Published:Updated:

அடேயப்பா, விவசாயத்தில் இவ்வளவு வாய்ப்புகளா! பிளஸ் 2 மாணவர்களுக்கு...

MIT - CAT
MIT - CAT

விவசாயப் பொருள்களை மதிப்புக்கூட்டி வணிகப் பொருள்களாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்பு காத்திருக்கிறது.

+2 முடிச்சாச்சு... இன்ஜினியரிங், கலை & அறிவியல், பொருளாதாரம், சட்டம்... இப்படிப் பொதுவான துறைகளில் சேர இப்போவே காலேஜ் ஃபார்ம் வாங்கத் தயாராகிக் கொண்டிருப்போம்! அதற்கு முன் விவசாயத்துறையில் மாணவர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறதென்று தெரிந்துகொள்வோமா?!

மனிதன் உணவு உண்ணும் வரை, விவசாயத்துறை இருக்கும்!

* வேளாண் அலுவலர் மற்றும் உதவி அலுவலர், விவசாயக் கடன் அலுவலர் போன்ற மாநில விவசாயத்துறை சார்ந்த அரசுப் பணிகள் காத்திருக்கின்றன.

* உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கும் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு.

* விவசாய உபகரணங்கள் உற்பத்தி நிறுவனங்கள், விதை உற்பத்தி நிலையங்கள், உணவு பதனிடும் ஆலைகள், தனியார் விவசாய எஸ்டேட்டுகள் போன்றவற்றில் பணிகள்.

* வேளாண்மை படிப்புக்கேற்ற வங்கித் தேர்வுகள் எழுதலாம்.

* ஐஏஎஸ் ஆக விரும்பும் மாணவர்களுக்கு வேளாண்மை படிப்பு நல்ல தேர்வு.

* பண்ணை, மீன் வளர்ப்பு, பால் உற்பத்தி, காளான் உற்பத்தி, தேனீ வளர்ப்பு, உரம் தயாரித்தல் மற்றும் விற்பனை போன்ற சுயதொழில் செய்வதற்கு வங்கிகள் மற்றும் நபார்டு அமைப்பின் மூலம் பலதரப்பட்ட தொழிற்கடன்கள் வழங்கப்படுகின்றன.

MIT - CAT
MIT - CAT

* விவசாயப் பொருள்களை மதிப்புக்கூட்டி வணிகப் பொருள்களாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்பு காத்திருக்கிறது. இதற்கான பயிற்சி மற்றும் கடன் உதவிகளை அரசின் வேளாண்துறை, தனியார் விவசாய நிறுவனங்கள் மற்றும் வேளாண் கல்லூரிகள் வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

* 'அக்ரி கிளினிக்' வைத்து விவசாயிகளுக்குப் பயிர் மேலாண்மை, நோய்த்தொற்று மற்றும் விவசாய ஆலோசனைகளை வழங்கலாம்.

* எம் எஸ் சி அக்ரி படித்தவர்கள் வேளாண் கல்லூரிகளில் ஆசிரியராக சேர முடியும்.

MIT - CAT
MIT - CAT

* ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வேளாண் விஞ்ஞானியாக உயரலாம்!

உழவு செய்வது மட்டுமே அல்லாமல், இவ்வாறு பல அமோகமான வாய்ப்புகளையும் அளிக்கக்கூடியதுதான் வேளாண் படிப்பு!

எங்கு படிக்கலாம்?

திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள எம்ஐடி கல்வி நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வருவது எம்ஐடி வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (MIT CAT).

MIT - CAT
MIT - CAT

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தக் கல்லூரி, நான்கு வருட படிப்பான பி எஸ் சி அக்ரி, இரண்டு வருட படிப்புகளான வேளாண் டிப்ளமோ மற்றும் தோட்டக்கலை டிப்ளமோ ஆகிய படிப்புகளை வழங்குகிறது.

விவசாயத்தில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு நல்ல முறையில் வேளாண் பாடங்களை வழங்குவதோடு டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி, வங்கித் தேர்வுகள் மற்றும் ஐ சி ஏ ஆர் தேர்வுகளுக்கான பயிற்சிகளையும் வழங்கிவருகிறது எம்ஐடி வேளாண் கல்லூரி.

மாணவர்களுக்கு வளாகத் தேர்வு மூலம் வேலைவாய்ப்பு பெற்றத்தருவதில் பலவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

MIT - CAT
MIT - CAT

110 ஏக்கர் விவசாய நிலம், விவசாய சோதனைக் கூடங்கள், வானிலை ஆய்வு மையம், மிகப்பெரும் நூலகம், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை போன்ற பல அம்சங்கள் எம்ஐடி வேளாண் கல்லூரிக்கு பலம் சேர்க்கின்றன.

எம்ஐடி’யின் பிற கல்வி நிறுவனங்கள்:

* பெண்களுக்கான கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

* பெண்களுக்கான ஆசிரியர் பயிற்சி கல்வி மையம்

* பாலிடெக்னிக் கல்லூரி

* எம்ஐடி ஹெல்த் சயின்சஸ் கல்லூரி.

* எம்ஐடி போதி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி.

விகடன் வாசகர்களுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை காத்திருக்கிறது! மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.

எம்ஐடி கல்வி நிறுவனங்களில் வேளாண் படிப்பு மற்றும் இதர படிப்புகளில் சேர விண்ணப்பிக்க/ மேலும் தகவல்களைப் பெற இந்த https://www.vikatan.com/special/mit-cat லிங்கிற்குச் சென்று தேவையான தகவல்களை இப்போதே வழங்குங்கள்.

அடுத்த கட்டுரைக்கு