Published:Updated:

கரூருக்கு வண்ணம் தீட்டும் 'ராஜா & கோ'

அந்தப் பெயின்ட் எங்களிடம் ஸ்டாக் இல்லாமல் போக, தேவைப்பட்ட பெயின்ட்டை உடனடியாக ஜப்பானில் இருந்து ஃபிளைட்டில் அனுப்பி வைத்தது நிப்பான்.

நிப்பான்
நிப்பான்

அமராவதி நதிக்கரையில் அமைந்துள்ளது தமிழகத்தின் கரூர் நகராட்சி. பாடல் பெற்ற தலங்களையும், வரலாற்றுச் சிறப்புமிக்க ரம்மியமான பல இடங்களையும் அடக்கிய கரூரில், கோவை பிரதான சாலையில் வரவேற்கிறது ராஜா & கோ. நிப்பான் பெயின்ட் நிறுவனத்தின் டீலராக கடந்த 14 வருடங்களாக செயல்பட்டுவருகிறது ராஜா & கோ, அதன் உரிமையாளர் இந்திரமூர்த்தி தன் வியாபாரப் பயணம் பற்றிய பல சுவாரசியமான தகவல்களை வழங்குகிறார்.

இது சிறப்பாக செயலாற்றி வரும் நிப்பான் பெயின்ட் டீலர்கள் தங்களின் தொழில் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் சிறப்பு பகுதியாகும்...

ராஜா & கோ...

1994 முதல் ரியல் எஸ்டேட், கட்டுமான பொருள் விற்பனை என பார்ட்னர்களோடு இயங்கிவந்த தொழிலில் ஓர் அங்கமாக இருந்தவர் இந்திரமூர்த்தி. 2000-ஆம் ஆண்டு முதல், தன்னை தூக்கி வளர்த்த சித்தப்பா பி. சின்னஸ்வாமி அவர்களின் துணையோடு கட்டுமானம் சம்பந்தப்பட்ட பொருள்களை விற்கும் சில்லறை வர்த்தகத்தில் தனித்து செயல்படுகிறார். 2005 முதல் ராஜா & கோ தங்களை பெயின்ட் விற்பனையாளர்களாக மாற்றிக்கொண்டனர், கடையின் முழுப் பொறுப்பை இந்திரமூர்த்தி ஏற்றுக்கொண்டார். துவக்கத்தில் அனைத்து பிராண்டு பெயின்டுகளையும் விற்றுவந்த ராஜா & கோவிற்கு, 2006ஆம் ஆண்டு முதல் நிப்பான் பெயின்ட் நிறுவனத்தின் அறிமுகம் கிடைக்கிறது, அப்போது ஒரு முக்கியமான புராஜெக்டுக்கு நிப்பான் பெயின்டை முதன்முறையாக பரிந்துரை செய்கிறார் இந்திரமூர்த்தி...

நிப்பான்
நிப்பான்

நிப்பான் பெயின்ட்டுக்கு ஆதரவு கிடைத்ததா?

கரூரின் பிரதான வங்கி ஒன்றின் அப்போதைய (2006) இயக்குனரின் வீட்டுக்குப் பெயின்ட் அடிக்கத்தான் நிப்பான் பெயின்டைப் பரிந்துரைத்திருந்தார் இந்திரமூர்த்தி. பெயின்டிங் முடிந்தது, தனது முதல் புராஜெக்ட் குறித்த கருத்துக்காக காத்திருந்தார் மூர்த்தி. அடுத்த நாளே இந்திரமூர்த்தியை அழைத்த வங்கி இயக்குனர், நிப்பானின் தரம் குறித்து புகழ்ந்து பேசினாராம். நெடியில்லாத, நல்ல ஃபினிஷிங் கொண்ட தரமான நிப்பான் பெயின்டை பரிந்துரைத்ததற்கு நன்றி தெரிவித்து, அவர் பணிபுரியும் பேங்க் கிளைகளுக்கு வெள்ளையடிக்க நிப்பான் பெயின்ட்தான் வேண்டும் என ஆர்டரும் கொடுத்தாராம். குறுகிய காலத்தில் நிப்பானின் புகழ் சந்தையில் பரவியது, தரமான பொருள்களை விற்பனை செய்ததற்காக ராஜா & கோ-வின் புகழ் பெயின்டர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடையே பரவியது, இதனிடையில் பெரிய புராஜெக்ட் ஒன்றில் திடீரென ஒரு சிக்கல் ஏற்பட்டது. அதை இந்திரமூர்த்தி எப்படி சமாளித்தார்?

5 லட்சம் மதிப்புள்ள அந்தப் பெரிய புராஜெக்ட்...

2006 ஆம் ஆண்டு 5 லட்சம் மதிப்புள்ள பெயின்டிங் புராஜெக்ட் என்பது மிகப் பெரியது. குடியிருப்புத் திட்டமான இதற்கும் நிப்பான் பெயின்டையே பரிந்துரைக்கிறார் மூர்த்தி. ஆனால் பெயின்ட் செய்த குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அடையடையாய் பெயின்ட் உதிர்ந்துபோனது. பெரிய புராஜெக்டில் திடீரென இப்படி நடந்தது குறித்து அதிர்ச்சியடைகிறார் மூர்த்தி. நிப்பான் பெயின்ட் நிறுவனத்தாரிடம் இதைத் தெரிவிக்க, ஜப்பானின் ஒசாகா நகரத்திலிருந்து உடனடியாக நிபுணர்களை அனுப்பி கட்டடத்தை சோதனை செய்கிறது நிப்பான் பெயின்ட். முடிவில் கட்டுமானத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்குள் மட்டும் வெற்றிடம் இருந்ததால், வெயிலில் அவ்விடத்தில் இருந்த பெயின்ட் மட்டும் உதிர்கிறது எனத் தெரிகிறது. இதில் பெயின்டில் குறையேதும் இல்லை, இருப்பினும், இந்திரமூர்த்தியின் மிகப்பெரிய புராஜெக்ட் என்பதால், கட்டுமானத்துக்கு ஏற்றபடி மீண்டும் பெயின்ட் செய்து தருகிறது நிப்பான். பிரச்னை தீர்ந்தது!

கரூருக்கு வண்ணம் தீட்டும் 'ராஜா & கோ'

"அப்போதைய நிப்பான் பெயின்ட் பிரசிடெண்ட் ரமாகாந்த் மற்றும் மேனேஜர் ஸ்ரீனிவாசனுக்கும் இதற்காக நன்றி சொல்லவேண்டும். இதேபோல மருத்துவமனை புராஜெக்ட் ஒன்றுக்கு நிப்பானின் வாட்டர் பேஸ்டு பாலியூரத்தேன் பெயின்ட்டை அனுப்பினோம். பாதி வெள்ளையடிக்கப்பட்ட நிலையில் அந்தப் பெயின்ட் எங்களிடம் ஸ்டாக் இல்லாமல் போக, தேவைப்பட்ட பெயின்ட்டை உடனடியாக ஜப்பானில் இருந்து ஃபிளைட்டில் அனுப்பி வைத்தது நிப்பான். பெயின்ட் விலையை விட ஃபிளைட் கட்டணம் அதிகம், இருப்பினும் வேலை தாமதம் ஆகக்கூடாது, தங்களின் டீலர் பெயர் கெட்டுவிடக்கூடாது என நிப்பான் நிறுவனத்தார் நினைத்தார்கள். இதுமாதிரியான சம்பவங்களும், அதற்கு நிப்பான் தரும் துரிதமான தீர்வும், ஆதரவும்தான் அவர்களை தனித்துவமான இடத்தில் வைத்துள்ளது" என்கிறார் இந்திரமூர்த்தி...

