Published:Updated:

சென்னையில் பரதநாட்டியக் கலைவிழா! #MyVikatan

பரதம் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்நிகழ்ச்சி புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

பரதக் கலைஞர்களின் குழு
பரதக் கலைஞர்களின் குழு

மும்பை பரதநாட்டிய கலாலயாவின் சார்பில் மார்கழித் திருவிழா சிறப்பு நிகழ்ச்சி வரும் ஜனவரி 2 முதல் 5 வரை நான்கு நாள்கள் சென்னையில் நடைபெற உள்ளது. நூற்றுக்கணக்கான திறமையான பரதநாட்டியக் கலைஞர்களை உருவாக்கிய குரு கீதா வெங்கடேஷ்வர் தலைமையில் இளம் பரதக் கலைஞர்களின் பரதநாட்டியம் நடைபெற உள்ளது.

பரதக் கலைஞர்களின் குழு
பரதக் கலைஞர்களின் குழு

கீதாவின் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பார்த்து ரசித்த அனுபவத்தில் இதை இங்கே பகிர்கிறேன். பரதம் மீது ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும்.

சென்னையில் பரதநாட்டியக் கலைவிழா! #MyVikatan

வரும் 2020, ஜனவரி 2-ம் தேதி, மயிலாப்பூரில் உள்ள ஷீரடி சாய்பாபா ஆலயத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. ஜனவரி 3-ம் தேதி மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸில் மாலை 7:15 மணிக்கு நடக்கும். ஜனவரி 4-ம் தேதி, பெசன்ட்நகரில் உள்ள இரத்தினகிரிஸ்வரர் ஆலயத்தில் மாலை 6:30 மணிக்கு நடக்கும். ஜனவரி 5-ம் தேதி, பிரம்ம கான சபாவில், மாலை 6:15 மணிக்கு நடைபெறும். சிறந்த நடனக் கலைஞர்களின் திறமையை ரசிக்க விரும்புவோர் இக்குழுவின் நாட்டியத்தைப் பார்த்து மகிழுங்கள்.

-எஸ்.குருமூர்த்தி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/