Published:Updated:

"எல்லாத்தையும் போன்ல சொல்ல முடியாதும்மா!" - 'நீட்' கோச்சிங் மையத்துடன் ஓர் உரையாடல்

நீட்
நீட்

பயிற்சி மையம்: வாய்ப்பே இல்லம்மா... நீங்க சப்ஜெக்ட்ல ஸ்ட்ராங்கா இருந்தா பேசிக்கான மார்க் வாங்கி பாஸ் பண்ணலாம். கவர்மென்ட் காலேஜ் போகணும்னா ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ கோச்சிங் வேணும்.

ஒரு வருடத்துக்கு, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா நகரத்து கோச்சிங் மையங்கள் ஈட்டும் தொகை மட்டும் 600 கோடி ரூபாய்!

கோட்டா மட்டுல்ல, டெல்லியின் முகர்ஜி நகர், ராஞ்சி, ஹைதராபாத், திருவனந்தபுரம் என நிறைய நகரங்களில் கோச்சிங் பிசினஸ் களைகட்டுகிறது. வண்ண வண்ண வார்த்தைகள் சொல்லி, பெற்றோரையும் மாணவர்களையும் வளைக்கும் இந்தப் பயிற்சி மையங்கள் கற்றுத்தருவதென்னவோ வெறும் குறுக்குவழி டெக்னிக்குகளை மட்டும்தான். அதற்கான சான்று, இந்த உரையாடல்!

சென்னையின் டாப் 10 நீட் கோச்சிங் மையங்களில் ஒன்றை தொடர்புகொண்டு, 'பயிற்சியில் சேர வேண்டும்' என்று கூறினேன். அந்த உரையாடலைக் கேளுங்கள்.

நான்: சார், எனக்கு டாக்டர் ஆகணும்கிறது கனவு. எந்த மாதிரி கோச்சிங் எடுத்துக்கிட்டா நீட்ல பாஸாக முடியும்?

பயிற்சி மையம்: ஒரு வருடப் பயிற்சி சரியா இருக்கும்மா. அதுல சேர முடியலைன்னா மூணு மாச கோர்ஸ் இருக்கு. அதுகூட ட்ரை பண்ணலாம்.

கோச்சிங் மட்டும் முப்பதாயிரம் ஆகும்மா. தங்குற செலவு, சாப்பாடு செலவெல்லாம் உங்களோடது.

நான்: அதென்ன சார் மூணு மாச கோர்ஸ்?

பயிற்சி மையம்: சிலர் பிசிக்ஸ், கெமிஸ்ட்ரியில வீக்கா இருப்பாங்க. அவங்களுக்கு பயாலஜி மட்டும் கோச் பண்ணுவோம். கூடவே கொஞ்சம் டெக்னிக் கத்துக்கொடுப்போம். அந்த டெக்னிக்கை ஃபாலோ பண்ணினா, கண்டிப்பா நீட்ல பாஸ் பண்ணிடலாம்.

நான்: என்ன மாதிரி டெக்னிக் சார்?

பயிற்சி மையம்: எல்லாத்தையும் போன்ல சொல்ல முடியாதும்மா. நெகட்டிவ் மார்க்கைத் தவிர்க்கிற வழிமுறைகள், கேள்விகளைக் கையாள்ற வழிகளையெல்லாம் சொல்லித் தருவோம்.

நான்: அதுமூலமா கவர்மென்ட் காலேஜ் கிடைக்குமா சார்?

பயிற்சி மையம்: வாய்ப்பே இல்லம்மா... நீங்க சப்ஜெக்ட்ல ஸ்ட்ராங்கா இருந்தா பேசிக்கான மார்க் வாங்கி பாஸ் பண்ணலாம். கவர்மென்ட் காலேஜ் போகணும்னா ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ கோச்சிங் வேணும்.

நான்: ஃபீஸ் எவ்வளவு சார்?

பயிற்சி மையம்: கோச்சிங் மட்டும் முப்பதாயிரம் ஆகும்மா. தங்குற செலவு, சாப்பாடு செலவெல்லாம் உங்களோடது.

நான்: ஒரு வருஷத்துல கண்டிப்பா எனக்கு டாக்டர் சீட் கிடைச்சிடுமா சார்?

பயிற்சி மையம்: ஐ.ஐ.டி ஸ்டாஃப் எல்லாம் இங்க இருக்காங்கம்மா. நல்லா சொல்லித்தருவாங்க. மத்தபடி நீங்க கத்துக்கிறதுலதாம்மா இருக்கு.

(உரையாடல் நிறைவடைகிறது.)

எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகளில் பயின்ற 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தற்போது வெளிநாட்டில்தான் இருக்கின்றனர்

"எல்லாத்தையும் போன்ல சொல்ல முடியாதும்மா!" - 'நீட்' கோச்சிங் மையத்துடன் ஓர் உரையாடல்

டாப் பயிற்சி மையங்களில் வீட்டில் இருந்து கோச்சிங் செல்ல வருடத்துக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகும். சுமாரான பயிற்சி மையங்களில் கோச்சிங் செல்ல குறைந்தபட்சம் 30,000 ரூபாயாவது தேவைப்படும்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூற்றுப்படி, தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்குக்கீழ் வசிப்பவர்கள் 65 லட்சம் பேர். சென்னையில் வசிப்பவர்களில் 40 சதவிகிதம் பேர், அரசாங்க அளவீட்டின்படி வறுமைக் கோட்டுக்குக்கீழ்தான் இருக்கின்றனர். இவர்களுக்கெல்லாம் அன்றாட வருமானம் என்பது, உணவுக்கே போதுமானதாக இல்லை. இவர்கள் வீட்டுப் பிள்ளைகளெல்லாம் என்னதான் ஈடுபாட்டுடன் படித்தாலும், மருத்துவர் ஆக முடியாது என்பதுதான் யதார்த்தம்.

ஐ.ஐ.டி பேராசிரியர், கோட்டா பயிற்சி மையத்தில் கற்பித்தவர் என்றெல்லாம் பல ஜிகினாக்களைத் தூவி இங்கு இருக்கும் கோச்சிங் மையங்கள் விற்கும் நீட் பயிற்சியை, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கும் இந்தக் குடும்பங்களின் பிள்ளைகளால் நெருங்கக்கூட முடியாது. இது எவ்வளவு பெரிய பாகுபாடு!

- இந்திய அளவில் 'நீட்' கோச்சிங் மையங்கள் கல்லா கட்டுவதன் பின்னணி, அதன்மூலம் உற்பத்தி செய்யப்படுவோரால் ஏற்படும் எதிர்கால விளைவுகள் ஆகியவற்றுடன் மாணவி ஒருவரின் கதையை விவரிக்கிறது, ஐஷ்வர்யா எழுதிவரும் 'நீட் வைரஸ்' தொடர் பகுதி. இந்த அத்தியாயத்தை முழுமையாக வாசிக்க > நீட் வைரஸ் - 4: நீட் கற்றுத்தரும் குறுக்குவழி உத்திகள்! https://www.vikatan.com/news/education/series-about-neet-exam-4

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு