Published:Updated:

தரைக்கு கிருமிநாசினி; அப்போது சுவர்களுக்கு? #NipponPaint

#NipponPaint
#NipponPaint

வெள்ளி, கிருமிநாசினி அம்சம் பொருந்திய உலோகமாகும். ஒருசில எலக்ட்ரான்கள் நீக்கப்பட்ட வெள்ளி அயான்கள் (Silver Ions), ஆக்ஸிடைசிங் சக்தி (Oxidizing Power) உடவையாக இருக்கின்றன

என்னதான் லாக் டவுனில் வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாய் இருக்கலாம் என்றாலும், சுய சுகாதாரத்தைப் பேணவில்லை என்றால் நம் கதி ‘பனால்’தான்! வருடத்துக்கு இத்தனைப் புடவை, சுடிதார், பேன்ட், சட்டை என்பதுபோக, இனி இத்தனை மாஸ்க் என எண்ணி வாங்க நேரிடலாம். ஆடைக்கு ஏற்ற கலரில் பேஷனாய் மாஸ்க் அணியும் வைபவம் எல்லாம் நிச்சயம் நடக்கத்தான் போகிறது! ஆபீஸுக்குப் போய் சிடுமூஞ்சி பாஸை நேரடியாகப் பார்க்காமல் வீட்டிலேயே வீற்றிருக்கலாம் என்ற அனுகூலம் இருந்தாலும், வீட்டுக்குள்ளேயே இருப்பது நல்லதுதானா? அதனால் நம்மை நாம் காத்துக்கொள்ள முடியுமா?

சுவர்களில் தொற்று...

இப்போதெல்லாம், பிள்ளையார் சுழி போட்டு மஞ்சள் பொடி ஒரு பாக்கெட் என்று எழுதியபின் அடுத்த ஐட்டாமாக மளிகை லிஸ்டில் இடம்பிடிப்பது என்னவோ ‘கிருமிநாசினி’தான். கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள சானிடைசர், தரையைத் துடைக்க கிருமிநாசினி இருக்கின்றன, ஆனால் நம்மைச் சுற்றியுள்ள சுவர்களைச் சுத்தம் செய்ய என்ன இருக்கிறது? மேற்பரப்புகள் மூலம் பலவகையான நோய்த்தொற்றுகள் பரவும் எனும்பட்சத்தில், நாம் தினமும் புழங்கும் அறைச் சுவர்களும் கிருமி எதிர்ப்பு அம்சம் கொண்டிருப்பது அவசியம்தானே?

#NipponPaint
#NipponPaint

ஒரே யோசனை, வருடக்கணக்கில் கவலை வேண்டாம்!

வீட்டின் சுவர்களுக்கு ஃபிரஷ்ஷான லுக் கொடுக்கையில் மறைமுகமாக பல நன்மைகளும் ஏற்படுகின்றன. வீட்டிற்குப் புதுமையான தோற்றம், மதிப்பு, தனித்துவம் போன்ற அம்சங்களை மட்டுமின்றி, நமக்கான பாதுகாப்பையும் பெயின்ட் மூலம் வழங்கமுடியும் என ஆச்சரியப்படுத்துகிறது நிப்பான் பெயின்ட் நிறுவனம்.

சில்வர் அயான் டெக்னாலஜி

வெள்ளி, கிருமிநாசினி அம்சம் பொருந்திய உலோகமாகும். ஒருசில எலக்ட்ரான்கள் நீக்கப்பட்ட வெள்ளி அயான்கள் (Silver Ions), ஆக்ஸிடைசிங் சக்தி (Oxidizing Power) உடவையாக இருக்கின்றன, எனவே தினசரி தொற்றுகளிலிருந்து காத்துக்கொள்ள வெள்ளி பயன்படுகிறது. மருத்துவமனையில் பயன்படும் பல அறுவை சிகிச்சைக் கருவிகள் வெள்ளியில் செய்யப்படுவதற்கான காரணமும் இதுதான்.

#NipponPaint
#NipponPaint

நிப்பான் பெயின்ட் கிட்ஸ்:

நிப்பான் பெயின்ட் நிறுவனத் தயாரிப்பான நிப்பான் பெயின்ட் கிட்ஸ் (Nippon Paint KIDZ)-ல் உள்ள சில்வர் அயான் தொழில்நுட்பம், தீங்கு விளைவிக்கும் கிருமிகள் & நோய்த்தொற்றுகளிலிருந்து 99.9% பாதுகாப்பு அளிக்கிறது. கிருமிகளின் மேற்பரப்பை ஊடுருவும் சில்வர் அயான்ஸ் அவற்றின் இயக்கத்தைத் தடுத்து நிறுத்தி அவற்றை அழிக்கின்றன, இதனால் பல தொற்றுகளில் இருந்து பாகுகாப்பு கிடைக்கிறது.

