Published:Updated:

சம்பளம் 4000; மகளின் சிகிச்சைக்குத் தேவையோ 10 லட்சம்!

sponsored content
sponsored content

மழை வரும்போது குமாரி அதைக்கண்டு மகிழ்வதில்லை. தன் பெற்றோரால் தன்னைக் காப்பாற்ற முடியாது என்கிற விரக்தியே அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக கொன்றுகொண்டிருக்கிறது.

கைலாஷ் வேலையில் இருந்து வீடு திரும்ப தினமும் இரவு பத்து மணி இரயிலைப் பிடித்தாக வேண்டும். மிகவும் கனமான சுமைகளை சுமந்துகொண்டு தினம் தினம் ரயிலில் பயணம் செய்து கூலி வேலைக்குச் செல்கிறார். கடுமையான உடல் வலியையும் பொருட்படுத்தாமல் அதிகாலையிலேயே வீட்டை விட்டு கைலாஷ் கிளம்பிவிடுவார், இப்போதெல்லாம் ஒரு நாள் கூட ஓய்வெடுப்பதில்லை, எங்காவது கூடுதல் வேலை கிடைக்குமா என நினைக்கிறார், காரணம் தன் மகள் குமாரியின் உயிரைக் காப்பாற்றிவிட வேண்டும் என்கிற ஒரே எண்ணம்தான்!

கைலாஷ் - காஞ்சன் தம்பதியின் ஒரே மகள் குமாரி லட்சுமி, வயது 14. சத்தீஸ்கர் மாநிலம் ஜிஜாய்பூர் எனும் கிராமத்தில் அமைதியாய் வாழ்ந்துவந்தது இக்குடும்பம். ஏழைப் பெற்றோரின் ஒரே சொத்து அவர்களின் மகள் குமாரி. மகளை நன்றாக படிக்க வைத்துவிட வேண்டும், அவள் கேட்டது எதையும் அவளுக்குக் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களின் ஆசையாக இருந்தது. குமாரிக்கு மழை என்றால் பிரியம். மழை பெய்யும்போதெல்லாம் அம்மாவையும் அழைத்துக்கொண்டு மழையில் நீண்ட தூரம் நடப்பது அவளின் வழக்கம். மாலை அப்பா வீடு திரும்பியதும், மழை பற்றிப் பேசிக் குதூகலிப்பாள்.

சம்பளம் 4000; மகளின் சிகிச்சைக்குத் தேவையோ 10 லட்சம்!

2018, மார்ச் மாதம், குமாரிக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது, டாக்டர் தந்த மருந்துகளை உண்டும் எந்தப் பயனும் இல்லை. திடீரென்று குமாரிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவளுக்கு இதுபோல் ஏற்படுவது இதுவே முதன்முறை என்பதால், தங்கள் குழந்தைக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் பெற்றோர்பதறினர். பின் நிலைமை சிறிது சீராக, ஒரு நண்பரின் அலையோசனையின் படி குமாரியை சென்னைக்கு அழைத்துவந்தனர். முதல்முறை சென்னை போன்ற பெருநகரத்துக்கு வந்திருப்பதால், இங்கு அவர்களுக்கு வழிகாட்ட யாருமின்றி பரிதவித்தனர். ஓர் இரவு முழுக்க இரயில் நிலயித்திலேயே படுத்துக் கிடந்தனர்.

மறுநாள் குமாரியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றதும், அவளுக்கு பலதரப்பட்ட பரிசோதனை நடத்தப்பட்டது. வெள்ளந்தியாய், மகள் குணமாகிவிடுவாளா, மருந்து வாங்கும் அளவுக்கு காசு போதுமா, என்கிற எண்ணத்தோடும், டாக்டர் என்னே சொல்லப்போகிறார் என்கிற எதிர்பார்ப்போடும்இருந்தனர் காஞ்சனும் கைலாஷும். இறுதியாக டாக்டர் இருவரையும் அழைத்தார், குமாரிக்கு இக்கட்டான பல இருதயப் பிரச்னைகள் இருப்பதாய் கூறினார். அவர் கூறிய மருத்துவப் பெயர்கள் எதுவும் இருவருக்கும் விளங்கவில்லை. காஞ்சன் கேட்ட ஒரே கேள்வி, " என் மகள் குணமாகிவிடுவாளா?" என்பதுதான்!

அதன்பின் பல பேரிடம் கடன் வாங்கி குமாரிக்கு மருந்துகளை அளித்து வந்தனர். அவளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்பட்டது. மாதங்கள் சில கடந்தன. ஆனால், இது நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை, ஒருநாள் காஞ்சனுக்கு மீண்டும் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மீண்டும் மகளை அழைத்துக்கொண்டு சென்னைக்கு விரைந்தனர். இனி மருந்துகளால் பயனில்லை, இருதய அறுவை சிகிச்சை செய்து பேஸ் மேக்கர் கருவி (complex biventricular repair with pacemaker) பொருத்தினால் மட்டுமே குமாரியின் உயிரைக் காப்பாற்ற முடியும் என டாக்டர்கள் கூறிவிட்டனர்.

சம்பளம் 4000; மகளின் சிகிச்சைக்குத் தேவையோ 10 லட்சம்!

அறுவை சிகிச்சை செய்ய 10 லட்ச ரூபாய் பணம் தேவைப்படுகிறது. ஆனால் கைலாஷ் ஓய்வின்றி ஓடியாடி சம்பாதிக்கும் தொகை, மாதத்துக்கு ரூபாய் நான்கு ஆயிரத்தைத் தாண்டாது. மகளின் நிலைமைக்குத் தங்களின் வறுமையே காரணமாகிவிட்டதை எண்ணி எண்ணி நெஞ்சம் கலங்கி நிற்கின்றனர் இந்தப் பெற்றோர். யாரிடம் கடன் கேட்டாலும், 'இவ்வளவு பெரிய தொகையை இவர்கள் எப்படி திருப்பித் தருவார்கள்?' என எண்ணியே யாரும் இவர்களுக்கு உதவ முன்வருவதில்லை...

இப்போதெல்லாம் மழை வரும்போது குமாரி அதைக்கண்டு மகிழ்வதில்லை. தன் பெற்றோரால் தன்னைக் காப்பாற்ற முடியாது என்கிற விரக்தியே அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக கொன்றுகொண்டிருக்கிறது.

கைலாஷ் - காஞ்சனின் ஒரே மகளை மீட்டுத் தர நம்மால் இயலும். குமாரியின் அறுவை சிகிச்சைக்குத் தேவையான நிதிக்கு நம் பங்காக நம்மால் இயன்றதைத் தயங்காது கொடுப்போம். https://www.ketto.org/stories/supportlaxmin?utm_campaign=supportlaxmin&utm_medium=position_1&utm_source=external_vikatan இந்த லிங்கிற்குச் சென்று இப்போதே உதவி செய்யலாம், குமாரியின் உயிரைக் காப்பாற்றலாம்!

சம்பளம் 4000; மகளின் சிகிச்சைக்குத் தேவையோ 10 லட்சம்!

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை Ketto-வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும் வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளவும்.

அடுத்த கட்டுரைக்கு