Published:Updated:

'கட்டுமானத் தொழில்!' - சவால்களும் வாய்ப்புகளும்... இலவச கருத்தரங்கு, ஜூலை 26...

ஜி.பி.ஆர் டிஎம்டி நிறுவனம்
ஜி.பி.ஆர் டிஎம்டி நிறுவனம்

நாணயம் விகடன் மற்றும் ஜி.பி.ஆர் டிஎம்டி நிறுவனம் இணைந்து வழங்கும் 'கட்டுமானத் தொழில்' - சவால்களும் வாய்ப்புகளும்! கருத்தரங்கு மூலம், மேற்கண்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில்களைத் தர இருக்கிறார்கள் நிபுணர்கள்

முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களுக்குப் பிறகு மிகப்பெரிய பொருளாதாரச் சரிவையும் வேலை இழப்பையும் உலகமே சந்தித்து வருகிறது. இந்தியாவிலும் இது எதிரொலித்துள்ளது.

இந்தியப் பொருளாதாரத்திற்குக் கிட்டத்தட்ட 30% பங்களிப்பைத் தருவது இண்டஸ்ட்ரி செக்டாரின் கீழ் வரும் கட்டுமானத்துறை, சுரங்க வேலைகள், மின்சாரம், தண்ணீர் மற்றும் உற்பத்தித் துறைகள்தான். இவற்றில் அதிமுக்கியமான கட்டுமானத்துறை தரும் பங்கு மட்டும் என்ன தெரியுமா? கிட்டத்தட்ட மூன்று லட்சம் கோடி ரூபாய்!

கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள கட்டுமானத்துறை!

குடியிருப்புகள் மட்டுமல்ல... வணிகக் கட்டடங்கள், பாலங்கள், அணைக்கட்டுகள், சாலைகள், ரயில்வே, மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு வழித்தடங்கள் - இப்படி, வளர்ச்சிக்கு அடிப்படையான அத்தனைக் கட்டுமானப் பணிகளும் இன்று பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.

இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கூலியாட்கள், பெயிண்டர்கள், கட்டுமானப் பொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், பொறியாளர்கள், முதலீட்டாளர்கள், வங்கிகள், கடன் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், அதில் பணிபுரிகிற ஊழியர்கள் - இப்படிச் சீட்டுக்கட்டைச் சரித்தது போல் சரிந்து கிடக்கிறது கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம்!

'கட்டுமானத் தொழில்!' - சவால்களும் வாய்ப்புகளும்... இலவச கருத்தரங்கு, ஜூலை 26...

கட்டுமானத் தொழில் - சவால்களும் வாய்ப்புகளும்!

எத்தனை நாளைக்கு இது நீடிக்கும்? நாம் அனைவரும் எதிர்பார்க்கும் அந்த மாற்றம் நிகழுமா? கட்டுமானத்துறை மற்றும் அதுசார்ந்த தொழில்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா?

எந்தெந்த நடவடிக்கைகள் மூலம் இழந்ததை மீண்டும் பெறலாம்? காலத்துக்கு ஏற்றார்போல் பாதுகாப்போடு கட்டுமானத்துறை இயங்குவது எவ்வாறு?

நாணயம் விகடன் மற்றும் ஜி.பி.ஆர் டிஎம்டி நிறுவனம் இணைந்து வழங்கும் 'கட்டுமானத் தொழில்' - சவால்களும் வாய்ப்புகளும்! கருத்தரங்கு மூலம், மேற்கண்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில்களைத் தர இருக்கிறார்கள் நிபுணர்கள்.

இந்த ஆன்லைன் நிகழ்ச்சி வரும் ஜூலை 26-ம் தேதி, காலை 10.30 முதல் நடைபெற உள்ளது.

கருத்தரங்கில் கலந்துகொள்ளும் நிபுணர்கள்:

* மு.மோகன், நேஷனல் பிரெசிடென்ட், இந்தியக் கட்டுனர்கள் சங்கம் (BAI)

'கட்டுமானத் தொழில்!' - சவால்களும் வாய்ப்புகளும்... இலவச கருத்தரங்கு, ஜூலை 26...

* ஜி.கணேஷ், மாநிலச் செயலாளர், தமிழ்நாடு & புதுச்சேரி கட்டுமானப் பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FACEAT&P)

* எஸ்.ஸ்ரீதரன், தமிழ்நாடு சேர்மன், CREDAI

* வெங்கடேஷ் ரதி, நிர்வாக இயக்குநர், ஜி.பி.ஆர் மெட்டல்ஸ் பிரைவட் லிமிடெட்

கட்டுமானம் சம்பந்தப்பட்ட தொழில் செய்வோரும், அது சார்ந்த வேலை செய்வோரும்

இந்தப் பில்டர்ஸ் மீட்டில் கலந்துகொண்டு பயன்பெறலாம்! அனுமதி இலவசம்!

பதிவு செய்ய: https://bit.ly/38PedJ9

அடுத்த கட்டுரைக்கு