Published:Updated:

வீடு வாங்கணுமா? 'பம்மல்' சூப்பர் சாய்ஸ்!

பிரசித்தி பெற்ற அப்பாஸ்வாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் 'தி ப்ளூமிங்டேல்' புராஜெக்ட்' பம்மல் ஷங்கர் நகர் பகுதியில் இரண்டு கட்டங்களாக எழுப்பப்பட்டு வருகிறது.

Appaswamy real estates
Appaswamy real estates

சென்னை விமான நிலையம், தாம்பரம் இரயில் நிலையம், தாம்பரம் புறநகர்ப் பேருந்து நிலையம் இவையனைத்தும் மிக அருகில் இருக்கும் இடத்தை என்ன சொல்வது? வளர்ச்சியின் அடையாளம் எனலாம்தானே? ஆம். நாம் சொல்லவரும் இடம் பரபரப்பாக வளர்ந்து வரும் சென்னையின் புறநகர்ப் பகுதியான 'பம்மல்'தான். தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், அழகான திருநீர்மலை - இந்த இடங்களுக்கு இடையே அமைந்திருக்கும் பம்மல் பகுதிதான் சொந்த வீடு வங்கத் துடிக்கும் சென்னை வாசிகளின் தற்போதைய ஹாட் டார்கெட். தாம்பரத்துக்கு மிக அருகில் எனச் சொல்லி தஞ்சாவூர் வரை அழைத்துச்செல்லும் புராஜெக்டுகளுக்கு நடுவில் நிஜமாகவே தாம்பரம் அருகில் உள்ள பம்மல் பகுதியில் அமைந்திருக்கிறது 'தி ப்ளூமிங்டேல்' (The Bloomingdale) அப்பார்ட்மெண்ட்ஸ்!

பம்மல் - சிறப்பான லொகேஷன்!

சங்கர வித்யாலயா, அன்னை வேளாங்கண்ணி பள்ளி, நாடார் சங்கப் பள்ளி, மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி, விமான நிலையம், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள், கோவில்கள், ஏடிஎம், உணவகங்கள் என பலதரப்பட்ட தேவைகளை அருகாமையில் கொண்ட இடமாக பம்மல் பகுதி விளங்குகிறது. பம்மல் பிரதான சாலை, பல்லாவரம், குன்றத்தூர் மற்றும் பூந்தமல்லி பகுதிகளை இணைக்கிறது. 3 கி.மி. தொலைவில் விமான நிலையத்தின் அருகில் மெட்ரோ இரயில் நிலையம் இருக்கிறது, மெட்ரோ பணிகள் பல்லாவரம் பகுதிக்கு நீட்டிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலை, பம்மல் பகுதியை ஓ.எம்.ஆர். மற்றும் ஈ.சி.ஆர். சாலையுடன் இணைக்கிறது.

28.57 லட்ச ரூபாயில் வீடுகள்...

Appaswamy real estates
Appaswamy real estates

பிரசித்தி பெற்ற அப்பாஸ்வாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் 'தி ப்ளூமிங்டேல்' புராஜெக்ட்' பம்மல் ஷங்கர் நகர் பகுதியில் இரண்டு கட்டங்களாக எழுப்பப்பட்டு வருகிறது. இதில் Phase 1-ல் ஏற்கனவே 360 வீடுகளில் மக்கள் குடுயேறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மிக விரைவில் முடியவுல்ல Phase 2-ல் குடியேறுவதற்கான பதிவுகள் நடைபெற்றுவருகின்றன. தி ப்ளூமிங்டேல் அப்பார்ட்மென்ட்ஸ் ஒரு கேட்டட் கம்யூனிட்டி ஆகும். 7.1 ஏக்கர் விஸ்தாரமான பரப்பளவில் மொத்தமாக 776 குடியிருப்புகள் வரவுள்ளன. 635 முதல் 1552 சதுர அடி வரை தாராளமான 2BHK மற்றும் 3BHK வீடுகள் இதில் அடங்குகின்றன. இவை ரூ. 28.57 லட்சம் முதல் ரூ. 69.84 லட்சம் மதிப்பிலான வீடுகள் ஆகும்.

நம் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சூப்பர் மார்க்கெட், ரெஸ்டாரண்ட், மருந்தகம், ஸ்விம்மிங் பூல், யோகா டெக், கெஸ்ட் ரூம்ஸ், ஃபிட்னஸ் சென்டர், ஏரோபிக்ஸ் சென்டர், 2 பார்ட்டி ஹால் மற்றும் மினி தியேட்டர் என ஒரு கேட்டட் கம்யூனிட்டிக்கு ஏற்ற அனைத்து சொகுசு அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது தி ப்ளூமிங்டேல். இதில் 30,000 சதுர அடியில் எழுப்பப்பட்டுள்ள கிளப் ஹவுஸ் இந்தப் புராஜெக்டின் முக்கிய அம்சமாக திகழ்கிறது! தொடர்ந்த வாட்டர் சப்ளை, நிலத்தடி நீர், கிணறுகள் மற்றும் மழை நீர் சேகரிப்பு இருப்பதால் எந்நேரமும் தேவையான நீர் இங்கு கிடைக்கிறது.

குழந்தைகளுக்கு விளையாட்டுத் திடல், ரெட்டிகுலேட்டட் கேஸ் (Reticulated Gas), லிஃப்ட்ஸ், 100% பவர் பேக் அப், டிரைவர்/பணியாட்களுக்கு கழிவறைகள், தோட்டங்கள் என தேவையான அனைத்தையும் வழங்கி அசத்துகிறது அப்பாஸ்வாமியின் தி ப்ளூமிங்டேல்! இது தவிர இந்த வளாகத்துக்கு மிக அருகிலேயே அலுவலகங்கள் அடங்கிய அப்பாஸ்வாமியின் கமர்ஷியல் பிளாக் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. பம்மலை ஒட்டிய பகுதியில் பிசினஸ் தொடங்க விரும்புவோருக்கு, அலுவலகமும் வீடும் ஒரே இடத்தில் கிடைப்பது மிகவும் அனுகூலமான வாய்ப்பாகும்!

Appaswamy real estates
Appaswamy real estates

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வீடு வாங்க நினைக்கும் யாவருக்கும் இந்தத் திட்டம் மிகச் சிறந்த வாய்ப்பாகும். மிகவும் அமைதியான, நட்புறவான சுற்றுச்சூழலில், சொகுசான பல்வேறு அம்சங்கள் அடங்கிய வளாகத்தில் ஸ்டைலிஷ் ஆன 2 BHK & 3 BHK வீடுகளை வாங்க ஏற்ற இடமாகத் திகழ்கிறது தி ப்ளூமிங்டேல்! முதல் முறை வீடு வாங்குவோருக்கு, 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் மூலம் வீட்டுக் கடனில் 6.5% வரை வட்டியில் மானியம் தந்து அரசு உதவி செய்வது குறிப்பிடத்தக்கது. இதனால் நம் பணமும் மிச்சமாகிறது!

தி ப்ளூமிங்டேலில் வீடு வாங்க விருப்பமுள்ளோர், மேலும் தகவல்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.