Published:Updated:

ஹெலிகாப்டர் என்ட்ரி; ரூ. 90 லட்ச பண மழை!- கிராம மக்களை திகைக்கவைத்த தொழிலதிபர் திருமணம்

பணமழை
பணமழை

அரசியல் கட்சிகளின் பேரணிக்கு நிகராக கூட்டங்கள் பின்தொடர பாடல்களைப் பின்னால் ஒலிக்கவிட்டு மணமகன் ஊர்வலம் நடைபெற்றது.

வட மாநிலங்களில் திருவிழாக்களின்போது இசைக் கச்சேரிகள் நடத்தும் இசைக் கலைஞர்களுக்கு பணத்தை மழைபோல் வாரி இறைப்பது வழக்கம். இசைக் கச்சேரி மட்டுமில்லை சமுதாய விழாக்கள், ஆன்மிக விழாக்கள் போன்றவற்றிலும் இதுபோன்ற செயல் வழக்கமான ஒன்றாக இருந்துவருகிறது. தற்போது இதை விஞ்சும் வகையில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குஜராத்தின் ஜாம்நகர் சேலா பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ருஷிராஜ் சிங் ஜடேஜா.

ருஷிராஜ் சிங் ஜடேஜா
ருஷிராஜ் சிங் ஜடேஜா

அந்தப் பகுதியில் கான்ட்ராக்ட் உள்ளிட்ட பல தொழில்களைச் செய்துவருகிறார். சமீபத்தில் அவருக்குத் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்துக்காக ஆடம்பர ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். `ராயல் வெட்டிங்' என்னும் கூற்றுக்கு ஏற்ப பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அதன்படி திருமண நாளில் அந்தப் பகுதியின் முக்கிய சாலைகளில் மணமகன் ருஷிராஜ் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அரசியல் கட்சிகளின் பேரணிக்கு நிகராக கூட்டங்கள் பின்தொடர பாடல்களைப் பின்னால் ஒலிக்கவிட்டு மணமகன் ஊர்வலம் நடைபெற்றது.

பணமழை முதல் மரணம் வரை... - உலகிற்கு சேதி சொல்லும் ப்ராங்க் வீடியோக்கள்! #PrankGoneWrong

அப்போது, பொதுமக்களுக்கு பணத்தை வாரி இறைக்கத் தொடங்கினர் ருஷிராஜ் மற்றும் அவரது உறவினர்கள். 10 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை கட்டுக்கட்டாக மக்கள் மீது பணம் வாரி இறைக்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பணமழை பொழிந்தது. ஊர்வலம் முடிந்த பிறகு மணமகன் ருஷிராஜும், மணமகளும் ஹெலிகாப்டரில் பறந்து மண்டபத்துக்கு என்ட்ரி கொடுத்தனர். மணமகன் ஊர்வலத்தில் மட்டுமல்ல கல்யாணத்திலும், திருமணத்துக்கு முந்தையை சடங்குகளிலும் இதுபோல் பணமழை பொழிந்தவண்ணம் இருந்தனர்.

பணமழை
பணமழை

மொத்தமாக ரூ.90 லட்சம் வரை பணமழை பொழிந்தாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். குஜராத்தின் ஜாம்நகர் சேலா ஒரு கிராமப்புற பகுதி. இந்தப் பகுதியில் உள்ள மக்கள் இதுபோன்ற பணமழையை இதுவரை கண்டதில்லை என்கின்றனர். அதேபோல் இந்தக் கிராமத்தில் உள்ள பலரும் ஹெலிகாப்டரை ருஷிராஜின் கல்யாணத்துக்குக் கொண்டுவரப்பட்டதில்தான் கண்டுள்ளனர்.

`தூண்கள் இல்லா மண்டபம்; `ரிக் வேத’ சிம்மாசனம்!’ - கல்கி `ஒன்னெஸ் டெம்பிள்' பின்னணி

இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தாலும், ருஷிராஜ் குறித்து சில சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஆளும் கட்சி தயவில் தொழில்களை நடத்திவரும் இவர் தனது கறுப்பு பணத்தை வெள்ளையாக்கவே இப்படி பணமழை பொழிந்திருக்கிறார் என ஒருதரப்பு புகார் கூறி வருகிறது. ருஷிராஜ் சிங் ஒரு பிரமாண்ட பிரியர். எப்போதும் தனது சொகுசு வாழ்க்கை முறையை இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற வலைதளங்களில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை மட்டும் 1.50 லட்சம். இதனால் திருமணத்தை இவ்வளவு ஆடம்பரமாக நடத்தியதில் பெரிய ஆச்சர்யமில்லை என்கின்றனர் அப்பகுதிவாசிகள்.

ஆனால், இதைப்பற்றி எல்லாம் கவலையில்லாமல் ருஷிராஜ் பிரமாண்ட முறையில் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார். மணமகனின் அண்ணன், புதுமண தம்பதிக்கு ரூ.1 கோடி மதிப்பிலான சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார். திருமணத்தின்போது பெறப்பட்ட நன்கொடைகள் 5 கோசாலைகளுக்கு தானமாக வழங்கப்பட்டன. இவரின் ஆடம்பர திருமணம் குறித்த காட்சிகள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

கொள்ளை பணத்தில் சினிமா... நடிகைகளுடன் சொகுசு வாழ்க்கை... `பலே’ முருகனின் கதை!
அடுத்த கட்டுரைக்கு