Published:Updated:

இயற்கையாக கருத்தரிக்க வழி செய்யும் நலமனை!

அகத்தியா சித்தா நலமனை
அகத்தியா சித்தா நலமனை

ஆண்களுக்கு, அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவு, உடுத்தும் உடை, தூக்கமின்மை, வேலை பளு, மன உளைச்சல் உள்ளிட்ட விஷயங்களே இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பாக அமைகிறது. இப்போதெல்லாம் விரைவாக விளையவைத்த உணவுகளை உண்கிறோம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இறைவன் கொடுத்த செல்வங்களில் குழந்தைச் செல்வம் என்பது நமக்கு கிடைத்த மிகப்பெரிய வரம். ஆனால், இன்று பல்வேறு சூழல்களால் குழந்தைப் பாக்கியம் கிடைக்காத ஏக்கத்திலேயே வாழ்நாளைக் கழிக்கும் தம்பதிகளை நேரிலேயே பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒருகாலத்தில் குழந்தையின்மைக்கு முழுக்க முழுக்க பெண்கள்தான் காரணம் எனப் பழி சொன்னார்கள். உண்மையில் ஆண், பெண் என இருபாலருமே காரணமாக இருக்கிறார்கள். உணவுப்பழக்கம், சத்துக்குறைபாடு, உடல்பருமன், சுற்றுச்சூழல், மனஅழுத்தம் என குழந்தையின்மைக்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். திருமணமாகி ஓராண்டுகாலத்திற்கு பின்பும் கருத்தரிக்கவில்லை என்றால் தம்பதிகள் நிச்சயம் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை பெறுவது அவசியமாகும்.

உண்மையில் ஆண், பெண் என இருபாலருமே காரணமாக இருக்கிறார்கள். உணவுப்பழக்கம், சத்துக்குறைபாடு, உடல்பருமன், சுற்றுச்சூழல், மனஅழுத்தம் என குழந்தையின்மைக்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

குழந்தையின்மையால் ஏங்கிப் போயிருக்கும் பல தம்பதிகளுக்கு செயற்கை கருத்தரிப்பு முறை மூலமாக குழந்தைப் பாக்கியத்தை இக்காலகட்டத்தில் கொடுக்க முடிகிறது. ஆனால், திருமணமான சில மாதங்கள் அல்லது ஒரு வருடத்திலேயே செயற்கை முறை கருத்தரிப்பு அவசியமற்றது. குழந்தையின்மை குறித்த தவறான புரிதல்களால் கருத்தரிப்பு மையங்களை நாடிச் செல்வதை தவிர்க்கவேண்டும். ஏனெனில் செயற்கையான முறையில் அல்லாமல் இயற்கையான முறையிலேயே கருத்தரிக்க முடியும் என்பதை நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் 'அகத்தியா சித்தா நலமனை' நிறுவனர், மருத்துவர் எஸ். செந்தில்குமார். "குழந்தையின்மைக்கு பெண்ணிற்கு மட்டுமின்றி ஆணிற்கும் சரிசமமாக பங்குண்டு. குழந்தையின்மைக்கு அவர்களின் வாழ்வியல் மாற்றங்களே முக்கியமாக காரணம்" என்று கூறும் மருத்துவர் செந்தில், இரு பாலருக்கும் ஏற்படும் பிரச்னைகளைப் பற்றி விவரிக்கிறார்.

ஆண்:

குழந்தையின்மை பிரச்னைக்கு முதலில் ஆணுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறது அகத்தியா சித்தா நலமனை. ஆண்களைப் பொறுத்தவரை விந்து அணுக்கள் குறைவாக இருக்கிறதா என பரிசோதிக்கப்படுகிறது. விந்து அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், கருவுறுதல் தாமதமாகும். அதேபோல விதைப்பையில் நரம்பு சுற்றிக்கொண்டிருந்தால் விந்து உற்பத்தி ஆகுமே தவிர, அதில் உயிரணுக்கள் உற்பத்தியாகாது. பூட்டுத்தாள் அம்மை, குரோமோசோமல் குறைபாடு போன்ற பிரச்னைகளாலும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைய வாய்ப்புண்டு.

ஆண்களுக்கு, அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவு, உடுத்தும் உடை, தூக்கமின்மை, வேலை பளு, மன உளைச்சல் உள்ளிட்ட விஷயங்களே இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பாக அமைகிறது. இப்போதெல்லாம் விரைவாக விளையவைத்த உணவுகளை உண்கிறோம்.. இயற்கை உரங்கள் அல்லாத ரசாயன உரங்களைச் சேர்த்த உணவுகளை உண்ணுகிறோம். வேட்டி அணியாமல் ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடை அணிகிறோம். அதிலும் உள்ளாடையுடன் அணியும் உடைகளை காலையில் உடுத்தினால் இரவுதான் அவிழ்க்கிறோம். இதனால் உடலில் அதீத உஷ்ணம் ஏற்பட்டு விந்து அணுக்கள் உற்பத்தியில் பிரச்னை வருகிறது.