மிக மிகக் குறைந்தளவு கரிம ரசாயனங்கள், சிறந்த சுத்தம் செய்யும் தன்மை, வளவளப்பான பினிஷ் போன்ற அம்சங்களை நிப்பான்

பெயின்ட் 'கிட்ஸ் - ஆல் இன் ஒன்' பெயின்ட் கொண்டுள்ளது. 7 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்கக்கூடிய கிட்ஸ் பெயின்டை 10000 முறைகூட ஸ்க்ரப் செய்யலாம்! 100% முற்றிலும் நெடி இல்லாத பெயின்ட் என டாப் மார்க் வாங்குகிறது நிப்பான் பெயின்ட் கிட்ஸ்!

ஓடர்லெஸ் ஏர்கேர் (OdourLess Aircare) :

ஆக்டிவ் கார்பன் உடன் கூடிய ஆன்டி-ஃபார்மல்டிஹைட் தொழில்நுட்பம், ஆன்டி-பாக்டிரியல், மிக மிகக் குறைந்த அளவிலான விஓசி, மேன்மையான சுத்தம் & ஸ்க்ரப் தவிர்ப்பு, எக் ஷெல் பினிஷ் போன்ற அம்சங்கள் நிறைந்ததாக ஓடர்லெஸ் ஏர்கேர் பெயின்ட் உள்ளது. இ-கோலை (E.Coli), எம்.ஆர்.எஸ்.ஏ, ஸ்டெஃபிளோகாகஸ் ஆரியஸ் (Staphylococcus Aureus) போன்ற பாக்டீரியாக்களிடம் இருந்து பாதுகாப்பு, 6000 முறை ஸ்க்ரப் செய்தாலும் தாங்கிக்கொள்ளும் அம்சம் மற்றும் 6 வருடங்களுக்கு மேல் உழைக்கும் வாரண்டி ஆகியவை ஓடர்லெஸ் ஏர்கேர் பெயின்டின் சிறப்பம்சங்களாகும்.

#NipponPaint
#NipponPaint

காற்றைத் தூய்மைப்படுத்தும் சிறப்பம்சம்!

நிப்பான் பெயின்ட் கிட்ஸ் மற்றும் ஓடர்லெஸ் ஏர்கேர் பெயின்ட்டில் உள்ள முக்கிய சிறப்பம்சம் அவற்றின் 'ஆக்டிவ் கார்பன் தொழில்நுட்பம்'. காற்றில் உள்ள மாசுபடுத்தும் பொருளான ஃபார்மால்டிஹைடு உடன் இணைந்து அதனை நீர்த்துகள்களாக மாற்றும் ஆற்றல்கொண்டவை இந்தப் பெயின்டுகள். இதனால் அறையில் உள்ள காற்று தூய்மை அடைவதோடு, சுத்தமான பிராண வாயுவையும் நம்மால் சுவாசிக்க முடிகிறது. நம் மூளை சிறப்பாக செயல்படவும், நம் ஆரோக்கியம் மேம்படவும் இது உதவுகிறது.

சாட்டின் குளோ பெயின்ட்கள்...

இதேபோன்று நிப்பான் பெயின்டின் பிற தயாரிப்புகளான சாட்டின் குளோ பிரைம் (Satin Glo Prime) மற்றும் சாட்டின் குளோ+ (Satin Glo+) பெயின்ட்களும் ஆன்டி பாக்டீரியல் அம்சமும், 6 வருட வாரண்டியும் கொண்டவையாக இருக்கின்றன. மிட் ரேஞ்ச் ஷீன் ஃபினிஷ் பெற சாட்டின் குளோ+ மற்றும் உயர்தர ஷீன் ஃபினிஷ் பெற சாட்டின் குளோ பிரைம் பெயின்டைப் பயன்படுத்தலாம்.

சுவர்களைக் காக்க, ஆன்டி பாக்டீரியல் அம்சம் கொண்ட, சுற்றுச்சூழலுக்கு உகந்த நிப்பான் பெயின்டின் தயாரிப்புகளைப் பயன்படுத்துவோம். நோய்த்தொற்றுகளில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள நம்மால் ஆன அனைத்து வழிகளையும் பின்பற்றி இக்கட்டான இந்தச் சூழ்நிலையை வெல்வோம்!

அடுத்த கட்டுரைக்கு