Published:Updated:

ஓடு, விளையாடு! குழந்தைகளை ஊக்குவிக்கும் நிப்பான் பெயின்ட்...

பிள்ளைகள் குழுவாக இணைந்து விளையாடுவதால், சமூகத்தோடு இணைந்து இயங்கும் பண்புகளை வளர்த்துக்கொள்கின்றனர்

நிப்பான்
நிப்பான்

ஓடி விளையாட வேண்டும், ஓய்ந்துபோகாது இருந்திடல் வேண்டும், கூடி விளையாட வேண்டும், அங்கும் குழந்தைகளை வையாது இருத்தல் வேண்டும்! பாரதியின் சிம்பிளான இந்தப் பாப்பா பாட்டில் ஒளிந்திருக்கும் கருத்துகளை நவீன உளவியல் நிபுணர்களும்கூட ஆதரிக்கின்றனர். ஒரு மனிதர் வாழ்க்கையில் எப்படி ஜொலிக்கப்போகிறார் என்பது அவரின் இளமைக்காலத்திலேயே முடிவாகிவிடுகிறது. நல்ல உடல் மற்றும் மன நலம், வேலையோ, வேலைக்கு வெளியிலேயோ சக மனிதர்களுடனான சுமூக உறவு, பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறன், வேகமாக முடிவெடுக்கும் ஆற்றல், இவை அனைத்தும் வாழ்வில் வெற்றி பெறுவதற்கு தேவையான தகுதிகள். இந்தத் தகுதிகள் அனைத்தையும் தரக்கூடிய பயிற்சியே விளையாட்டு, அதனால்தான் பாப்பா பாட்டில், குழந்தைகளை முதலில் விளையாடச் சொல்கிறார் பாரதி்!

குழந்தைகளை விளையாட அனுப்புவோம்...

வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் குழந்தைகளுக்கு மன அழுத்தம், கூச்ச சுபாவம், எந்தவொரு விஷயத்திலும் ஆர்வமின்மை, பயம், உடல் பருமன் போன்ற எண்ணற்ற பிரச்னைகள் வரக்கூடும். விளையாட்டுகளில் பங்கேற்பதால், என்டார்பின்ஸ் (Endorphins) எனப்படும் மகிழ்ச்சிதரும் இரசாயனங்கள் உடலில் சுரக்கின்றன. இது அவர்களை உற்சாகம் மிகுந்தவர்களாக ஆக்குகிறது. வலிமையான எலும்பு & தசை வளர்ச்சி, தேவையான தூக்கம், தன்னம்பிக்கை, ஒத்துழைப்பு ஆகிய நேர்மறை விஷயங்களைப் பெற்றிட விளையாட்டு உதவுகிறது.

ஓடு, விளையாடு! குழந்தைகளை ஊக்குவிக்கும் நிப்பான் பெயின்ட்...

பிள்ளைகள் குழுவாக இணைந்து விளையாடுவதால், சமூகத்தோடு இணைந்து இயங்கும் பண்புகளை வளர்த்துக்கொள்கின்றனர். சகாக்களோடு இணைந்து செயல்படவும், தன்னலம் இல்லாமல் செயல்படவும் கற்றுக்கொள்கின்றனர். தான் வசிக்கும் இடத்திலுள்ள வேற்று மனிதர்களையும் தனது பந்தமாக பார்க்கும் பெருந்தன்மை இதனால் வளர்கிறது. மேலும், குழந்தைகளுக்கு விளையாட்டால் வளரும் மற்றொரு முக்கிய பண்பு ஒழுக்கம். விளையாட்டு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கிற ஒழுக்கமும், மீறினால் தண்டிக்கப்படுவோம் என்கிற விஷயமும் அவர்களை நேர்மையான மனிதர்களாக வார்க்கிறது. தன்னலமான முடிவுகளைத் தவிர்த்து போட்டியின் போக்குக்குத் தேவையான, சரியான முடிவை மட்டுமே எடுக்கும் திறனும் வளர்கிறது.

குழந்தைகளை ஊக்குவிக்கும் நிப்பான் பெயின்ட்

பள்ளிக்குழந்தைகளுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் குஷியான ஒரு விஷயத்தைச் செய்துவருகிறது நிப்பான் பெயின்ட். ஒவ்வொரு வருடமும் 10 வயதுக்கு மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளை சென்னையின் எப்.சி அணி விளையாடும் ஐ.எஸ்.எல். போட்டிகளுக்கு அழைத்துச் செல்கிறது. 'உடல் மற்றும் மன ஆற்றலை வெளிக்கொண்டுவரவும், குழுவாக இணைந்து செயல்படவும் சொல்லித்தரும் மிகச்சிறந்த விளையாட்டு கால்பந்து. முதல்முறையாக கால்பந்து போட்டியை நேரில் பார்க்கும் பள்ளிக் குழந்தைகளின் மனதில் பசுமையான நினைவாக அது அமையப்போகிறது. தாங்களும் விளையாட்டு வீரராக ஆகவேண்டும் என்கிற எண்ணத்தை வளர்த்து, விளையாட்டுகளில் சிறுபிள்ளைகள் ஆர்வம்கொள்ள இந்த முயற்சி நிச்சயம் உதவும்' என்கிறது நிப்பான் பெயின்ட். கிட்டத்தட்ட 2000 குழந்தைகளை சென்னையின் எப்.சி.அணி ஆடும் ஆட்டத்துக்கு நிப்பான் பெயின்ட் அழைத்துச்செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.