சிறப்பாக செயல்படக் காரணம்

கரூருக்கு வண்ணம் தீட்டும் 'ராஜா & கோ'

"ராஜா & கோ புகழ்பெற என் சித்தப்பா சின்னஸ்வாமி அவர்களின் சமூக அக்கறை பெரிய பங்காற்றியுள்ளது. காமராஜர் அறக்கட்டளை மூலம் கரூர் பகுதியில் பல நலத்திட்டங்களைச் செய்து வருகிறோம். நேர்மை, தரத்துக்கு முன்னுரிமை, வாடிக்கையாளர்கள் எந்நேரம் அழைத்து சந்தேகம் கேட்டாலும், அவர்களை உதாசீனப்படுத்தாமல் அவர்களுக்கு சரியான அறிவுரைகளை வழங்குவது, இதுபோன்ற வழக்கங்கள் ராஜா & கோவுக்கு பெருமை சேர்ப்பவை. எந்தக் காலத்திலும் கொடுக்க வேண்டிய பணத்தை ஒருவருக்கும் நாங்கள் இழுத்தடித்ததில்லை. வியாபாரம் சிறப்பாக செல்வதால், கஸ்டமருக்கு சலுகைகளை வழங்கமுடிகிறது. 60, 40, 27 மற்றும் 10 வருடங்கள் என தலைமுறை தலைமுறையாய் எங்கள் குடும்பத்துடன் இணைந்து துணை நிற்கும் நம்பகமான ஊழியர்கள், கட்டட பொறியாளர்கள், பெயின்டர்கள் மற்றும் நிப்பான் ஊழியர்களின் துணையோடு ராஜா & கோ சிறப்பாக செயல்பட்டுவருகிறது. முக்கியமாக என் பிசினஸ் பார்ட்னர் கந்தசாமியின் ஆதரவு விலைமதிப்பற்றது!"

அடுத்த தலைமுறை...

இந்திரமூர்த்தியின் மகன் சுரேந்திரபாபு மற்றும் மருமகள் மாதவி, ராஜா & கோ-வின் எலெக்ட்ரிக்கல்ஸ் மற்றும் பிளம்பிங் கடையை கவனித்து வருகின்றனர். "பொருள்களை ஏற்றி இறக்கி தேவையான இடங்களுக்குக் கொண்டுசெல்வது என உடல் உழைப்பை நம்பி இருக்கும் துறை இது. கடுமையான வேலைகளை எளிமையாக்க தொழில்நுட்பத்தை உபயோகிக்க வேண்டும். சரக்கு வைக்கும் கட்டடங்களை அதற்கேற்றவாறு வடிவமைப்பதில் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம். வித்தியாசமான அணுகுமுறை, ஊழியர்களுக்கு வேலையை எளிமைப்படுத்துவது, வாடிக்கையாளருக்கு விற்பனையைத் தாண்டி அனுபவங்களை வழங்குவது என இந்தத் துறையில் புதிய முயற்சிகளை எடுக்கப் பல திட்டங்களைக் கொண்டுவர இருக்கிறோம்" என உற்சாகமாய் தெரிவிக்கிறார் சுரேந்திர பாபு!

இயற்கையோடு இணைந்து வாழ்வோம்...

"நிப்பான் பெயின்ட் அதிகம் விற்பனையாகக் காரணம், அதன் பசுமைத் தன்மை. நெடி மிக மிகக் குறைவு, லெட், மெர்க்குரி, குரோமியம் & VOC எனப்படும் நச்சுப் பொருள் இல்லாத தன்மை, சுற்றுச் சூழலுக்கு ஏற்ற தயாரிப்புகள் என இந்திய பசுமைக் கட்டட அமைப்பின் விதிகளுக்குப் பொருந்தும்படி நிப்பானின் தயாரிப்புகள் இருக்கின்றன. குறிப்பாக நிப்பான் 'கிட்ஸ்' போன்ற தயாரிப்புகள் குழந்தைகளுக்கு ஏற்றவகையில் தயாரிக்கப்பட்ட சிறப்பான பெயின்ட் ஆகும். நிப்பானின் சுற்றுச் சூழல் அக்கறை காரணமாக பிற பெயின்ட் நிறுவனங்களும் இதுபோன்ற பசுமை தயாரிப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இது நல்லதொரு வியாபாரப் போட்டிக்கு வித்திட்டுள்ளது. நிப்பான் போல நாமும் பசுமையைப் போற்றி, இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும்!" என்கிறார் இந்திரமூர்த்தி...