Published:Updated:

`அவர் எனக்காக செய்ததை நான் அவருக்கு செய்தேன்!’ -ஒரே கல்லூரியில் `சீனியர்’ மகள்,`ஜூனியர்’ தந்தை

கலிலுல்லா.ச

நாங்கள், எங்கள் பேராசிரியர்கள் குறித்துப் பேசிக்கொள்வோம்; சக மாணவர்கள் குறித்துப் பேசிக்கொள்வோம்; கல்லூரியில் கொடுக்கப்படும் அசைன்மென்ட்கள் குறித்தும் பகிர்ந்துகொள்வோம்.

ஒரே கல்லூரியில் படிக்கும் தந்தையும் மகளும்
ஒரே கல்லூரியில் படிக்கும் தந்தையும் மகளும் ( Facebook )

உண்மையில் வயது என்பது வெறும் எண்தான். அது ஒருபோதும் உங்கள் எண்ணத்துக்கு முட்டுக்கட்டையாக இருக்காது. அப்படியேயிருந்தாலும், அதை உடைத்து சாதனை படைத்தவர்கள் இங்கே ஏராளம். அதற்கான உதராணங்களும் பல உண்டு. அந்த வகையில், `ஹூயூமன்ஸ் ஆஃப் பாம்பே’ (Humans of bombay) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டிருந்த போஸ்ட் ஒன்று பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 24 ஆயிரம் லைக்குகள், 1300 ஷேர், 1000 கமென்ட்ஸ்களுடன் செம்ம வைரல்! பலருக்கான உத்வேகத்தையும் கொடுத்துள்ளது அந்த போஸ்ட்.

மகள்
மகள்
facebook

மகள் படித்த கல்லூரியிலே தந்தையும் படித்து வருகிறார். சொல்லப்போனால், மகளுக்கு ஜூனியராக சட்டம் படித்து வருகிறார் அப்பா. அதில், ``என் தந்தைக்கு சட்டக்கல்வி மீது தீராகாதல் இருந்தது. பணப் பிரச்னை காரணமாக அவரது இளம் வயதில், அவரால் கல்வியைத் தொடரமுடியாமல் போனது. நாள்கள் கடக்க இரவு பகலென கடுமையாக உழைத்து, தன் குழந்தைகளைப் படிக்க வைத்தார். அதன் மூலம் தன் பிள்ளைகளுக்கான கல்வியை சாத்தியப்படுத்தியுள்ளார்.

என் தங்கை ஒரு டாக்டர். என்னுடைய இரண்டு சகோதரர்களும் நானும் சட்டம் படிக்கிறோம். என்னுடைய தந்தை நான் படிக்கும் பாடத்திட்டங்களைத் கேட்டுத் தெரிந்துகொள்வதில் ஆர்வமிக்கவராக இருந்தார். என்னுடைய வகுப்புகள் மற்றும் நான் என்னென்ன செய்கிறேன் என அனைத்தையும் கேட்பார். என் தந்தை தன்னுடைய கனவுகளைத் தொடர இதுதான் சரியான சமயம் என நான் உணர்ந்தேன். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன். நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, நானும் என் தந்தையும் ஒரே கல்லூரியில் படித்துவருகிறோம். அவர் என்னுடைய ஜூனியர்.

தந்தையும் மகளும்
தந்தையும் மகளும்

நாங்கள், எங்கள் பேராசிரியர்கள் குறித்து பேசிக்கொள்வோம்; சக மாணவர்கள் குறித்து பேசிக்கொள்வோம்; கல்லூரியில் கொடுக்கப்படும் அசைன்மென்ட்கள் குறித்தும் பகிர்ந்துகொள்வோம். இன்னும் சொல்லப்போனால், பிரேக் நேரங்களில் என் தந்தை, என்னுடைய நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார். அவர்களும் அதை விரும்புவார்கள். அவருடைய கனவை புதிப்பிப்பதில் எனக்கு அப்படியொரு மகிழ்ச்சி! அவர் எனக்கு என்ன செய்தாரோ, அதை அவருக்கு நானும் செய்வேன் என நம்புகிறேன். நாங்கள் இருவரும் எங்கள் கனவுகளை துரத்திக்கொண்டிருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.