இயற்கையாக கருத்தரிக்க வழி செய்யும் நலமனை!

பெண்:

பெரும்பாலும் பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய், பிசிஓடி (நீர்க்கட்டி), உடல் பருமன், ஹார்மோன் சமச்சீரின்மை போன்ற காரணங்களால் கருத்தரித்தலில் பிரச்னை ஏற்படலாம். இதில் நீர்க்கட்டியினால் கருப்பையில் இருந்து முட்டை வெளிவராத தன்மை, சினைக் குழாயில் ஏற்படும் சேதம் அல்லது அடைப்பு, மெனோபாஸ் கட்டத்தை எட்டிய வயது முதிர்வு போன்ற முக்கிய காரணங்களால் குழந்தையின்மை பிரச்னை அதிகரிக்கிறது. கருப்பையில் இருந்து முட்டையை வெளியேற்றி, அதன் செயல்பாட்டை சீராக்குவதே பெண்களுக்காக வழங்கப்படும் முதல் சிகிச்சையாகும். இயற்கையான முறையில் அளிக்கப்படும் சித்த மருத்துவ சிகிச்சைகளில் பெண்கள் முழுமையாக குணமடைவார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆண்/பெண் நலம் காக்கும் நலமனை

உணவே மருந்து, மருந்தே உணவு என்ற கோட்பாட்டை கடைபிடிப்பதே சித்த மருத்துவ சிகிச்சையாகும். அன்றாடம் நாம் உண்ணும் உணவுகளில் சில மாற்றங்களை மட்டும் ஏற்படுத்தி, அதனுடன் சித்த மருந்துகளையும் சேர்த்து எடுத்துக்கொண்டால் குழந்தையின்மை பிரச்னையை முழுமையாகத் தீர்க்கமுடியும். தாய்மை என்பது இறைவன் கொடுத்த வரம். அதனை நாம் இயற்கையான முறையில் பெறுவதே ஆனந்தம். அதன்மூலம் பல உடல்ரீதியான பிரச்னைகளையும் நம்மால் குறைத்திட முடியும். செயற்கை முறையில் கருத்தரித்தல், அதற்காக அறுவை சிகிச்சை போன்ற விஷயங்கள் எதுவுமின்றி முழுக்க முழுக்க இயற்கையான முறையில் தாய்மையடையச் செய்ய வழி வகுத்து வருகிறது 'அகத்தியா சித்தா நலமனை'. பாலியல் ரீதியான பல பிரச்னைகளுக்கு ஆண் மற்றும் பெண் மருத்துவர்களைக் கொண்டு சிறந்த தீர்வினை வழங்குகிறது அகத்தியா நலமனை.

இயற்கையாக கருத்தரிக்க வழி செய்யும் நலமனை!

அகத்தியா சித்தா நலமனை

மூலிகை மசாஜ், நீராவிக் குளியல் மற்றும் பஞ்சகர்மா சிகிச்சை மையமான அகத்தியா சித்தா நலமனை, சித்தா ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையில் கடந்த இருபத்தி ஐந்து வருடங்களாக கடலூரில் தலைசிறந்து விளங்கிவருகிறது. இங்கு, முதுகுத் தண்டு பிரச்னைகள், கழுத்து, இடுப்பு எலும்புத் தேய்மானம், முழங்கால் வலி போன்றவற்றிற்கு வர்ம முறைப்படி மூலிகை மசாஜ் செய்யப்படுகிறது. நாட்பட்ட நோய்களுக்கும் மருத்துவ நிபுணர்கள் மூலம் சித்தா ஆயுர்வேத சிகிச்சை மற்றும் யோகப் பயிற்சி அளிக்கப்படுகிறது. நோயாளிகளுக்குத் தேவையான 70க்கும் மேற்பட்ட மருந்துகள் அகத்தியா நலமனையிலேயே தயாரிக்கப்படுகின்றன. பலதரப்பட்ட நோய்களுக்கு இயற்கை முறையில் தீர்வுகண்டு நலம் காக்கும் அகத்தியா நலமனை கடலூர், பண்ருட்டி & பாண்டிச்சேரியிலும் அமைந்துள்ளது.

இயற்கையாக கருத்தரிக்க வழி செய்யும் நலமனை!

மேலும் விவரங்களுக்கு

கடலூர்: நெல்லிக்குப்பம் ரோடு, (மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் அருகில்), செம்மண்டலம், கடலூர்-607001. முன்பதிவுக்கு: போன்: 04142-291994, செல்: 95785 23205

பாண்டிச்சேரி: நெ.79, வைசியால் தெரு, சுசிலாபாய் பள்ளி எதிரில், பாண்டிச்சேரி, போன்: 0413-4901522, 96777 06766.

பண்ருட்டி: ஸ்ரீ முருகன் சித்தா கிளினிக், நெ.36, இந்திராகாந்தி சாலை(பஸ் நிலையம் பின்புறம்), பண்ருட்டி. போன்: 04142-320022, 98650 34523

Email: agathiyasiddha@yahoo.co.in

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு