Published:Updated:

இனி கிச்சனை விட்டுப்போக மனசே வராது! ப்ரீத்தி கிச்சன் சொல்யூஷன்ஸ்...

ப்ரீத்தி ஸோடியாக் மிக்ஸர் கிரைண்டர்
ப்ரீத்தி ஸோடியாக் மிக்ஸர் கிரைண்டர்

ப்ரீத்தி ஸோடியாக் மிக்ஸர் கிரைண்டர் அறிமுகம் செய்யப்பட்டபோது, மிக்ஸர் கிரைண்டர் வகைகளிலேயே வியக்கத்தக்க புதுமையான தயாரிப்பாக அது கருதப்பட்டது.

கிச்சன் பொருள்கள் என்றவுடனே பெரும்பாலானோருக்கு நிச்சயமாக ஒரு பிராண்ட் நினைவுக்கு வந்திருக்கும், அதுதான் நம்ம 'ப்ரீத்தி!' தினசரி வாழ்க்கையை எளிதாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றியமைக்கும் சமையலறை சாதனங்கள் மூலம் லட்சக்கணக்கான இந்தியப் பெண்களின் மனதில் நிலையான இடம்பிடித்திருக்கும் ப்ரீத்தி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் முதன்மை வகித்து வருகிறது. பல்வேறு தயாரிப்புகளின் மூலம் சூப்பர் பிராண்டாக திகழும் ப்ரீத்தி, இந்திய மக்களின் மாறுபட்ட தேவைகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்றபடி கச்சிதமான தயாரிப்புகளை வழங்கி வருகிறது.

நேற்று நம் பாட்டியும் அம்மாவும் சமைத்த கிச்சன், இன்றோ முற்றிலும் மாறிவிட்டது!

வேலைக்குச் செல்வதற்கு முன்பு தனது குடும்பத்திற்காக காலையிலேயே மதிய உணவை சமைக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் மனைவிமார்கள், அலுவலகத்திற்கு எடுத்துச் செல்ல வீட்டிலேயே ஜூஸ் தயாரிக்க நினைக்கும் ஃபிட்னெஸ் விரும்பிகள், சமையல் வேலையைச் 'சட்'டென்று முடிக்க நினைப்பவர்கள் அல்லது ஒவ்வோர் இரவும் 'கேஸ் ஸ்டவ்வுக்குக் கீழே கிச்சன் கவுண்ட்டரை சுத்தம் செய்ய எளிதான தீர்வு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணும் எத்தனையோ பேர் என்று வெவ்வேறு நபர்களின் வெவ்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ப்ரீத்தியின் கிச்சன் சாதனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தேவைகள் அனைத்தும் பூர்த்தி, அதுதான் ப்ரீத்தி!

ப்ரீத்தி ஸோடியாக் மிக்ஸர் கிரைண்டர் அறிமுகம் செய்யப்பட்டபோது, மிக்ஸர் கிரைண்டர் வகைகளிலேயே வியக்கத்தக்க புதுமையான தயாரிப்பாக அது கருதப்பட்டது. ஸ்டோரேஜ், ஜூஸிங், டைசிங் மற்றும் கிரைண்டிங் என அனைத்து சமையல் பணிகளையும் ஆற்றலும் அழகும் ஒருசேர்ந்த இந்தப் ப்ரீத்தி மிக்ஸியில் திறம்பட செய்ய முடியும். சமையலுக்கான நேரத்தை மிச்சப்படுத்தி, சுவையைக்கூட்டி சமையலையே சுவையான அனுபவமாக மாற்றியுள்ளது ப்ரீத்தி ஸோடியாக்!

72% செயல்திறன் கொண்ட ப்ரீத்தி கேஸ் ஸ்டவ், எரிவாயுவை மிச்சப்படுத்த உதவுகிறது. நூற்றாண்டு காலமாக, தினசரி சமையலறையை சுத்தம் செய்யும் அலுப்பான பணியிலிருந்து பெண்களைக் காப்பற்றிய பெருமை ப்ரீத்தியின் இந்தக் கேஸ் ஸ்டவ்வையே சேரும். கேஸ் ஸ்டவ்களில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட இதன் 'டிரிப் டிரே (Drip Tray)' எனும் புதுமை, கிச்சன் சுத்தம் செய்வதை எளிமையாக்கி ஒரு புரட்சியையே செய்துவிட்டது!

வாடிக்கையாளர்களின் கருத்துகளுக்கு மதிப்பு...

இந்திய சமையல் மற்றும் இந்திய இல்லத்தரசிகளின் தேவைகள் மிகவும் தனிப்பட்டவை. இதை நன்றாக புரிந்துகொண்டுள்ளது ப்ரீத்தி. சென்னை, திருவள்ளூர், மங்களூர் அல்லது மும்பை என எந்த ஊரையும் விட்டுவைக்காமல், மாமியார், மருமகள், தம்பதிகள், பேச்சிலர்ஸ் என ஒரு விரிவான ஆய்வை நடத்தி, அதன்மூலம் தங்களின் சாதனங்களின் வடிவைப்பில் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது ப்ரீத்தி. இந்த மெனக்கெடல் இருப்பதால்தான் சிரமமான சமையல் வேலையும் இன்று எளிதான, இனிய அனுபவமாக மாறியிருக்கிறது!

வித்தியாசமான கண்டுபிடிப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவை குறித்த தெளிவான புரிந்துகொள்ளல் மூலம் தொடர்ந்து இத்துறையில் முதன்மை வகித்து வருகிறது ப்ரீத்தி. நம்பிக்கை, தொலைநோக்குப் பார்வை, செயல்திறன் மற்றும் அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம், இவைதான் ப்ரீத்தியின் அசைக்கமுடியாத பலம்!

'ப்ரீத்திக்கு நாங்க கேரண்டி!'

இந்தப் பிராண்டை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் எடுத்துச்சென்று பிரபலப்படுத்தியிருக்கின்ற வினியோகஸ்தர்கள் இவர்களின் மிகப்பெரிய பலமாகத் திகழ்கின்றனர். 'எதிர்காலத்தை நோக்கி மனஉறுதியுடன் பயணிக்கின்ற இத்தருணத்தில் வாடிக்கையாளர்களது கருத்துகளுக்கு செவிமடுத்து, அவர்களுக்குப் பயனளிக்கும் குறிக்கோளோடு தயாரிப்புகளை உருவாக்குவதையும், புதிய முயற்சிகளில் ஈடுபடுவதையும் ப்ரீத்தி தொடர்ந்து செய்யும்; சமையல் கலையை அனைவருக்கும் வியப்பானதாக, ஆனந்தமானதாக ஆக்குகின்ற ஸ்மார்ட்டான சமையலறைத் தீர்வுகள் மூலம் இத்துறையில் தொடர்ந்து முன்னிலை வகிப்போம் என்பதில் சந்தேகமில்லை!' என்கிறது ப்ரீத்தி.

அடுத்த கட்டுரைக்கு