Published:Updated:

ஆட்டோபைலட் மோடில் ஓடிய டெஸ்லா; காரிலேயே பிறந்த 'டெஸ்லா பேபி'!

Tesla
News
Tesla

டெஸ்லா காரிலேயே இந்த குழந்தை பிறந்ததால் 'டெஸ்லா பேபி' என இந்தக் குழந்தையைச் செல்லமாக அழைக்கின்றனர்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் ஒரு பெண்ணுக்கு காரில் பிரசவம் நடைபெற்றிருக்கிறது. அந்த மாகாணத்தில் ஃபிலடெல்பியா நகரில் வசித்து வருபவர் யிரன் ஷெர்ரி (Yiran Sherry) என்னும் பெண்மணி நிறைமாத கர்ப்பமாக இருந்திருக்கிறார். இவர் தன்னுடைய மூன்று வயது மகனைப் பள்ளியில் விடுவதற்காக தன் கணவர் கேட்டிங் ஷெர்ரியுடன் (Keating sherry) காரில் சென்ற போது திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அந்த சமயத்தில் அவர்கள் வாகன நெரிசலில் வேறு மாட்டி இருந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்திருக்கின்றனர். நேரம் ஆக ஆக வலி அதிகரித்ததுடன் வண்டியும் மெதுவாகவே நகர்ந்தது. மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் செல்ல முடியுமா என்பது தெரியாத சூழலில், வேறு வழியின்றி அருகிலுள்ள மருத்துவமனைக்குக் காரை ஆட்டோபைலட் மோடில் செட் செய்து விட்டு கேட்டிங் தன் மனைவியைக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறார். காரின் முன் சீட்டில் அமர்ந்தபடியே யிரன் குழந்தையைப் பிரசவிக்கத் தொடங்கியிருக்கிறார். ஆட்டோபைலட் மோடில் இருந்த அவர்களுடைய கார் தானாகவே மருத்துவமனையை அடைந்த போது யிரன் தன்னுடைய மகளைப் பெற்றெடுத்திருக்கிறார்.

டெஸ்லா ஆட்டோ பைலட்
டெஸ்லா ஆட்டோ பைலட்

மருத்துவமனையை அடைந்ததும், செவிலியர்கள் காருக்கே வந்து முதலுதவி செய்து யிரனையும், அவரது மகளையும் வரவேற்றிருக்கின்றனர். டெஸ்லா காரிலேயே இந்த குழந்தை பிறந்ததால் 'டெஸ்லா பேபி' என இந்தக் குழந்தையைச் செல்லமாக அழைக்கின்றனர். டெஸ்லா காரில் பிறந்ததால் இந்த தம்பதியும் முதலில் தங்கள் மகளுக்கு 'டெஸ்' எனப் பெயர் வைக்க எண்ணி, பின்னர் லில்லி என பெயர் சூட்டியிருக்கிறார்கள். ஆட்டோபைலட் மோடை வடிவமைத்த டெஸ்லா பொறியாளர்களுக்கு கேட்டிங் தன்னுடைய நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
டெஸ்லா கார்
டெஸ்லா கார்

டெஸ்லா கார்களில் 'ஆட்டோ பைலட்' என்னும் வசதி உள்ளது. இந்த ஆட்டோ பைலட் மோடில், நாம் போக வேண்டிய இடம் குறித்த விவரத்தை நேவிகேஷனில் செட் செய்துவிட்டால் போதும், நாம் கார் ஓட்ட தேவையே இல்லை. கார் உரிய இடத்திற்குத் தானாகச் சென்றுவிடும். ஆனால் இது எந்த அளவிற்கு நம்முடைய அன்றாட வாழ்வுக்கு ஒத்து வரும் என்பது குறித்து அந்தத் தொழில்நுட்பத்தின் மேல் கேள்விகள் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இப்படியான ஒரு நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. மேலும், கொஞ்சக் காலமாகவே தொடர்ந்து எதிர்மறையான செய்திகளிலேயே டெஸ்லாவின் நிறுவனத்தின் பெயர் அடிபட்டுக் கொண்டிருக்க, இந்த நிகழ்வு டெஸ்லாவுக்கு ஒரு நற்செய்தியாக அமைந்திருக்கிறது.