Election bannerElection banner
Published:Updated:

'நேர்மையே வெல்லும்!' நெல்லை 'நடராஜா ஸ்டோர்ஸ்' உறுதிமொழி

nippon
nippon

முதன்முதலில் நான் வேலைப் பார்த்த எஸ்.எஸ். நடராஜ நாடார் கடையில் நேர்மையைப் பறைசாற்றும் பத்து உறுதிமொழிகளைக் கடைப்பிடிப்பார்கள். அதுவே என் வியாபாரத்துக்கு அடித்தளமாக அமைந்தது!

'கலப்படம் செய்யமாட்டோம்; எடை குறையாமல் விற்போம்; கடத்தல், பதுக்கல், வரி ஏய்ப்பு செய்யமாட்டோம்; முறையான கணக்கு வைப்போம்; பொதுமக்கள் நன்மையைக் கருத்தில்கொள்வோம்;' - கடையினுள் நுழையும்போதே இவ்வாறான 10 உறுதிமொழிகள் தாங்கிய வித்தியாசமான பலகையோடு நம்மை வரவேற்கிறது திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள 'நடராஜா ஸ்டோர்ஸ்'. 'மக்களின் முழு நம்பிக்கையைப் பெறத் தங்களின் கட்டுக்கோப்பான வியாபார அணுகுமுறையே காரணம்' எனச் சிலாகிக்கிறார் நடராஜா ஸ்டோர்ஸ்'ன் உரிமையாளர் 'பிரகாஷ்' எனப்படும் பி. இரத்தின பிரகாசம்.

வெற்றிகரமாக செயலாற்றிவரும் நிப்பான் பெயின்ட் டீலர்கள் தங்களின் வியாபார அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் சிறப்புப் பகுதி இதுவாகும்...

நடராஜா ஸ்டோர்ஸ்-ன் வரலாறு...

"1960 களில், எங்கள் பூர்வீகமான சிவகாசியைவிட்டு திருநெல்வேலியில் குடிபெயர்ந்தோம். அப்பா பொன்னுசாமி, திருநெல்வேலி ஜில்லாவின் பிரபல டாக்டர் மற்றும் ஆசிரியர் ஆவார், நேர்மைக்கு பெயர் பெற்றவர். டாக்டர் குடும்பமாக இருந்தாலும் ஏழ்மையான குடும்பம்தான். பி.யூ.சி. படிக்கும்போதெல்லாம் எனக்கு ரெண்டு சட்டை, ஒரே பேண்ட்தான்! படிப்பில் ஆர்வம் மிகுந்த எனக்கு எம்.பி.ஏ. படிக்கவே ஆசை. ஆனாலும் 4 இளைய தங்கைகள் கொண்ட குடும்பம் என்பதால் வேலைக்குச் செல்லத் தீர்மானித்தேன் - திருநெல்வேலி எஸ்.எஸ். நடராஜ நாடார் (ஹார்டுவேர்ஸ் & பெயின்ட்ஸ்) ஃபர்மில் அப்ரண்டிஸ் வேலை, வருடம் 1979."

'நேர்மையே வெல்லும்!' நெல்லை 'நடராஜா ஸ்டோர்ஸ்' உறுதிமொழி

"இரண்டரை வருடத்துக்குப் பின் திருச்செந்தூர் ரோட்டில் பத்து சதுர அடி இடம் லீஸுக்கு வந்தது. அப்பாவின் சேமிப்பு மற்றும் இரண்டரை வருடங்கள் அப்ரண்டீஸாக நான் வேலைபார்த்ததற்கு கிடைத்த 3600 ரூபாய் பணத்தை வைத்து சிறிய ஹார்டுவேர்ஸ் & பெயிண்ட் கடையை ஆரம்பித்தேன், அதுதான் இன்று 'நடராஜா ஸ்டோர்ஸ்' ஆக வளர்ந்து நிற்கிறது... அப்போதெல்லாம் கடையில் பில் போட்டுவிட்டு, வாடிக்கையாளர் பின்னாலேயே சைக்கிளில் போய் பொருள்களை டெலிவரி செய்வோம், 14 மணி நேரம் உழைக்க வேண்டும், சிரமமான வேலைதான், ஆனால் அதிலும் ஒரு சுவாரசியம் இருந்தது... டாக்டராக இருந்தாலும், அக்கவுண்ட்ஸில் டிப்ளோமா படித்து, மறையும் வரை (1996) கடையின் அனைத்து கணக்குகளையும் கட்சிதமாக கவனித்துக்கொண்டவர் அப்பாதான்!"

