் மெக்டொனால்டில் இந்த பர்கரை வெண்ணெயுடன் தங்களின் இளம் பருவத்தில் வாங்கியுள்ளனராம். தங்கள் சிறுவயதில் அதிகம் எனத் தெரிந்தும் அதிகமான உணவை ஆர்டர் செய்வதையே தங்களின் பொழுதுபோக்காக வைத்திருந்திருக்கின்றனர். இப்படி தாங்கள் செய்த குறும்புத்தனமான ஆர்டர்களில் ஒன்றுதான் இந்த கால் நூற்றாண்டு பர்கர் என்கின்றார்கள் அவர்கள். "நாங்கள் இந்த உணவை உண்ணாமல் அப்படியே வைத்திருந்தால் எப்படி இருக்கும்" என விளையாட்டாகப் பேசிக்கொண்ட தருணங்கள் உண்டு, அப்படி விளையாட்டாகப் பேசியதன் விளைவாகவே இன்று இத்தனை ஆண்டுகள் இந்த பர்கர் கடந்திருக்கிறது என்கின்றனர். அந்த பர்கர் அளவில் சிறிது சுருங்கி காணப்பட்டாலும் இன்னமும் அதனின் வடிவத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அதன் அச்சும் மாறவில்லை, அதிலிருந்து எந்தத் துர்நாற்றமும் வரவில்லை. அதன் தன்மையிலிருந்து மாறாமல் இன்னும் அப்படியே இருக்கிறது என்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``அதில் தூவப்பட்ட எள் கூட இன்னும் கொட்டவில்லை" என டீன் தெரிவித்துள்ளார். வரும் 2020 -ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த பர்கரின் வயது 25 ஆகும் எனவும், சில திருமணங்கள் கூட நிலைக்காத காலத்தை இந்த பர்கர் நிறைவு செய்திருப்பதாக அந்த நண்பர்கள் பர்கருடனான அவர்களின் பந்தத்தைப் பகிர்ந்துகொள்கின்றனர். மேலும் அது தயாரிக்கப்பட்ட இடத்திற்கே கொண்டு செல்லப்பட்டு, அதைத் தயாரித்தவர்கள் அடையாளம் காண முடிகிறதா எனப் பார்க்கப்போவதாக டீன் கூறினார். 'பழைமையான பர்கர்' என்று அதைக் குறிப்பிடாமல் தங்களின் 'நண்பன்' என்றே அதைத் தொடர்ந்து அழைத்து வருகின்றனர் இந்த நண்பர்கள். அதைச் சமூக வலைதளங்களில் பதிவேற்றி அதற்கென பிரத்யேகப் பாடல் ஒன்றையும் எழுதியுள்ளனர்.

பர்கர்
பர்கர்
Representational image

மெக்டொனால்டு தயாரிப்பில் இதுவே உலகின் பழைமையான பர்கராகக் கருதப்டுகிறது. 10 ஆண்டுகளாக ஐஸ்லேண்டில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பர்கரின் சாதனையை இது முறியடித்துள்ளதாகக் கூறுகின்றனர். மரக்கட்டையால் பாதுகாக்கப்பட்ட மற்ற பர்கர்களை விட இது சிறப்பான கவனத்தையே மக்களிடம் ஈர்த்துள்ளது. இந்த பர்கர் அதனுடைய இயல்பு நிலையிலிருந்து வெப்பக் காலங்களில் 30° செல்ஷியஸ் வரை பாதுகாக்கப்படுகிறதாம். எலிகள் கூட இந்த பர்கரை சீண்டியதில்லை என்கிறார் டீன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த பர்கர் பாதுகாக்கப்பட்டுள்ள பாலித்தீன் பை, துணி, பெட்டி இவற்றைக் கொரிக்கும் எலி இந்த பர்கரை மட்டும் விட்டுவைக்கிறது எனும் சுவாரசிய தகவலையும் பகிர்கின்றனர். "எங்களின் நண்பன் பாதுகாப்பாக இருக்கிறார்" எனப் பெருமையும் கொள்கின்றனர். கவனிக்கப்படாமல் இருந்த இந்த பர்கர் 2015ம் ஆண்டிலிருந்துதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்த பர்கர் குறித்து விளக்கமளித்துள்ள மெக்டொனால்டு நிறுவன அதிகாரி, பல ஆண்டுகளாக இந்த பர்கர் கெடாமல் இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை எனவும், பர்கர் தயாரிக்கப்பட்டவுடன் அதில் போதிய ஈரப்பதம் இல்லாததால் அதில் கிருமிகள் ஏதும் அண்டுவதில்லை. மாறாக அது கெடாமல் உருவத்தில் மட்டும் சுருங்குகிறது எனவும் விளக்கமளித்துள்ளார்.

மேலும் அவர் `தங்களின் நிறுவனத்தின் உணவுகளை சூடான நிலையிலேயே அதன் சுவையை உணர்வது சிறப்பானதாக இருக்கும்’ என ஆலோசனையும் வழங்கியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism