Published:Updated:

`ஸ்மார்ட் போன் வாங்கினால் வெங்காயம் இலவசம்!’- பட்டுக்கோட்டையில் அசத்தல் ஆஃபர்

ஸ்மார்ட் ஃபோன் வாங்கினால் வெங்காயம் இலவசம்
ஸ்மார்ட் ஃபோன் வாங்கினால் வெங்காயம் இலவசம்

பட்டுக்கோட்டை செல்போன் கடை ஒன்றில், ஸ்மார்ட் ஃபோன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என அறிவித்து, அதை செயல்படுத்தி வருகிறது.

பட்டுக்கோட்டை செல்போன் கடை ஒன்றில், ஆண்ட்ராய்ட் மொபைல் வாங்குபவர்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் இலவசமாகத் தரப்படுதிறது. இந்தச் செயல், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் வைரலாகப் பரவிருகிறது.

`ஸ்மார்ட் போன் வாங்கினால் வெங்காயம் இலவசம்!’- பட்டுக்கோட்டையில் அசத்தல் ஆஃபர்

வெங்காய விலை உயர்வுபற்றிதான் தற்போது இந்தியா முழுவதிலும் ஒரே பேச்சாக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் அளவிற்கு வெங்காயத்தின் விலை எகிறியுள்ளது. விலையை கட்டுப்படுத்தக் கோரி எதிர்கட்சி எம்.பி-க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மீம் கிரியேட்டர்களும் வெங்காய விலை உயர்வை வைத்து நகைச்சுவையாக, தங்கத்திற்கு இணையாக மீம்களை உருவாக்கி சமூக வலைதளத்தில் பரப்புகின்றனர். இந்த நிலையில், பட்டுக்கோட்டை செல்போன் கடை ஒன்றில், ஸ்மார்ட் ஃபோன் வாங்கினால், ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என அறிவித்து அதை செயல்படுத்திவருகிறது.

`ஸ்மார்ட் போன் வாங்கினால் வெங்காயம் இலவசம்!’- பட்டுக்கோட்டையில் அசத்தல் ஆஃபர்

பட்டுக்கோட்டையை அடுத்த செம்பாளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணக்குமார். இவர், கடந்த 8 ஆண்டுகளாக பட்டுக்கோட்டை தலையாரி தெருவில், எஸ்.டி.ஆர்.,மொபைல் என்கிற பெயரில் செல்போன் கடை நடத்திவருகிறார். இவர், தனது கடையில் ஆண்ட்ராய்டு மொபைல் போன் வாங்குபவர்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் இலவசமாகத் தருகிறார். இதற்காகத் தனது கடை முன்பு வெங்காய படத்துடன் செல்போன் இருப்பது போன்ற போர்டும் வைத்துள்ளார். இதைப் பார்க்கும் பலரும் கடைக்கு உள்ளே சென்று விசாரித்துவிட்டு சிரித்த முகத்துடன் செல்கின்றனர்.

இதுகுறித்து சரவணகுமாரிடம் பேசினோம், ``தற்போது வெங்காய விலை உயர்வுபற்றிதான் ஒரே பேச்சாக உள்ளது. இதைப் பற்றி வெளிவரும் மீம்ஸ்களும் பெரிய வரவேற்பைப் பெறுகின்றன. இவை என்னை யோசிக்கவைத்ததுடன் ஆண்ட்ராய்டு மொபைல் வாங்குபவர்களுருக்கு வெங்காயம் இலவசமாகத் தரலாம் என்ற எண்ணம் வந்தது. உடனே, கடந்த 3 நாள்களுக்கு முன் இதுகுறித்து கடைக்கு முன் விளம்பர போர்டு வைத்தேன்.

`ஸ்மார்ட் போன் வாங்கினால் வெங்காயம் இலவசம்!’- பட்டுக்கோட்டையில் அசத்தல் ஆஃபர்

இதற்கு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த விளம்பரத்தைப் பார்த்த அனைவரும் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவச் செய்தனர். நான் 1 கிலோ எடை கொண்ட வெங்காயத்தை பார்சல் செய்து வைத்துள்ளேன். வாடிக்கையாளர்கள் மொபைல் வாங்கினால், ஒரு கிலோ வெங்காயத்தைக் கொடுக்கிறேன். அவர்களும் மகிழ்ச்சியாக வாங்கிச் செல்கிறார்கள்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு