Published:Updated:

வெற்றியின் வண்ணங்கள்! குழந்தைகளைக் கவர்ந்த நிப்பான் பெயின்ட்!

நிப்பான்
நிப்பான்

10 வயதிற்கு மேலுள்ள பள்ளிக் குழந்தைகளை ஆண்டுதோறும் சென்னையின் எப்.சி அணி விளையாடும் போட்டிகளுக்கு நிப்பான் பெயின்ட் அழைத்துச் சென்றுவருகிறது

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டியின் 6-வது சீஸன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த 42-வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான ஆட்டம்.. அதற்கு நடுவே காரசாரமான வாக்குவாதங்கள் என இரு அணிகளும் போட்டியை விறுவிறுப்பாக ஆடினர். முடிவில் சென்னை அணி, 3-1 என்ற கோல் கணக்கில் கேரளாவை வென்றது.

கோல் போடு!

சுவாரஸ்யமாக நடந்த இப்போட்டியை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். அதே சமயம் ஸ்டேடியத்தில் பார்வையாளர்களை ஒரு பெரிய ஆரவாரம் மெய்சிலிர்க்க வைத்தது. கால்பந்து ஆட்டத்தை முதன்முதலில் பார்வையிட்ட குழந்தைகளின் உற்சாகம் ததும்பிய குரலே அதற்குக் காரணம். அந்தக் குரல் ஒட்டுமொத்த ஸ்டேடியத்தையும் அதிர வைக்க காரணமாக இருந்தது நிப்பான் பெயின்ட். நிப்பான் பெயின்ட்டின் 'வெற்றியின் வண்ணங்கள்'.. கோல் போடு! என்கிற புதிய முயற்சி பள்ளிக்குழந்தைகளுக்கு இடையே விளையாட்டின் மீதான ஆர்வத்தையும், மதிப்பையும் வளர்க்க வழிவகுத்து வருகிறது.

10 வயதிற்கு மேலுள்ள பள்ளிக் குழந்தைகளை ஆண்டுதோறும் சென்னையின் எப்.சி அணி விளையாடும் போட்டிகளுக்கு நிப்பான் பெயின்ட் அழைத்துச் சென்றுவருகிறது. அவ்வாறு இந்த முறையும் சென்னையின் எப்.சி அணி விளையாடும் போட்டிக்குக் குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டனர். முதல் முதலாக போட்டியை நேரில் காணும் குழந்தைகள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார். சென்னை அணி போட்ட ஒவ்வொரு கோலும் குழந்தைகளை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.

நிப்பான்
நிப்பான்

தாக்கத்தை உண்டாக்கிய விளையாட்டு...

போட்டியை வரவேற்க ஆட்டத்தின் முன்பாக உற்சாகமூட்டும் வார்த்தைகளை பலகையில் தங்கள் கைப்பட குழந்தைகள் எழுதியிருந்தனர். அதில் ஒரு பலகையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் பட பாடலில் வரும் 'சும்மா கிழி' என்கிற வசனத்தை எழுதி, அதற்கு கீழ் சென்னையின் எப்.சி என்று ஒரு சிறுவன் எழுதியிருந்தது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.போட்டி குறித்து 11 வயது மாணவனான ரமேஷ் கூறுகையில், "இதுதான் நான் முதல் முதலாக பார்க்கும் விளையாட்டுப் போட்டி. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதைப் பார்த்ததும் நானும் புட்பால் விளையாட வேண்டும் என்று தோன்றுகிறது. நிப்பானுக்கு ரொம்ப தேங்க்ஸ்!" எனக் கூறினார். இதுபோல பல குழந்தைகளும் புட்பால் விளையாடப்போவதாக தெரிவித்தனர்.

"கால்பந்து போட்டியைப் பார்க்கும் குழந்தைகளின் மனதில் இது ஒரு பசுமையான நினைவாக அமையும். தவிர, தேசத்திற்காக விளையாட வேண்டுமென்கிற உணர்வையும் உண்டாக்கும். விளையாட்டின் மீதான ஆர்வத்தை குழந்தைகளின் மனதில் விதைக்க இம்முயற்சி உதவும்" என்கிறது நிப்பான் பெயின்ட். கிட்டத்தட்ட இரண்டாயிரம் குழந்தைகளை நிப்பான் பெயின்ட் கால்பந்து போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிப்பான் கிட்ஸ்!

குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு புதுவிதமான முயற்சியைக் கையாண்டு வரும் நிப்பான், அவர்களின் ஆரோக்கியத்தின் மீதும் அக்கறை கொண்டுள்ளது. அதற்காகவே நிப்பான் 'கிட்ஸ்' பெயின்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. குழந்தைகளின் நலன் காக்க பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இந்தப் பெயின்ட், நெடியில்லாத தன்மையுடையது. நச்சுக்கள் அல்லாத நிப்பானின் கிட்ஸ் பெயின்ட் நோய்த் தொற்றினை தடுக்கிறது. குழந்தைகளை ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் வைக்க நிப்பான் கிட்ஸ் பெயின்ட் பெற்றோருக்கு பெரிதும் உதவியாக அமைகிறது.

அடுத்த கட்டுரைக்கு