Published:Updated:

மேக்ஸ் 'சூப்பர் குடும்பம்' போட்டி! ஆனந்த விகடன் அட்டைப்படத்தில் நீங்களும் தோன்றலாம்!

Max
Max

குடும்பத்தோடு இணைந்து ஷாப்பிங் செய்வதே ஒரு தனி அனுபவம். வீட்டின் ஒவ்வொரு நபருக்கும் என்ன பிடிக்கும் பிடிக்காது எனத் தெரிந்துகொள்ள நமக்கான ஒரு வாய்ப்புதான் ஃபேமிலி ஷாப்பிங்.

விழாக்காலத்தில் ஃபேமிலி போட்டோ எடுக்கும்போதுதான் எவ்வளவு ஆனந்தம்! காலையில் குழந்தைகளைக் குளிக்கவைத்து, கலர் கலர் சட்டைகளை அணிவித்து; கணவனும் மனைவியும் தோளோடு தோள் சேர்த்து, கேமரா முன் அசட்டுத்தனமாய் சிரித்த நாட்கள் எல்லாம் அந்தக்காலத்தின் அக்மார்க் நினைவுகள்... செல்ஃபி யுகத்தில் கேமராவுக்கெல்லாம் பஞ்சமில்லை, குடும்பத்துடன் சேர்ந்து உறவாட நமக்குத்தான் ஏனோ நேரம் போதவில்லை...

விழாக்காலம் எதற்காக?

அன்பைக் கொட்டும் அம்மா, அரவணைப்புக்கு அப்பா, அரண் போன்ற அண்ணன், அட்வைஸ் கொடுக்க அக்கா, அடித்து விளையாடத் தம்பி, ஆட்டம் போடத் தங்கை, இன்னும் பல உறவுகள் என அனைவருடனும் கூடிப் பேசி, ஒன்றாய் வேலை செய்து கொண்டாடி மகிழவே பல விழாக்களை உருவாக்கி வைத்துள்ளோம். மனிதனுக்கு சமூக உறவும், அன்பும் மிக முக்கியம். அவை கிடைக்கப் பெரிதும் துணை புரிவன விழாக்கள். பண்டிகைக் காலம் என்றால் உறவுகளின் அன்பில் கரைந்து மனதுக்குக் கொஞ்சம் சார்ஜ் போட்டுக்கொள்ளவேண்டிய தருணம் என்பதை நினைவில்கொள்ளுங்கள்!

'மேக்ஸ்' வழங்கும் 'சூப்பர் குடும்பம்' காண்டஸ்ட்!

மேக்ஸ் 'சூப்பர் குடும்பம்' போட்டி! ஆனந்த விகடன் அட்டைப்படத்தில் நீங்களும் தோன்றலாம்!

குடும்பத்தோடு இணைந்து ஷாப்பிங் செய்வதே ஒரு தனி அனுபவம். வீட்டின் ஒவ்வொரு நபருக்கும் என்ன பிடிக்கும் பிடிக்காது எனத் தெரிந்துகொள்ள நமக்கான ஒரு வாய்ப்புதான் ஃபேமிலி ஷாப்பிங். போர் அடிக்கும் சட்டை போடும் அப்பாக்களுக்கு கொஞ்சம் ஃபேஷனாய் டிரெஸ் எடுத்துத் தரலாம். டிரெஸ் எடுக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் மனைவிகளை, குழந்தையைக் காரணம் காட்டி கணவர்கள் ஷாப்பிங்கை விரைவில் முடிக்கச் செய்யலாம். குடும்பமாய் ஷாப்பிங் செய்தால் ஒரே அவுட்டிங்கில் குடும்பத்துக்குக் தேவையான அனைத்தையும் வாங்கிவிடலாம் என்பது நல்ல விஷயம்தானே!

இந்த விழாக்காலத்தில் குடும்பத்தோடு இணைந்து பண்டிகையைக் கொண்டாட 'மேக்ஸ்' ஃபேஷன் ஸ்டோர் வழங்கும் 'சூப்பர் குடும்பம்' போட்டியில் கலந்துகொள்ளுங்கள்:-

* குடும்பமாக மேக்ஸ் ஸ்டோருக்குச் சென்று, அங்குள்ள 'Spring Collections' ஆடைகளை அணிந்து, ஃபேமிலி போட்டோ எடுத்து, அதை உங்களுடைய ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்யுங்கள்.

* மறக்காமல் #MaxFashion #MaxSuperFamily #Vikatan என்ற ஹேஷ்டேக் போட்டு, போட்டோவில் மேக்ஸ் ஸ்டோர்-ஐ டேக் (Tag) செய்யவும், மேக்ஸ்-ன் சமூக வலைத்தள பக்கங்களையும் லைக் செய்யத் தவற வேண்டாம்.

* போட்டோவோடு சேர்த்து 'சூப்பர் குடும்பம்' குறித்த அசத்தலான சுலோகன் ஒன்றையும் எழுதி வெளியிடவும்.

போட்டியில் பங்குபெறும் அனைத்து குடும்பங்களுக்கும் மேக்ஸ் வழங்கும் நிச்சயப் பரிசு காத்திருக்கிறது!

ஆனந்த விகடன் அட்டைப்பட வாய்ப்பு!

மேக்ஸ் 'சூப்பர் குடும்பம்' போட்டி! ஆனந்த விகடன் அட்டைப்படத்தில் நீங்களும் தோன்றலாம்!

அதிக லைக்ஸை அள்ளும் போட்டோ மற்றும் சிறப்பான சுலோகனை வைத்து 25 குடும்பத்தினர் தேர்வு செய்யப்படுவார்கள். இக்குடும்பத்தினர் அனைவருக்கும் கோவை Prozone Mall-ல் மேக்ஸ் நடத்தவுள்ள பிரமாண்டமான 'ஃபேமிலி ஃபேஷன்' ஷோவில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும். ஃபேஷன் ஷோவில் வெற்றிபெறும் குடும்பத்தினரின் படம் ஆனந்த விகடன் அட்டைப்படத்தில் இடம்பெறும். இதுமட்டுமின்றி ஃபேஷன் ஷோவில் பங்கேற்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சிறப்புப் பரிசுகள் காத்திருக்கின்றன!

இப்போதே அருகாமையில் உள்ள மேக்ஸ் ஸ்டோருக்குச் சென்று, ஃபேமிலி போட்டோ எடுத்து 'மேக்ஸ் சூப்பர் குடும்பம்' போட்டியில் கலந்துகொள்ளுங்கள். ஆனந்த விகடன் அட்டைப்படத்தில் இடம்பெறும் அரிய வாய்ப்பைப் பெற்றிடுங்கள்!

இறுதிப்போட்டி நடைபெறும் நாள் : 26/01/2020 | இடம்: புரோஸோன் மால், கோவை

மேலும் விவரங்களுக்கு: 97909 90404

முக்கிய குறிப்பு: மேக்ஸ் 'சூப்பர் குடும்பம்' போட்டி 'கோவை மாநகரத்தில் மட்டுமே' நடைபெறுகிறது. கோவையில் உள்ள 5 மேக்ஸ் ஸ்டோர்களில் மட்டுமே 'சூப்பர் குடும்பம்' போட்டோ வாய்ப்பு உண்டு.

அடுத்த கட்டுரைக்கு