Published:Updated:

நிப்பான் பெயிண்ட் இன் தமிழகத்தின் வண்ணக் குரல் இறுதிப்போட்டி; அமர்க்களப்படுத்திய பாடகர்கள்!

Sponsored content

பரபரப்பாக நடந்து முடிந்த தேர்வுச் சுற்றுக்களில் இருந்து முத்தான 16 பாடகர்கள் சென்னையில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்

Nippon
Nippon

ஜூலை மாதம் தொடங்கிய 'தமிழகத்தின் வண்ணக் குரலுக்கான' தேடல் இனிதே நிறைவேறியது...

'தமிழகத்தின் வண்ணக் குரல்' எனும் பாடகர்களுக்கான போட்டியை கடந்த ஜூலை மாதம் நிப்பான் பெயின்ட் நிறுவனம் அறிவித்திருந்தது. திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோவை மற்றும் சென்னை என 5 இடங்களில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்வுச் சுற்றுக்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடகர்கள் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். பரபரப்பாக நடந்து முடிந்த தேர்வுச் சுற்றுக்களில் இருந்து முத்தான 16 பாடகர்கள் சென்னையில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இறுதிப்போட்டி...

சென்னை விஜயா ஃபாரம் மாலில் ஆகஸ்ட் 18 மாலை இறுதிச்சுற்று நடத்தப்பட்டது. பிரபல பாடகர்கள் என்.எஸ்.கே.ரம்யா, காவ்யா அஜித் மற்றும் அஜீஷ் நடுவர்களாக இருக்க, இறுதி போட்டியாளர்கள் தங்களின் பாடல் திறமையைக் காட்டி அசத்தினர். மிகவும் சுவாரஸ்யமாகச் சென்ற இறுதிச்சுற்றின் முடிவில் மதுரையைச் சேர்ந்த 'தங்கவேலு சுபஹரி' மற்றும் திருச்சியைச் சேர்ந்த 'எம். அபய்' - இருவரும் வெற்றி பெற்றதாக நிப்பான் பெயின்ட் இந்தியாவின் பிரெசிடென்ட் மகேஷ் ஆனந்த் அறிவித்தார். வெற்றி பெற்ற இரு போட்டியாளர்களுக்கும் தலா 50,000 ரூபாய் ரொக்கப் பரிசை நிப்பான் பெயின்ட் வழங்குவது குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமல்லாது, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபல பாடல் நிகழ்ச்சியான 'சரிகமப சீனியர்ஸ் சீசன் 2'-வில் பாடுவதற்கான ஒரு வாய்ப்பையும் வெற்றியாளர்களுக்கு வழங்குகிறது நிப்பான் பெயின்ட் நிறுவனம்!