கொள்கையும் ஊழியர்களுமே பலம்!

"முதன்முதலில் நான் வேலைப் பார்த்த எஸ்.எஸ். நடராஜ நாடார் கடையில் நேர்மையைப் பறைசாற்றும் பத்து உறுதிமொழிகளைக் கடைப்பிடிப்பார்கள். அதுவே என் வியாபாரத்துக்கு அடித்தளமாக அமைந்தது! 50 பைசா வாஷர் என்றாலும் பில் கொடுப்போம், வரி கட்டுவோம். சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழ்ந்திட நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும், அதை என் வாழ்வின் முக்கிய கொள்கையாகக் கொண்டுள்ளேன். இந்தக் கொள்கையை நம்பியே வாடிக்கையாளர்கள் நடராஜா ஸ்டோர்ஸுக்கு வருகிறார்கள். அடுத்து, எங்கள் ஸ்தாபனத்தின் தூண்களாக செயல்படுபவர்கள் ஊழியர்கள், வள்ளி நாயகமும் ஆத்திமணியும் 36 வருடங்களாகவும், இன்னும் மூன்று ஊழியர்கள் 30 வருடங்களாகவும் இங்கு வேலைப்பார்த்து வருகிறார்கள். ஊழியர்களின் துணை நடராஜா ஸ்டோர்ஸின் முக்கிய பலம்!"

'நேர்மையே வெல்லும்!' நெல்லை 'நடராஜா ஸ்டோர்ஸ்' உறுதிமொழி

"அப்பாவுக்கு அடுத்து என் வாழ்வில் மிகப்பெரிய துணையாக இருப்பவர் என் துணைவியார் வேல்விழி. வியாபாரத்தில் ஜெயிக்க நினைக்கும் ஒருவருக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவும் ஊக்கமும் கட்டாயம் வேண்டும், இதில் நான் கொடுத்து வைத்தவன். இப்போது தொழிலில் தோள் கொடுக்க மகன் பழனிவேல் ராஜாவும் நிர்வாகப் பொறுப்பில் இணைந்துள்ளார். பல புதிய யோசனைகளை செயல்படுத்தியும்வருகிறார்".

நிப்பான் சிநேகம்...

"பிரபல பெயின்ட் நிறுவனமொன்றின் டீலராக நாங்கள் செயல்பட்டுவந்த நிலையில், அவர்களுடன் சிறிய மனக்கசப்பு ஏற்படவே, வேறொரு நிறுவனத்தின் டீலராக மாறலாம் என எண்ணியிருந்த நேரம். அப்போதுதான் (2006) நிப்பான் பெயின்ட் இந்தியாவில் அறிமுகமாகியிருந்தது. தொடக்கத்தில் வெறும் ஆறே தயாரிப்புகள்தான் நிப்பானின் கைவசம் இருந்தது. இருப்பினும் நிப்பானின் கொள்கைகள் மற்றும் அப்போதைய சேல்ஸ் மேனேஜர்களின் அணுகுமுறை மிகவும் பிடித்துப் போனதால், ஒரு சோதனை முயற்சியாக நிப்பானின் டீலராக மாறினோம்."

"வியாபாரத்துக்கு நிப்பானின் 6 தயாரிப்புகள் போதவில்லை, ஆனாலும் வாடிக்கையாளர்கள் மற்றும் பெயின்டர்களோடு பலவாண்டுகாலமாக நான் வைத்திருந்த நல்லுறவு எனக்கு கைக்கொடுத்து உதவியது. கடைக்கு யார் வந்தாலும், அவர்களை உட்காரவைத்து நலம் விசாரித்து, அவரின் சொந்த வாழ்வைப் பற்றியெல்லாம் கேட்டு வைப்போம். அவர் வாங்க நினைப்பது ஒன்றாக இருப்பினும், விவரத்தைக் கேட்டு சிறந்த பொருளை மட்டுமே பரிந்துரை செய்வோம், அந்தத் தயாரிப்பு எங்கள் கடையில் இல்லை என்றாலும் வேறொரு கடையைப் பரிந்துரை செய்வோம். மீண்டும் அதே நபர் நம் கடைக்கு வரும்போது, அவரைப் பற்றிய விவரம் சொல்லி விசாரிக்கும்பட்சத்தில், அவருக்குக் கிடைக்கும் பரிட்சயமான உணர்வும், மகிழ்ச்சியுமே வியாபார வெற்றியின் மந்திரம். இப்படிச் சேர்த்த வாடிக்கையாளர் நல்லுறவாலும், சில வருடங்களிலேயே நிப்பான் கொண்டுவந்த சிறப்பான பல தயாரிப்பபுகளாலும் விற்பனை சிறப்புற்றது."

'நேர்மையே வெல்லும்!' நெல்லை 'நடராஜா ஸ்டோர்ஸ்' உறுதிமொழி

"நிப்பானுடன் கைக்கோத்த முதல் ஆண்டே பெரியளவில் வியாபாரம் செய்தோம், 24 மணி நேரத்தில் நிலுவைகளை செலுத்தும் எங்களின் பாணி அனைத்து தரப்பினரின் நன்மதிப்பையும் பெற்றுத் தந்தது.

ஒவ்வொரு வருடமும் சிறப்பான அளவு பெயின்ட் சேல்ஸ் செய்து இன்று 'கிளப் நிப்பான் செலக்ட்' எனப்படும் நிப்பானின் முக்கிய டீலராக இருக்கிறோம். நிப்பானின் ஆரம்பகால டீலர்களில் நாங்களும் ஒருவர் எனச் சொல்லிக்கொள்வதில் பெருமைகொள்கிறோம்."

போட்டிகளும் வருங்காலமும்...

"எம்.பி.ஏ. முடித்திருந்தாலும் குடும்பத்தொழிலில் ஈடுபடுவதையே மதிப்பாகக் கருதுகிறேன், இதில் ஒருவித நிம்மதி இருப்பதும் உண்மைதான். இன்றைய வியாபாரச் சூழலில் போட்டிகள் நிறைய இருக்கின்றன. அதைச் சமாளிக்க புதுமையான திட்டங்களை வகுத்துவருகிறோம். பொருள்களை மட்டும் விற்காமல் வாடிக்கையாளருக்கு அனுபவங்களை வழங்குகிறோம். அவர்களின் வீட்டுக்கு ஏற்ற நிறங்களை கம்ப்யூட்டரில் அமைத்துக் காட்டும் சேவை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் வாடிக்கையாளரின் தேவையை நன்கு அறிந்துகொள்ளமுடிகிறது. இதுதவிர வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலான ஷோரூம் வகை பெயின்ட் கடைகளையும் திறக்க ஆலோசனை செய்துவருகிறோம்" என்கிறார் பிரகாஷின் மகன் பழனிவேல் ராஜா.

திருநெல்வேலி பகுதியில் மிகச்சிறந்த டீலராக செயல்பட்டுவரும் நடராஜா ஸ்டோர்ஸ் தங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிய நிப்பான் பெயின்ட் நிறுவனத்துக்கு தங்களின் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு