Published:Updated:

பெயின்ட் விற்பனையில் பிரகாசிக்கும் சிவகாசி 'ராக்கெட்'!

நிப்பான்
நிப்பான்

நிப்பான் பெயின்டை முதல் முறை வீட்டுக்கு அடிப்பவர்களுக்கு இலவச சாம்பிள் தந்து வீட்டில் ஒரு பகுதியை பெயின்ட் செய்து தருவோம்.

சிவகாசியைச் சேர்ந்தவர் எஸ்.ஜி.செந்தில்குமார், கடந்த பத்து வருடங்களாக 'பி.எஸ்.கே. தர்மராஜ் நாடார் & சன்ஸ்' எனும் தனது ஹார்டுவேர்ஸ் & பெயின்ட் கடையை நடத்தி வருகிறார். நாள்தோறும் எவ்வளவு சரக்கு கொள்முதல் செய்யப்படுகிறது, எவ்வளவு விற்பனையாகிறது, இருப்பில் இருப்பவை யாவை? யாரிடமிருந்து பணம் வரவேண்டியுள்ளது? எத்தனை 'செக்' இன்று நம்மிடமிருந்து செல்ல வேண்டும்? சரக்கு டெலிவரி முறையாக நடந்ததா?... இப்படி அணுதினமும் பல விஷயங்களைக் கருத்தில்கொண்டு செயல்பட்டு வியாபாரத்தில் தாம் பெற்றுள்ள வெற்றி குறித்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் செந்தில்குமார்.

இது, மிகச்சிறப்பாக செயலாற்றி வரும் நிப்பான் பெயின்ட் டீலர்கள், தங்கள் அனுபவங்களைப் பதிவு செய்யும் சிறப்புப் பகுதியாகும்...

பட்டாசு தெறிக்கும் சிவகாசியிலே...

படபட பட்டாசு தொழிற்சாலைகளும், தடதட அச்சு எந்திரங்களும் நிறைந்த சிவகாசியின், விருதுநகர் - சிவகாசி சாலையில் பயணித்து, காமக் சாலையைப் பிடித்தால், நிப்பான் பெயின்ட் சின்னத்தைத் தாங்கி பளிச்சென நிற்கிறது பி.எஸ்.கே. தர்மராஜ் நாடார் & சன்ஸ்’ ஹார்டுவேர்ஸ் அண்டு பெயின்ட் நிறுவனம்.

நிப்பான்
நிப்பான்

“எங்கள் குடும்பம் ஒரு தொழில் குடும்பம், அம்மாவின் அப்பாவான ‘பி.எஸ்.கே. தர்மராஜ் நாடார்’ பெயரில் என் தாய்மாமா பார்த்து வந்த ஹார்டுவேர்ஸ் கடையில் கல்லூரிப் படிப்பை முடித்ததுமே வேலைக்குச் சேர்ந்துவிட்டேன், வருடம் சரியாக 1991. அப்போது சிவகாசியில் அச்சுத் தொழில் மிகப் பிரசித்தி, என் அண்ணனுக்கு அச்சில் வேலை, எனக்கு ஹார்ட்வேர்ஸ் என அப்போதே என் பெற்றோர் முடிவுசெய்துவிட்டனர். தொழிலில் நல்ல தேர்ச்சி பெற்ற பிறகு 2008 ஆம் ஆண்டு முதல் காமக் சாலையில் புதிய கடை ஆரம்பித்து நிர்வகித்து வருகிறேன்” எனத் தன் பயணத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார் எஸ்.ஜி.செந்தில் குமார்.

“2009ல், ‘நிப்பான் பெயின்ட்’ நிறுவனத்தின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அப்போது நிப்பான் மிகக்குறைந்த அளவிலான பெயின்ட்களை மட்டுமே இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. பலவகையான பெயின்ட் தயாரிப்புகளைக் கொண்ட புகழ்பெற்ற பெயின்ட் நிறுவனங்கள் பல இருந்தபோதிலும், நிப்பான் பெயின்டிற்கு நல்ல எதிர்காலம் உண்டு என எனக்கு ஊக்கம் அளித்தவர்கள் எனது நெருங்கிய நண்பர் சுரேஷ் மற்றும் ரத்தின பிரகாஷ் எனும் மற்றொரு பெரிய நிப்பான் டீலரும்தான்!”

“எந்தத் தொழில் செய்தாலும், நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருக்க வேண்டும், நம் தொழிலோடு சம்பந்தப்பட்டவர்களிடம் எப்போதும் அன்பான உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைப்பவன் நான். இதனால் வாடிக்கையாக என்னிடம் பெயின்ட் வாங்கும் பெயின்டர்கள் அனைவரும், என் கடையையே மற்றவர்களுக்குப் பரிந்துரை செய்தனர். இதற்கிடையில் நிப்பான் பெயின்ட்டும் அருமையான பல புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்திவர, வியாபாரம் சிறப்புற்றது!”

நிப்பான்
நிப்பான்

வியாபார நுணுக்கங்கள்...

“நிப்பான் பெயின்டை முதல் முறை வீட்டுக்கு அடிப்பவர்களுக்கு இலவச சாம்பிள் தந்து வீட்டில் ஒரு பகுதியை பெயின்ட் செய்து தருவோம். சாம்பிள் பார்த்த மறுநாளே கையில் ஆர்டர் கிடைத்துவிடும், இது நிப்பானின் தரத்துக்கு ஒரு சான்று. இதுதவிர, தயாரிப்புடன் சேர்ந்து, பைகள், காலண்டர், சுவர் கடிகாரம், குடை, டார்ச் லைட் எனப் பல இலவசப் பொருள்களை வழங்குவதால் மக்களும் மகிழ்ச்சியடைகின்றனர். குறிப்பாக நிப்பான் பிளாபி பொம்மையைக் கொடுத்தால் குழந்தைகளுக்கு கொண்டாட்டம்தான்! இதுபோல என் நெட்வர்க்கில் இருக்கும் பெயின்டர்களை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்கிறேன். எனக்கு வேலை தரும் அவர்களுக்கு என்னால் ஆன சிறிய கைம்மாறு இது.”

“சிவகாசி பகுதியின் சாட்சியாபுரம், ரிசர்வ் லைன், சித்தராஜபுரம், சசி நகர், பழனி ஆண்டவர்புரம் போன்ற பகுதிகளில் பி.எஸ்.கே. தர்மராஜ் நாடார் & சன்ஸ் புகழ்பெற மற்றுமொரு காரணம், எங்களின் இலவச சரக்கு டெலிவரியாகும். ஆர்டர் செய்த பெயின்ட்களை சொன்ன நேரத்துக்கு, சொன்ன இடத்தில் பெற்றுக்கொள்ளலாம்!”.

தடைகளை மீறித்தான் ஜெயிக்க முடியும்!

“என்னுடன் இணைந்து, என் மனைவி எஸ். தீபாவும் வியாபாரத்தைக் கவனித்துக்கொள்கிறார். நிர்வாகம், விற்பனை மற்றும் கணக்கு வழக்குகளில் உதவுகிறார். தவிர ஊக்கமான ஊழியர்களும் கடைக்குக் கிடைத்திருப்பது என் அனுகூலம்.”

அடுத்த கட்டுரைக்கு