Published:Updated:

தாயின் கல்லீரல் இருக்கிறது, ஆபரேஷனுக்கு பணம்தான் இல்லை!

Sponsored content

சபரீஷின் தாய் செல்லமணி தனது கல்லீரலின் பகுதியை தானம் செய்யத் தயாராக இருக்கிறார். ஆனால் அறுவை சிகிச்சைக்குத் தேவையான பணம் இல்லாத காரணத்தினால் சிகிச்சை தாமதமாகி வருகிறது

உதவி
உதவி

இந்தியாவில் ஆண்டுதோறும் பத்து லட்சம் பேர் கல்லீரல் நோயால் பாதிக்கப்படுகின்றனர். உலக சுகாதார அமைப்பின் அறிக்கைப்படி,இந்தியாவில் இறப்புக்கான பொதுவான காரணங்களில் கல்லீரல் நோய் பத்தாவது இடத்தில் உள்ளது. ஐந்து இந்தியர்களில் ஒருவருக்கு கல்லீரல் நோயின் தாக்கம் ஏற்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தக் கல்லீரல் நோய் பெரியவர்கள் மட்டுமின்றி,குழந்தைகளையும் பாதிக்கக்கூடியது!

4 வயது சபரீஷும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். அவனுக்கு வந்திருப்பது அரியவகை மரபு சார்ந்த கல்லீரல் நோய் (PFIC). சபரீஷ் பிறந்தபோது அனைவரும் மகிழ்ச்சியில் அவனுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது குழந்தையின் கல்லீரல் நோய் பற்றி தெரிவித்த மருத்துவர் அவன் உயிருடன் இருக்கும் ஒரு வாய்ப்பை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையே பெற்றுத் தரும் என தெரிவித்தார். பெற்றோரின் மகிழ்ச்சி நொடியில் சாம்பலாகிப்போனது!

தாயின் கல்லீரல் இருக்கிறது, ஆபரேஷனுக்கு பணம்தான் இல்லை!

குழந்தையைப் பெறுவது ஒரு வரம் என்றால் அந்தக் குழந்தையின் வலியை தினமும் பார்ப்பது ஒரு சாபம். அவ்வாறான சாபத்தைப் பெற்றதுபோன்ற உணர்வை உணர்ந்து வருகின்றனர் சபரீஷின் பெற்றோரான தங்கபாண்டியன் மற்றும் செல்லமணி. சபரீஷிற்கு ஒரு வயது இருக்கும்போது மஞ்சள் காமாலையால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அப்போது அவன் கல்லீரல் மேலும் வலுவிழந்து போயிருந்தது. தற்போது உடல்நலக் குறைவால் பள்ளிக்குச் செல்லாமல் சிகிச்சைப் பெற்று வருகிறான் சபரீஷ்.

சபரீஷின் தாய் செல்லமணி தனது கல்லீரலின் பகுதியை தானம் செய்யத் தயாராக இருக்கிறார். ஆனால் அறுவை சிகிச்சைக்குத் தேவையான பணம் இல்லாத காரணத்தினால் சிகிச்சை தாமதமாகி வருகிறது. தந்தை தங்கபாண்டியன் தினக் கூலி வேலை செய்வதால் சபரீஷினைக் காப்பாற்ற போராடி வருகிறார். கல்லீரலை தானம் செய்பவர் மற்றும் அதனை பெற்றுக்கொள்பவர் என இருவருக்கும் சேர்த்து இரண்டு லட்சம் ரூபாய் மருத்துவத்துக்குத் தேவைப்படும் என தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது.

சபரீஷைக் காப்பாற்ற கையேந்திய கரங்களுடன் நிற்கிறது இந்த ஏழ்மையான குடும்பம். அவர்களுக்கு நிதி திரட்டும் இணையதளமான 'EDUDHARMA' உதவ முன்வந்துள்ளது. நம்பிக்கை இழந்து தவிக்கும் சபரீஷின் குடும்பத்தாருக்காக Edudharma-வுடன் சேர்ந்து நாம் செய்யும் உதவி சிறுவனின் உயிரைக் காக்கும்! சபரீஷுக்கு உதவி செய்ய நினைக்கும் அத்தனை உள்ளங்களும் https://www.edudharma.com/fundraiser/help-little-sabarish-undergo-liver-transplant இந்த லிங்கிற்குச் சென்று தங்களின் உதவியை செய்யலாம்!

தாயின் கல்லீரல் இருக்கிறது, ஆபரேஷனுக்கு பணம்தான் இல்லை!

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Edudharma-வின் விளம்பரதாரர் பகுதியாகும். எனவே, இதில் கூறப்பட்டுள்ள செய்திகளின் உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பாகாது. இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம் என்பதால், நன்கொடை செய்வதற்கு முன்னர் இச்செய்தியின் உண்மைத்தன்மையை சுயாதீனமாக ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளுமாறு வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.