Published:Updated:

பெருங்குடி தீ விபத்து: அடுத்த கட்ட நடவடிக்கைகள்; அதிகாரிகள், சூழல் ஆர்வலர்கள் கருத்து!

பெருங்குடிக் குப்பைக் கிடங்கு

அனைத்து செயல்முறைகளின் மூலம் கழிவுகளைக் கொட்டுவதை நிறுத்தவும், திடக்கழிவு மேலாண்மை இயக்க விதிகள் 2016-ன்படி உலோகங்களைச் சுத்தப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பெருங்குடி தீ விபத்து: அடுத்த கட்ட நடவடிக்கைகள்; அதிகாரிகள், சூழல் ஆர்வலர்கள் கருத்து!

அனைத்து செயல்முறைகளின் மூலம் கழிவுகளைக் கொட்டுவதை நிறுத்தவும், திடக்கழிவு மேலாண்மை இயக்க விதிகள் 2016-ன்படி உலோகங்களைச் சுத்தப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Published:Updated:
பெருங்குடிக் குப்பைக் கிடங்கு

சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் கண்காணிக்கப்பட்டு வரும் பெருங்குடிக் குப்பைக் கிடங்கில், திடக்கழிவு மேலாண்மை விதிகள் மட்டுமின்றி அனைத்து சுற்றுச்சூழல் சட்டங்களும் மீறப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெருங்குடிக் குப்பைக் கிடங்கு
பெருங்குடிக் குப்பைக் கிடங்கு

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு சுயாதீன ஆய்வாளர்கள், குப்பைக் கிடங்கு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீரின் மாதிரிகளை ஆய்வு செய்தனர். நிலத்தடி நீரின் மாதிரிகளில் குரோமியம், கோபால்ட் மற்றும் சல்பைடுகள் உள்ளிட்ட கனரக உலோகங்கள் அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டது. கடலில் கலக்கும் கால்வாயில் வெளியேற்றப்படும் குப்பைத் தொட்டியின் சாயக்கழிவு சமீபத்தில் அடர் இளஞ்சிவப்பு நிறமாக மாறியுள்ளது. மேலும் தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் உப்புகளைக் கொட்டுவதனால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைத் தொடர்ந்து, குப்பைக் கிடங்கில் உலோகக் கழிவுகளைத் தேக்குவது சட்டவிரோதமானது என்றும் திடக்கழிவு மேலாண்மை விதிகளின் அனைத்து விதிமுறைகளும் மீறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது. இந்த நிகழ்வை அடுத்து நீண்ட கால உடல் ஆரோக்கிய பாதிப்பினை ஆய்வுசெய்யும் வகையில் பள்ளிக்கரணையில் அரசு மருத்துவ முகாம்களை அமைத்திருக்கிறது.

இப்பிரச்னை குறித்து சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் மகேசனிடம் பேசியபோது, “தற்போது பெருங்குடி தளம் முழுவதும் பயோமினிங் செயல்முறையால் சீரமைக்கப்பட உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சென்னை பெருநகர மாநகராட்சியானது பயோகாஸ் ஆலை, நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம், MRF மற்றும் RRC போன்ற பல்வேறு கழிவு சேகரிக்கும் மையங்களை நிறுவிவருகிறது. இதன் காரணமாகப் பெருங்குடிக்குக் கொண்டு செல்லப்படும் கழிவுகளின் அளவு வெகுவாகக் குறைந்துள்ளது. இதிலிருந்து மீதமுள்ள கழிவுகள் மட்டுமே பெருங்குடிக்குச் செல்கின்றன. இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளில் பெருங்குடிக்குச் செல்லும் கழிவுகள் முற்றிலும் நிறுத்தப்படும். பெருங்குடி தளம் சீரமைக்கப்பட்ட பிறகு நகர்ப்புற வனமாக உருவாக்கப்படும்” என்றார்.

பெருங்குடிக் குப்பைக் கிடங்கு
பெருங்குடிக் குப்பைக் கிடங்கு

கனரக உலோகங்கள் தேக்கம் குறித்து அவர் பேசியபோது, “மாநகராட்சி ஏற்கனவே லீச்ட் (leachate) சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளது. அவை தளத்திலிருந்து உருவாகும் கசிவுகளைச் சுத்திகரிக்கும், மேலும் சுத்திகரிப்பு செயல்பாட்டின்போது அனைத்து கன உலோகங்களும் அகற்றப்பட்டு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி சுத்திகரிக்கப்பட்ட நீர் வெளியிடப்படும். மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து செயல்முறைகளின் மூலம் கழிவுகளைக் கொட்டுவதை நிறுத்தவும், திடக்கழிவு மேலாண்மை இயக்க விதிகள் 2016-ன்படி உலோகங்களைச் சுத்தப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

இதுகுறித்து ‘பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜன் பேசும்போது, “நிக்கல் போன்ற உலோகங்களின் தேக்கம் அதிகமாக இப்பகுதியில் காணப்படுகிறது. இவை மனிதர்களின் நுரையீரலைப் பாதிப்படையச் செய்யும், மேலும் புற்றுநோய் பாதிப்பிற்கான அபாயங்களும் இதன் மூலம் நிகழலாம். இதுபோன்று கழிவுகள் தேகத்தை முக்கியமானதொரு கண்ணோட்டத்தில் நாம் பார்க்க வேண்டும். கனரக உலோக கழிவுகளைத் தேக்கம் செய்யாமல் அவைகளைச் சரியான முறையில் கையாள்வது அவசியமாகும்” என்றார்.

-சுபஸ்ரீ

(பயிற்சிப் பத்திரிகையாளர்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism